Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
உங்களிடம் இந்த இரவு நேர பழக்கங்கள் இருந்தால் நீங்க நீண்ட ஆயுளோடு வாழலாமாம்... உங்ககிட்ட இருக்கா?
உங்கள் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் ஆயுட்காலத்தைத் தீர்மானிப்பதில் உங்கள் அன்றாடப் பழக்கவழக்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. உங்கள் காலை, மதியம், மாலை மற்றும் இரவு நேரத்தை நீங்கள் எவ்வாறு செலவழிக்கிறீர்கள் என்பது இதில் மிகவும் முக்கியமானது.
நீங்கள் நீண்ட ஆயுளை வாழ விரும்புகிறீர்களா? ஆம் எனில், உங்களின் தூக்க பழக்கத்தை சீரமைக்க வேண்டியது அவசியம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி உலகில் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களிடம் சில பொதுவான தூக்க பழக்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நிலையான தூக்க அட்டவணை
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நிலையான தூக்க அட்டவணை அவசியம். ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்குவது மற்றும் எழுந்திருப்பதை உள்ளடக்கிய நிலையான தூக்க அட்டவணையை வைத்திருப்பது, நீங்கள் நீண்ட ஆயுள் வாழ உதவும்.
இரவு முழுவதும் தூங்க வேண்டும்
ஆய்வுகளின் படி, நீங்கள் நீண்ட ஆயுளை வாழ விரும்பினால், உங்கள் மூளை மற்றும் உடலை புத்துயிர் பெற ஒவ்வொரு இரவும் 8-10 மணிநேரம் தூங்க வேண்டும். போதுமான தூக்கம் உங்கள் மூளை செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றல் மட்டங்களை மேம்படுத்தும். தடைபட்ட தூக்கம் உங்களின் மூளையின் செயல்பாடுகளையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
ஓய்வெடுக்க நேரம் ஒதுக்க வேண்டும்
ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குவது, உங்கள் மனதுக்கும் உடலுக்கும் நாள் முழுவதும் ஓடுவதற்குத் தேவையான இடைவெளியைக் கொடுக்கும். நீங்கள் அதை எப்படி செய்வது என்பது நபருக்கு நபர் மற்றும் நீங்கள் வசிக்கும் இடத்திற்கு ஏற்பட மாறுபடும்.
உலகில் பெரும்பாலான மக்கள் மதியம் ஓய்வெடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் நடந்து செல்வது, புத்தகம் படிப்பது அல்லது வெதுவெதுப்பான கெமோமில் தேநீர் அருந்துவது போன்றவற்றையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தாமதமாக சாப்பிடக்கூடாது
நீண்ட ஆயுள் வாழ்வதில் உங்கள் உணவுமுறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இரவு நேர உணவு என்று வரும்போது, மிதமான உணவை உட்கொள்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் எந்த சூழ்நிலையிலும் தாமதமாக சாப்பிடக்கூடாது.
சரியான நேரத்தில் கவனமாக சாப்பிடுவது, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. காலை உணவு மற்றும் மதிய உணவை நீங்கள் விரும்பிய அளவில் சாப்பிடலாம், மேலும் உங்கள் இரவு உணவை மிதமான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒயின் மிகவும் நல்லது
உலகில் நீண்ட காலம் வாழும் மக்கள் வாழும் மண்டலங்களில் மிதமான அளவில் மது அருந்துவது வழக்கமாக உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் ஒயினை குறிப்பாக நண்பர்களுடன் உணவின் போது அருந்துவது நீங்கள் நீண்ட காலம் வாழ்வதற்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
