Latest Updates
-
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம்
Rajinikanth Birthday: 75 வயதிலும் ரஜினிகாந்த் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க..
Rajinikanth Birthday: சூப்பர் ஸ்டார், தலைவர் என்றதுமே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது ரஜினிகாந்த் அவர்கள் தான். தமிழ் சினிமாவின் ஐகானான ரஜினிகாந்த் டிசம்பர் 12, அதாவது இன்று தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இவ்வளவு வயதாகியும் ரஜினிகாந்த் மிகவும் சுறுசுறுப்பாகவும், ஃபிட்டான உடலுடனும் இருக்க காரணம் அவரது உணவுப் பழக்கம் தான். ஆம், ரஜினிகாந்த் உணவு விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருப்பாராம். முக்கியமாக இவர் இவ்வளவு ஃபிட்டாக இருக்க 5 விதமான வெள்ளை உணவுகளை தவிர்ப்பது தான் காரணம் என்று நிகழ்ச்சி ஒன்றிலும் தெரிவித்துள்ளார்.

சென்னை, கிரீம்ஸ் சாலை, அப்பல்லோ மருத்துவமனை மற்றும் நுங்கம்பாக்கத்தில் உள்ள மெரினாஸ் கிளினிக்கின் ஆலோசகர் லேப்ராஸ்கோபிக் மற்றும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ப்ரீத்தி மிருணாளினி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினிகாந்த் அவர்களின் ஃபிட்னஸ் ரகசியமான உணவுமுறை குறித்த நுண்ணறிவைப் பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் கூறியதாவது, "ரஜினிகாந்த் அவர்கள் சர்க்கரை, உப்பு, மைதா, பால் மற்றும் தயிர் போன்ற 5 வெள்ளை உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் 74 வயதிலும் ஃபிட்டாக உள்ளார். இந்த வகை உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் போது அது வீக்கம், இன்சுலின் அதிகரிப்பு, அமிலத்தன்மை மற்றும் குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே இவரது ஃபிட்னஸ் ரகசியம் , சுத்தமான உணவுமுறை, தினசரி உடற்பயிற்சி மற்றும் தியானம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் டாக்டர் மிருணாளினி அவர்கள் இந்த 5 விதமான வெள்ளை உணவுகள் எப்படி ஒருவரது ஆரோக்கியத்தை சீரழிக்கிறது என்பது குறித்தும் விளக்கியிருந்தார்.
1. வெள்ளை சர்க்கரை
"சர்க்கரையானது வயிற்றில் கொழுப்பு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் பசியுணர்வை அதிகரிக்கிறது. எனவே இந்த சர்க்கரையை எவ்வளவு சீக்கிரம் உணவில் சேர்ப்பதை தவிர்க்கிறீர்களோ, அவ்வளவு நல்லது" என்று டாக்டர் கூறியிருந்தார்.
2. உப்பு
"சுவைக்காக உணவில் சேர்க்கும் உப்பை அளவாக உட்கொள்ளாமல் இருந்தால், அது வயிற்று வீக்கம், நீர் கோர்வை மற்றும் உயர் இரத்த அழுத்தம் கூட வரலாம்" என்று டாக்டர் மிருணாலினி குறிப்பிட்டிருந்தார். எனவே இதுவரை உணவில் உப்பை குறைக்காமல் இருந்தால், உடனே குறைத்துக் கொள்ளுங்கள்.
3. வெள்ளை சாதம்
"வெள்ளை சாதத்தை காய்கறிகளுடன் சேர்த்து மிதமான அளவில் உட்கொண்டால், பிரச்சனை ஏதும் இல்லை. இல்லாவிட்டால் உடல் எடையானது ஜெட் வேகத்தில் அதிகரிக்கும்" என்று டாக்டர் கூறியிருந்தார்.
4. மைதா
"வெள்ளை சாதத்திலாவது சிறிது நார்ச்சத்து உள்ளது. ஆனால் மைதாவில் முற்றிலும் வெற்று கலோரிகள் தான் உள்ளது. எனவே இதை உட்கொண்டால் உடல் பருமனாவது உறுதி" என்று டாக்டர் மிருணாலினி கூறியிருந்தார்.
5. பால் பொருட்கள்
"பால் பொருட்களான பால், தயிர், வெண்ணெய் போன்ற பொருட்களில் கால்சியம் மற்றும் புரோட்டீன் வளமான அளவில் நிறைந்துள்ளன. ஆனால் 40 வயதிற்கு மேல் உடலின் மெட்டபாலிசம் குறைய தொடங்குவதால், இந்த வகை உணவுகளை அதிகமாக உட்கொண்டால் வயிற்று வீக்கம் மற்றும் உடல் பருமனுக்கு தான் வழிவகுக்கும்" என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! எவ்வளவு வயதானாலும் சுத்தமான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி மற்றும் தியானத்துடன் இணைந்த ஒரு ஒழுக்கமான வாழ்க்கை முறையை யார் பின்பற்றினாலும், நடிகர் ரஜினிகாந்த் போன்றே 75 வயதானாலும் ஸ்டைலாக நடனமாடலாம் மற்றும் ஃபிட்டாகவும் இருக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











