ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவும் உணவுகளை வெளியிட்ட விஞ்ஞானிகள்.. அது என்னென்ன?

Male Fertility In Tamil: தற்போதைய அவசரமான உலகில் நாம் உண்ணும் உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை போன்றவற்றால் உடலுறுப்புக்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, ஒருவரது கருவுறுதல் திறனும் மோசமான பாதிக்கப்படுகிறது.

ஏனெனில் முந்தைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் நன்கு கடினமாக உழைத்தார்கள் மற்றும் நல்ல சத்தான ஆகாரங்களை உட்கொண்டு வந்தார்கள். இதனால் அவர்கள் நீண்ட காலம் நோயின்றி வாழ்ந்ததோடு, ஏராளமான குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.

Scientist Reveals Which Foods May Help Boost Male Fertility In Tamil

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கவே பல பிரச்சனைகளை சந்திக்கிறோம். இதற்கு நவீன வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான். ஏனெனில் இவற்றில் தான் தற்போது பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நாம் உண்ணும் உணவுகள் நமது கருவுறும் திறனில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

மோனாஷ் பல்கலைகழக ஆய்வு

அட்வான்சஸ் இன் நியூட்ரிஷன் இதழில் மோனாஷ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்ள ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. அந்த ஆய்வில் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட வகை உணவுகளை இரண்டு கையளவு உட்கொள்வது ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை கணிசமாக மேம்படுவதை ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவும் அந்த உணவுகளில் அப்படி என்ன சக்தி வாய்ந்த சத்து உள்ளது என்பதையும், அந்த ஆராய்ச்சியாளர்கள் விரிவாக கூறியுள்ளனர்.

இந்த ஆய்வு குறித்து மோனாஷ் பல்கலைகழகத்தின் ஊட்டச்சத்து, உணவுமுறை மற்றும் உணவுத் துறையின் ஆராய்ச்சியாளரும், ஆய்வின் முதல் ஆசிரியருமான பார்பரா கார்டோசோ விரிவாக கூறுகையில், உலகளவில் கருத்தரிக்கும் வயதுடைய 6-ல் ஒருவர் கருத்தரிக்க முடியாமல் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுவதாக கூறினார். இப்படி கருத்தரிக்க முடியாமல் இருப்பவர்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வகையில் பல தொழில்நுட்பங்கள், சிகிச்சைகள் இருந்தாலும், அவை விலை உயர்ந்தவை மற்றும் அனைவராலும் அவற்றை பயன்படுத்த முடியாது.

பழங்கள் மற்றும் காய்கறிகளின் தாக்கம்..

முந்தைய ஆய்வில் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவுகளை உண்பது அதிக விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதுடன் இணைத்து கூறப்பட்டன. ஆனால் இவற்றைத் தவிர இன்னும் பிற உணவுகள் ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்திக்கு உதவலாம், முக்கியமாக நட்ஸ்கள் உதவக்கூடும் என்று பார்பரா கூறினார்.

விந்தணுக்களை அதிகரிக்கும் நட்ஸ்

நட்ஸ்களில் பல வகைகள் உள்ளன. மேலும் அவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், பாலிஃபீனால்கள் போன்றவை அதகம் உள்ளன. இச்சத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் ஆண்களின் கருவுறுதலில் முக்கிய பங்கை அளிக்கக்கூடும் என நம்புவதாக பார்பரா தெரிவித்துள்ளார்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலம்

குறிப்பாக வால்நட்ஸ் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை உயர்த்துவதன் தொடர்புடையவை. ஏனெனில் இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. பல ஆய்வுகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் விந்தணுக்களின் தரம், செயல்பாடு மற்றும் உற்பத்தியை மேம்படுத்துவதுடன் இணைத்து கூறப்பட்டுள்ளன.

எப்படியென்றால், இந்த கொழுப்பு அமிலங்கள் விந்தணுக்களின் சவ்வின் திரவத்தை ஆதரிக்கவும், கருமுட்டையுடன் விந்தணுக்கள் இணைவதை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மீன்களிலும ஏராளமான அளவில் உள்ளது. எனவே நட்ஸ் அழற்சி உள்ளவர்கள் மீன்களை உட்கொள்வதன் மூலம் இச்சத்தைப் பெறலாம்.

223 ஆரோக்கியமான ஆண்களைக் கொண்ட ஆய்வு

மோனாஷ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், 18 முதல் 35 வயதிற்குட்பட்ட சுமார் 223 ஆரோக்கியமான ஆண்களைக் கொண்டு ஆய்வு செய்தது. அதில் தினமும் குறைந்தது 2 கையளவு நட்ஸ் சாப்பிட்ட ஆண்களின் விந்தணுக்களின் தரம் மேம்பட்டு இருப்பது தெரிய வந்தது.

அதுவும் இந்த சோதனையில் பங்கேற்றவர்கள் தங்களின் வழக்கமான உணவுகளுடன், கூடுதலாக நட்ஸ்களை உட்கொண்டு வந்துள்ளனர். இந்த சிறு மாற்றம் அவர்களின் விந்தணுக்களின் உற்பத்தி மற்றும் தரத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளது. இதுப்போன்ற முடிவுகள் பெண்களிடமும் காணப்படுமா என்பது தெரியவில்லை என்றும் பார்பரா தெரிவித்துள்ளார்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, December 11, 2023, 12:47 [IST]
Desktop Bottom Promotion