Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
விடாப்பிடியான தொப்பையைக் குறைக்கணுமா? அப்ப இந்த பொடியை சுடுநீரில் கலந்து தினமும் குடிங்க..
Weight Loss Tips In Tamil: தற்போது உலகளவில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் உடல் பருமன் மற்றும் தொப்பை. இதற்கு உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் தான் காரணம்.
அதே சமயம் இப்படி உலகம் முழுவதும் நிறைய பேர் தொப்பை பிரச்சனையை சந்திக்க வேறொரு முக்கியமான காரணமும் உள்ளது. அது நீண்ட நேரம் உட்கார்ந்தவாறே வேலை செய்வது தான். இந்த தொப்பையைக் குறைக்க பலர் தினமும் ஜிம் சென்று உடற்பயிற்சியை மேற்கொள்வதோடு, கடுமையான டயட்டுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் உங்களால் கடுமையான டயட்டை மேற்கொள்ள முடியவில்லையா?

ஊட்டச்சத்து நிபுணரான ரமிதா கவுர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடாப்பிடியான தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைக்க உதவும் ஒரு அற்புதமான எடை இழப்பு பவுடர் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த பொடியை தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையிலும், தொப்பையிலும் ஒரு பெரிய மாற்றத்தைக் காணலாம்.
பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்:
* ஆளி விதை - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
தயாரிக்கும் முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆளி விதைகளை சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் பட்டை, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து, அவற்றையும் தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
உட்கொள்வது எப்படி?
* இந்த பொடியை 1 டீஸ்பூன் எடுத்து, வெதுவெதுப்பான நீர் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால், தயிர், ஸ்மூத்தி போன்றவற்றுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்.
* சிறந்த பலனைப் பெற, இதை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
இந்த பொடியை உட்கொள்வதால் கிடைக்கும் வேறு பல நன்மைகள்:
இந்த மேஜிக்கல் பொடியை உட்கொள்வதன் மூலம், உடல் பருமன் மற்றும் தொப்பை குறைவது மட்டுமின்றி, வேறுபல நன்மைகளும் கிடைப்பதாக ஊட்டச்சத்து நிபுணர் கூறினார். அந்த நன்மைகள் பின்வருமாறு:
* இரத்த சர்க்கரை அளவு சமநிலையில் பராமரிக்கப்படும்
* உடலினுள் அழற்சி குறையும்
* இதய ஆரோக்கியம் மேம்படும்
* உடலின் மெட்டபாலிசம் ஊக்குவிக்கப்படும்
* செரிமானம் மேம்படும்
* பசியுணர்வு கட்டுப்படும்
குறிப்பு
"எப்போதும் உங்களின் எந்த ஒரு பிரச்சனையையும் ஒரே ஒரு உணவு அல்லது ஒரு வைத்தியமோ சரிசெய்யாது. எனவே நீங்கள் ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். மேலும் போதுமான அளவு நீரை அருந்த வேண்டும். அதோடு தினமும் 40-45 நிமிடம் நடைப்பயிற்சி போன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியில் ஈடுபடுவதும் மிகவும் முக்கியம். முக்கியமாக மன அழுத்த அளவைக் கட்டுப்படுத்த யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபட மறவாதீர்கள்" என்றும் ஊட்டச்சத்து நிபுணர் கூறியிருந்தார்.
எனவே நண்பர்களே! நீங்கள் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபட ஊட்டச்சத்து நிபுணர் கூறிய இந்த பொடியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வாருங்கள். இதனால் உங்கள் எடையில் ஒரு நல்ல மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications