Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
அசுர வேகத்தில் மீண்டும் பரவும் புதிய கோவிட் XBB.1.16 மாறுபாடு பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!
New XBB.1.16 COVID Variant: இந்தியாவில் மீண்டும் கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கோவிட் வழக்குகளின் அதிகரிப்பானது இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது. தற்போதைய கோவிட் வழக்குகளின் அதிகரிப்புக்கு காரணமாக இருப்பது கோவிட்-ன் XBB.1.16 மாறுபாடு. இந்த மாறுபாடானது முதன் முதவாக ஜனவரி மாதத்தில் சோதனை செய்யப்பட்டஇரண்டு மாதிரிகளில் அடையாளம் காணப்பட்டது.
தற்போது இந்தியாவில் மட்டும் கடந்த மார்ச் 19, 20 ஆம் தேதிகளில் ஒரு நாளைக்கு சுமார் 1,000-க்கும் கோவிட்-19 வழக்குகள் பதிவாகி வருகின்றன. இதைக் காணும் போது நம்மில் பலருக்கும் அச்சம் அதிகரித்திருக்கும். அதோடு தற்போது இன்ஃப்ளூயன்ஸா ஏ வகையின் துணை வகையான H3N2 வைரஸ் தொற்றும் மக்களிடையே பரவி வருகின்றன. ஒரே வேளையில் கோவிட்-19 தொற்றும், H3N2 வைரஸ் தொற்றுக்களும் மக்களிடையே பரவுவதால், இதை அடையாளம் காண்பது என்பது கடினமாக உள்ளது.

குறிப்பாக என்ன தான் H3N2 வைரஸ் தொற்று அதிக மரணத்தை ஏற்படுத்தாவிட்டாலும், இந்த வைரஸ் தொற்றினால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகின்றன. இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களிலேயே இது மிகவும் வேகமாக பரவக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளதாக நிபுணர்களும் கூறுகின்றனர்.
சரி, இந்தியாவில் அதிவேமாக பரவிக் கொண்டிருக்கும் கோவிட்-ன் XBB.1.16 மாறுபாடு எந்த மாதிரியானது மற்றும் அதன் அறிகுறிகள் என்ன, இது மற்ற கோவிட் வகைகளைப் போன்றே அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என்பன போன்ற பல கேள்விகளுக்கான விடையை இப்போது காண்போம்.
கோவிட் XBB.1.16 என்றால் என்ன?
கோவிட்-ன் XBB.1.16 மாறுபாடு XBB.1.15 மாறுபாட்டில் இருந்து வரவில்லை. ஆனால் இந்த இரண்டு மாறுபாடுகளும் XBB மற்றும் XBB.1 மாறுபாடுகளில் இருந்து வந்தவை என்று இந்தியாவின் மரபணு வரிசைமுறை நெட்வொர்க்கில் உள்ள நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
உலகிலேயே எந்த நாட்டில் XBB.1.16 மாறுபாடு அதிகம் உள்ளது?
கோவிட்-ன் XBB.1.16 மாறுபாட்டின் வழக்கானது உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவில் உள்ளது. இரண்டாவது அதிகப்படியான கோவிட் வழக்கானது அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த புதிய துணை வகை உலகளவில் ஒரு புதிய அலையை உருவாக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
கோவிட் XBB.1.16 உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?
ஆரம்ப கால ஆராய்ச்சியின் படி, கோவிட் XBB.1.16 மாறுபாடு இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோவிட் துணை மாறுபாடுகளை விட வேகமாக பரவக்கூடிய தன்மையைக் கொண்டதோடு, ஆபத்தான விகிதத்தில் வழக்குகளானது பெருகும். இருப்பினும், இதுவரை உலகளவில் கோவிட் XBB.1.16 மாறுபாட்டினால் ஒரு மரணம் கூட இன்னும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கவை.
இந்தியாவில் எந்த மாநிலங்களில் XBB.1.16 பரவல் அதிகம் உள்ளது?
covSPECTRUM-ன் படி, கோவிட்-ன் XBB.1.16 மாறுபாடானது மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் அதிகம் காணப்படுகிறது.
கோவிட் XBB.1.16 மாறுபாட்டின் அறிகுறிகள் என்ன?
தற்போது வரை, கோவிட் XBB.1.16 மற்றும் XBB.1.15 ஆகியவற்றின் அறிகுறிகளில் எவ்வித வேறுபாடும் இல்லை. இந்த கோவிட் XBB.1.16 மாறுபாட்டின் அறிகுறிகளாவன காய்ச்சல், தொண்டைப் புண், தலைவலி, தசை வலி, சோர்வு, மூச்சுத்திணறல், இருமல் போன்றவை. இது தவிர சிலர் அடிவயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கை அனுபவிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே, மீண்டும் கொரோனா தொற்றை தவிர்த்து பாதுகாப்பாக வேண்டுமானால், நாம் அனைவரும் கூட்டமான இடங்களுக்கு செல்வதைத் தவிர்ப்பதோடு, வெளியே செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிந்து, கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக அறிகுறிகள் தென்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால், மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுக்கலாம். சுயநலமாக யோசிக்காமல், சற்று பொதுநலத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட்டால், இந்த மாறுபாட்டையும் எளிதில் சமாளித்து விரட்டலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













