Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
உணவை மெதுவாக சமைத்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Slow Cooking Benefits In Tamil: இன்றைய அவசர உலகில் நாம் தினமும் துரித உணவுகளை சாப்பிடவே விரும்புகிறோம். ஆனால் உணவை அதீத தீயில் வைத்து சமைக்கும் போது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களில் இழப்பு ஏற்படுகிறது. எனவே உணவை நீங்கள் மெதுவாக சமைக்கும் போது நிறைய நன்மைகளை நீங்கள் பெறலாம். க்ரோக்பாட் அல்லது மெதுவான குக்கரை நீங்கள் பயன்படுத்தி வரலாம்.
இந்த மெதுவான குக்கரில் நீங்கள் அனைத்து பொருட்களையும் சேர்த்த பிறகு சமைத்து சாப்பிடலாம். இது உங்களுக்கு அதிகப்படியான சுவையை தரும். இது ஒரு ஆரோக்கியமான உணவாகும். உணவில் இருந்து ஊட்டச்சத்து இழப்பை தடுக்க உதவுகிறது. சரி வாங்க, உணவை மெதுவாக சமைப்பதால் எந்த மாதிரியான நன்மைகளை நாம் பெறலாம் என அறிந்து கொள்வோம்.

மெதுவான குக்கரின் வரலாறு
1971 ஆம் ஆண்டில் ஸ்லோ குக்கர்கள் (மெதுவான குக்கர்கள்) ரைவல் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில் பீன் குக்கர்கள் மெதுவான குக்கர்களுக்கு முன்னோடியாக உள்ளது. இந்த ஸ்லோ குக்கரின் உட்புறம் மெதுவாக பிரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை எளிதாக பிரித்து சுத்தம் செய்ய முடியும். சில உணவுகளை சுவையுடன் சமைக்க மெதுவான குக்கர்கள் உதவுகின்றன. இது உங்கள் நேரத்தையும் மிச்சப்படுத்த உதவுகிறது. உங்கள் உணவுகளை எளிதாக காலை மற்றும் வேலை நாட்களில் கூட சமைத்து சாப்பிட முடியும்.
உணவை மெதுவாக சமைப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கும்
உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை இழக்காமல் சமைப்பது மிகவும் அவசியம். அதிலும் காய்கறிகள் போன்ற உணவுகளில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் காணப்படுகிறது. நீங்கள் உணவை வேகமாக சமைக்கும் போது இந்த ஊட்டச்சத்துக்கள் இழப்பு ஏற்படுகிறது. எனவே கடினமான இறைச்சி துண்டுகளை சமைக்கும் போதும் மெதுவாக சமைப்பது மிகவும் அவசியம். இதன் மூலம் இறைச்சி துண்டுகளில் கலோரி உள்ளடக்கத்தையும் ஒட்டுமொத்த கொழுப்பையும் குறைக்க முடியும்.
ஊட்டச்சத்து இழப்பு கிடையாது
வேகமாக சமைக்கும் போதோ அல்லது அதீத தீயில் சமைக்கும் போது உணவில் உள்ள வைட்டமின்கள் உடைய நேரிடுகின்றன. உதாரணமாக காய்கறிகளில் உள்ள லைகோபீன்கள் போன்ற சத்துக்கள் உடைகின்றன. எனவே இதை தடுக்க மெதுவாக சமைக்கும் முறை உதவுகிறது. மெதுவாக சமைக்கும் முறையில் கொதித்தல் அல்லது வேகவைத்தல் முறைகள் மூலம் பல ஊட்டச்சத்துக்களை அழிக்க முடியாது. இது ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெற உதவுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை கட்டுப்படுத்துதல்
இந்த மெதுவான சமைக்கும் முறையை பயன்படுத்தி பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதை குறைக்கலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதை குறைப்பதன் மூலம் கொழுப்பு, சோடியம் மற்றும் கலோரிகளின் நுகர்வு குறைகிறது. கடைகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்குவதற்கு பதிலாக உங்கள் வீட்டிலேயே இந்த மெதுவான சமைக்கும் முறையில் சமைத்து சாப்பிடலாம். உங்களுக்கு பிடித்த வறுவல், சூப்கள் மற்றும் இனிப்பு வகைகளை செய்து சாப்பிடலாம்.
எவ்வளவு நேரம் மெதுவான குக்கரில் சமைக்க வேண்டும்?
ஒரு உணவை சமைக்க வழக்கமாக எடுத்துக் கொண்டால்,
15 முதல் 30 நிமிடங்கள்: 4 - 6 மணி நேரம் குறைந்த தீயில் அல்லது 1 முதல் 2 மணி நேரம் வரை அதிகமான தீயில் சமைக்க வேண்டும்.
30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை: குறைந்த நேரத்தில் 5 - 7 மணி நேரம் அல்லது அதிக அளவில் 2 - 3 மணி நேரம் வரை சமைக்க வேண்டும்.
1 முதல் 2 மணிநேரம்: 6 - 8 மணிநேரம் குறைந்த அல்லது 3 - 4 மணிநேரம் அதிகமாக சமைக்கவும்
2 முதல் 4 மணி நேரம்: 8 - 12 மணி நேரம் குறைந்த அல்லது 4 - 6 மணி நேரம் அதிகமாக சமைக்கவும்.
இறைச்சி மற்றும் பிற காய்கறிகளை விட வேர் காய்கறிகளாக இருந்தால் சமைக்க அதிக நேரம் எடுக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உணவு பாதுகாப்பு
ஸ்லோ குக்கரை வாங்கும் போது சரியான ஒன்றை பார்த்து வாங்க வேண்டும். உணவின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் இருக்க வேண்டும். சரியான பிராண்ட் பெயரில் வாங்குவது மிகவும் அவசியம். நீங்கள் எத்தனை நபர்களுக்கு சமைக்க போகிறீர்கள் என்பதைப் பொருத்து பெரிய மற்றும் நடுத்தர அளவில் ஸ்லோ குக்கர்கள் கிடைக்கின்றன. பெரும்பாலான ஸ்லோ குக்கரின் உட்புறம் பீங்கான் அமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications