Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்..
உங்கள் இதயத்தை சுற்றி கவசத்தை உருவாக்கணுமா? அப்ப இந்த பொருட்களை தினமும் சாப்பிடுங்க...!
Heart Health: மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை பாதிக்கும் இதய பிரச்சினைகள் உலகம் முழுவதும் மரணத்திற்கு முக்கிய காரணமாகும். மன அழுத்தம், உட்கார்ந்த வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் அனைத்தும் இணைந்து இதய ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நீங்கள் நகர்ப்புற சூழலில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் உட்கொள்ளும் எதுவும் 100 சதவீதம் தூய்மையானது அல்ல. நீங்கள் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள் கலப்படமானவையாக உள்ளது. இது உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் பெரும் பற்றாக்குறையை உருவாக்குகிறது. மேலும், சப்ளிமெண்ட்ஸ் இந்த ஊட்டச்சத்து இடைவெளியைக் குறைக்க உதவுகிறது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்
ட்ரைகிளிசரைடுகள் (உடலில் உள்ள கொழுப்புகளின் மிகவும் பொதுவான வகை), வீக்கம், பக்கவாதம் மற்றும் பிற இதய ஆபத்துகளைக் குறைப்பதில் இந்த சப்ளிமெண்ட்ஸ் அற்புதமாக வேலை செய்கிறது. அக்ரூட் பருப்புகள், சியா விதைகள், மீன், ஆளிவிதை எண்ணெய் மற்றும் கனோலா எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
உணவின் மூலம் எடுத்துக்கொள்வது சாத்தியமில்லை என்றால், இந்த பொருட்களை போதுமான அளவில் சேர்ப்பதை வழக்கமாகக் கடைப்பிடிக்க, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் காப்ஸ்யூல்களை எடுத்துக்கொள்வது ஒரு சிறந்த வழி. தமனிகளில் பிளேக் உருவாவதைக் குறைக்கும் அதே வேளையில், இதய செயல்பாட்டை பராமரிக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது.
மெக்னீசியம்
ஒரு ஆய்வின் படி, மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை 12 புள்ளிகள் குறைக்கிறது. உடலில் சுமார் 300 உயிர்வேதியியல் எதிர்வினைகளுக்கு காரணமான 3 நுண்ணிய தாதுக்களில் (கால்சியம் மற்றும் துத்தநாகத்துடன்) இதுவும் ஒன்றாகும். மெக்னீசியம் குறைபாடு தசை சுருக்கங்கள், பிடிப்புகள், வலிப்புத்தாக்கங்கள், அசாதாரண இதய தாளங்கள், ஆளுமை மாற்றங்கள் மற்றும் கரோனரி பிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.
முந்திரி பருப்புகள், பாதாம், முழு தானியங்கள், பருப்பு வகைகள், விதைகள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவை மெக்னீசியத்தின் வளமான ஆதாரங்களில் சில. அவற்றை நிர்வகிப்பது சவாலாக இருக்கலாம், எனவே மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் வேலையை சிறப்பாக செய்யும்.
ஃபோலிக் அமிலம்
ஃபோலிக் அமிலம் (வைட்டமின் பி) பலருக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. காய்கறிகள், பீன்ஸ் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்றவை ஃபோலேட்டின் சிறந்த மூலப்பொருட்களாகும். இந்த சப்ளிமெண்ட் இயற்கையாகவே பல உணவுப் பொருட்களில் உள்ளது, இருப்பினும் இத்னை காப்ஸ்யூல் அல்லது பிற வடிவங்களில் இது உங்கள் வழக்கமான உணவில் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் ஏற்கனவே சில மருந்துகள் அல்லது சிகிச்சைகளில் இருந்தால், ஃபோலிக் அமிலத்தை உட்கொள்வது பயனுள்ளதாக இருக்காது.
திராட்சை விதை சாறு
உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டால், திராட்சை விதை சாறு உங்கள் உணவில் சேர்க்க சரியான விஷயம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஒரு ஆய்வின்படி 8-16 வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 100mg-800mg திராட்சை விதை சாறு உஎடுத்துக் கொண்டால் உங்கள் உயர் இரத்த அழுத்தம் நார்மலாகும்.
அஸ்வகந்தா
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அமைதிப்படுத்தும் உணவுப் பொருட்கள் தேவை. இவை எப்போதும் போதுமானதாக இல்லை என்றாலும், அஸ்வகந்தாவை உள்ளடக்கிய சப்ளிமெண்ட்ஸ் மூளையை அமைதிப்படுத்துகிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மாற்ற உதவுகிறது. அஸ்வகந்தா பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் எந்த வகையான உடல் மற்றும் மன அழுத்தத்தையும் குறைப்பதில் அற்புதமாக செயல்படுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இதனை பல வழிகளில் உங்கள் உணவில் சேர்க்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


