Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.
ஆண்களே! 35 வயசு ஆச்சா? அப்ப இந்த 5 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க.. கூறும் ஊட்டச்சத்து நிபுணர்!
Healthy Foods For Men Above 35: பொதுவாக வயது அதிகரிக்கும் போது உடல் ஆரோக்கியத்தில் வழக்கத்தை விட கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். ஏனெனில் வயது அதிகரிப்பதனால் உடலின் மெட்டபாலிசம் குறைந்து, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளும் தலைத் தூக்க ஆரம்பிக்கும்.
அதுவும் பெண்களைப் போலவே ஆண்களும் 30 வயதிற்கு மேல் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க வேண்டுமானால், ஒருவர் முதலில் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் உணவுகளின் மூலம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

ஊட்டச்சத்து நிபுணரான ரமிதா கவுர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 35 வயதிற்கு மேலான ஆண்கள் கட்டாயம் தங்களின் உணவில் சேர்க்க வேண்டிய சக்திவாய்ந்த 5 உணவுகள் குறித்தும், அந்த உணவுகள் எந்த பிரச்சனையைத் தடுக்க உதவுகிறது என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார்.
1. வழுக்கை தலைக்கு...
30 வயதிற்கு மேல் நிறைய ஆண்கள் வழுக்கை தலை பிரச்சனையை சந்திக்க நேரிடும். இதைத் தவிர்க்க வேண்டுமானால் பூசணி விதைகளை உட்கொள்ள வேண்டும். "பூசணி விதைகளில் ஜிங்க், பைட்டோஸ்டெரால்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை வழுக்கை தலைக்கு வழிவகுக்கும் DHT ஹார்மோனைத் தடுக்க உதவுகிறது. அதற்கு தினமும் ஒரு டீஸ்பூன் வறுத்த பூசணி விதைகளை ஸ்நாக்ஸாகவோ அல்லது பழங்களின் மேல் தூவியோ உட்கொள்ளலாம்" என்று நிபுணர் கூறினார்.
2. விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு...
30 வயதிற்கு மேலான ஆண்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை விறைப்புத்தன்மை கோளாறு. இதைத் தவிர்க்க ஆண்கள் பீட்ரூட்டை உட்கொள்ள வேண்டும். "பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. இந்த நைட்ரேட்டுகள் உடலினுள் நைட்ரிக் ஆக்ஸைடு அளவை அதிகரித்து, விறைப்புத்தன்மை பிரச்சனையைத் தடுக்கும். அதுவும் தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 1/2 கப் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது நல்லது" என்று நிபுணர் கூறினார்.
3. உடல் சோர்வு
வயது அதிகரிக்கும் போது உடல் மிகுந்த சோர்வுடன் இருப்பதை உணரக்கூடும். இதைத் தவிர்க்க முருங்கையை உணவில் சேர்ப்பது நல்லது. அதுவும் முருங்கை பொடியில் இரும்புச்சத்து, பி வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை உடல் சோர்வை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும். அதற்கு 1/2 டீஸ்பூன் முருங்கை பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்று நிபுணர் கூறினார்.
4. குறைவான பாலுணர்ச்சிக்கு..
வயது அதிகரிக்கும் போது பாலுணர்ச்சி குறையக்கூடும். அஸ்வகந்தாவில் வித்தானோலைடுகள் அதிகம் உள்ளன. இவை டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதோடு, பாலுணர்வு பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. அதற்கு இரவு தூங்கும் முன் 1 அஸ்வகந்தா மாத்திரையை வெதுவெதுப்பான பால் அல்லது நீருடன் சேர்த்து எடுக்கலாம் என்று நிபுணர் கூறினார்.
5. தொப்பை
35 வயதிற்கு மேல் உடலின் மெட்டபாலிசம் குறைவதால், உடலில் கொழுப்புக்கள் அப்படியே படிந்து தொப்பையை உண்டாக்கும். இதைத் தவிர்க்க ஆண்கள் ஆளி விதைகளை சாப்பிடலாம். ஆளி விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து மிற்றும் லிக்னன்கள் அதிகம் உள்ளன. இவை ஹார்மோன்களை சமநிலையில் வைத்துக் கொள்வதோடு, கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது. அதற்கு 1 டீஸ்பூன் பொடித்த ஆளி விதைகளை தயிர் அல்லது ஸ்மூத்தியுடன் சேர்த்து, ஸ்நாக்ஸ் நேரத்தை உட்கொள்ளலாம் என்று நிபுணர் கூறினார்.
எனவே நண்பர்களே! உங்களுக்கு 30 வயதிற்கு மேல் ஆகிவிட்டால், மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உங்களின் தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் ஒரு நல்ல மாற்றத்தை உடலில் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications