தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிடுவீங்களா? அப்ப இந்த நோய் உங்களுக்கு வர வாய்ப்பிருக்கு.. உஷார்...

Oats Side Effects In Tamil: ஓட்ஸ் மிகவும் பிரபலமான மற்றும் ஆரோக்கியமான காலை உணவு. ஏனெனில் ஓட்ஸில் நார்ச்சத்து மட்டுமின்றி பல்வேறு அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்துள்ளன. முக்கியமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போரின் மத்தியில் ஓட்ஸ் மிகவும் பிரபலமான உணவாகும். ஓட்ஸ் உடல் எடையைக் குறைப்போருக்கு மட்டுமின்றி, சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது.

சமீப காலமாக நிறைய பேர் தங்களின் தினசரி காலை உணவாக இந்த ஓட்ஸை உட்கொள்கிறார்கள். இதுவரை இட்லி, தோசையை காலை உணவாக உட்கொண்டு வந்து, திடீரென்று ஓட்ஸை உட்கொள்கிறோமே, உண்மையில் ஓட்ஸை தினமும் காலை உணவாக உட்கொள்ளலாமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழலாம். ஓட்ஸ் ஆரோக்கியமான உணவு தான். ஆனால் ஓட்ஸ் அனைவருக்குமே ஏற்றதாக இருக்காது.

Oats Side Effects: Reasons Why You Should Not Eat Oats Everyday In Tamil

நீங்கள் உங்கள் தினசரி உணவில் ஓட்ஸை சேர்க்க நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் ஓட்ஸை தினமும் உட்கொண்டால் எந்த மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதாவது ஓட்ஸின் பக்க விளைவுகளை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். கீழே தினமும் ஓட்ஸை சாப்பிட்டால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்

ஓட்ஸில் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. இது செரிமான செயல்முறையை மெதுவாக்கி, வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கும். உங்களுக்கு ஏற்கனவே இரைப்பை பிரச்சனைகள் இருந்தால், முதலில் குறைவான அளவில் ஓட்ஸை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

ஏனெனில் ஓட்ஸில் உள்ள க்ளுக்கோஸ், ஸ்டார்ச் மற்றும் நார்ச்சத்து போன்றவை பெருங்குடல் மற்றும் சிறுகுடலில் உள்ள பாக்டீரியாக்களால் உட்கொள்ளப்பட்டு, வாய்வு தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றை வரவழைக்கும். ஆகவே தினமும் ஓட்ஸை சாப்பிட நினைத்தால், இதை நினைவில் கொள்ளுங்கள்.

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தசை இழப்பு

ஓட்ஸ் உடல் எடையைக் குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது. இதனால் எடையைக் குறைக்க நினைப்போர் பலரும் ஓட்ஸை அதிகமாக தங்களின் உணவில் சேர்ப்பார்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக அல்லது தினமும் ஓட்ஸை உட்கொண்டால், அது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தசை இழப்பை உண்டாக்கும்.

ஏனெனில் ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். இதன் விளைவாக நாள் முழுவதும் எந்த உணவுகளையும் உட்கொள்ள ஆர்வம் எழாமல், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். இது தவிர ஓட்ஸை மட்டும் உட்கொள்வது நினைவாற்றல் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும் மற்றும் விழிப்புணர்வைக் குறைக்கும்.

இரத்த சர்க்கரையை அதிகரிக்கும்

ஓட்ஸில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் இருந்தாலும், இது இரத்த சர்க்கரையின் அளவை சட்டென அதிகரிக்க செய்யும். அதுவும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, இரத்த சர்க்கரை உடனே அதிகரிக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இப்படி உட்கொள்வது ஆபத்தானது.

எப்போதுமே சர்க்கரை நோயாளிகள் சீரான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுவும் அனைத்துவிதமான சத்துக்களும் அடங்கியவாறான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அப்படி உட்கொண்டால் தான் அது நன்மை விளைவிக்கும்.

ஆனால் ஓட்ஸ் சாப்பிட நினைக்கும் பலரும் அதை இனிப்பாக சாப்பிட நினைக்கிறார்கள். இப்படி ஓட்ஸ் உடன் சர்க்கரை, சாக்லேட் சிப்ஸ் மற்றும் பிற இனிப்புக்களை சேர்த்து உட்கொண்டால், ஓட்ஸில் உள்ள சத்துக்கள் குறைந்து, கலோரிகள், சர்க்கரை, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகரித்து, ஆரோக்கியத்தை சீரழித்து இல்லாத சர்க்கரை நோயை வரவழைத்துவிடும். எனவே ஒட்ஸை சாப்பிட சிறந்த வழி என்றால் அது வெஜிடேபிள் ஓட்ஸ் தான்.

வெறும் ஓட்ஸை மட்டும் உண்பது நல்லதல்ல

ஓட்ஸை காலை உணவாக உட்கொள்ளும் போது, அது உடலுக்கு ஆற்றலையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. ஆனால் இப்படி தினமும் காலையில் வெறும் ஓட்ஸை மட்டுமே உட்கொள்வது என்பது சரியான யோசனை அல்ல. எப்போதுமே எந்த ஒரு உணவுப் பொருளையுமே அளவாக உட்கொள்ள வேண்டும்.

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் பல வகையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அப்படி உட்கொண்டால் தான் உடலுக்கு வேண்டிய மற்ற சத்துக்களும் கிடைக்கும். எனவே தினமும் வெறுமனே ஓட்ஸை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். மாறாக, ஒரு நாள் இட்லி, ஒரு நாள் தோசை, ஒரு நாள் ஓட்ஸ் என்று சாப்பிடுங்கள். இதனால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

எடை இழப்பிற்கு பதிலாக எடையை அதிகரிக்கும்

நிறைய பேர் ஓட்ஸ் ஆரோக்கியமானது என்பதால் அதிகமாக உணவில் சேர்ப்பார்கள். இப்படி ஓட்ஸை அதிகம் உட்கொண்டால், அது எடை இழப்பிற்கு பதிலாக, உடல் எடையைத் தான் அதிகரிக்கும். எனவே எடை குறைய வேண்டுமானால் அளவாக சாப்பிட வேண்டும். மேலும் ஓட்ஸின் சுவையை அதிகரிக்க, அதன் மேல் கண்ட டாப்பிங்கை சேர்க்காமல், நட்ஸ், விதைகள் அல்லது பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடுங்கள். இனிப்புகள் எதையும் சேர்க்காதீர்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, September 26, 2023, 10:18 [IST]
Desktop Bottom Promotion