Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்க வயசுக்கு நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு தெரியுமா? இத படிங்க...
National Milk Day 2023: நாம் தினசரி உட்கொள்ள வேண்டிய முக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று தான் பால். ஏனெனில் பாலில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. முக்கியமாக எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான முக்கியமான சத்துக்கள் பாலில் தான் அதிகளவில் உள்ளன.
இப்படிப்பட்ட பாலை நிறைய பேர் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்த பின் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. பாலானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் குடிக்க வேண்டிய ஒரு பானம்.

ஆனால் வயதிற்கு ஏற்ப பாலைக் குடிக்கும் அளவு வேண்டுமானால் வேறுபடலாம். உதாரணமாக, குழந்தைகள் ஒரு நாளைக்கு பலமுறை பாலைக் குடிக்க வேண்டும். அதுவே பெரியவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூட குடிக்கலாம். இவை அனைத்தும் ஒருவரது உடலின் வளர்ச்சி மற்றும் தேவையைப் பொறுத்தது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி இந்தியாவில் தேசிய பால் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதிக பாலை உற்பத்தி செய்யும் நாடான இந்தியா, பாலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்நாளை கொண்டாடி வருகிறது.
அதுவும் இந்த நாளானது இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தையான டாக்டர் வர்கீஸ் குரியனை நினைவுகூறும் வகையில் 2014 ஆம் ஆண்டு உணவு மற்றும் வேளாண்மை அமைப்பினால் தேசிய பால் தினமாக அனுசரிக்கப்பட்டது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தேசிய பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று தான் தேசிய பால் தினம். அனைவருக்குமே பாலின் நன்மைகள் பற்றி தெரியும் மற்றும் இதுக்குறித்து பல இடங்களில் படித்திருப்போம், ஏன் மருத்துவர்கள் கூட நம்மிடம் கூறியிருப்பார்கள். ஆனால் டயட்டில் இருக்கும் பலரும் பாலை தவிர்த்து பெரிய தவறை செய்து வருகிறார்கள்.
இப்படி பாலை தவிர்க்கும் போது உடலில் பல ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட்டு, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக நிறைய பேருக்கு எந்த வயதினர் எவ்வளவு பாலை குடிக்க வேண்டும் என்பது குறித்து தெரியாது. எனவே தேசிய பால் தினமான இன்று எந்த வயதினர் எவ்வளவு பாலைக் குடிக்க வேண்டும் என்பதை இப்போது காண்போம்.
0-6 மாதங்கள்
குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் தான் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் பிறந்த குழந்தைக்கு அதிக ஊட்டச்சத்து தேவை மற்றும் தாய்ப்பாலில் குழந்தையின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே 6 மாதம் வரை பிறந்த குழந்தைக்கு சீரான இடைவெளியில் தாய்ப்பாலைக் கொடுக்க வேண்டும். அதுவும் ஒரு நாளைக்கு 600 மிலி பாலை கொடுக்க வேண்டியது முக்கியம். அப்படி கொடுத்தால் தான் குழந்தை சரியான அளவில் சத்துக்களைப் பெறும்.
6-12 மாதங்கள்
6 மாதம் முதல் 1 வயது வரையிலான குழந்தைக்கு தாய்ப்பால் தவிர மாட்டுப் பால் போன்ற வேறு எதையும் கொடுக்கலாம். ஆனால் வளரும் குழந்தைக்கு பால் மிகவும் முக்கியமானது. இந்த வயதில் உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு 600-700 மிலி பாலை கட்டாயம் குடிக்க வேண்டும்.
1-2 வயது
இந்த வயதில் குழந்தைகள் மெதுவாக தாய்ப்பாலுடன், வெளி உணவுகளை சாப்பிடத் தொடங்குவார்கள். பெரும்பாலும் இந்த வயதில் உள்ள குழந்தைகள் வெளியில் பாலை குடிக்க மறுப்பார்கள். தாய்ப்பாலைத் தான் குடிக்க விரும்புவார்கள். மேலும் வெளிப்பாலைக் குடித்தால் சில குழந்தைகள் வாந்தி எடுக்கத் தொடங்குவார்கள். இப்படி வாந்தி எடுத்தால், வெளிப்பாலைக் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள். இந்த வயதுடைய குழந்தைகள் ஒரு நாளைக்கு 800-900 மிலி பால் குடிக்க வேண்டும்.
3-8 வயது
இந்த வயது குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் மிகவும் முக்கியமான காலகட்டம். ஏனெனில் இந்த வயதில் குழந்தைகள் அதிகம் கீழே விழுந்து காயமடைவார்கள். இதைத் தவிர்க்க பாலைக் குடிக்க வேண்டும். ஏனெனில் பாலைக் குடிக்கும் போது குழந்தைகளின் எலும்பு மற்றும் தசைகள் வலுபெறும். இந்த வயதில் குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 1/2 கப் பாலைக் குடிக்க வேண்டும். அதோடு பால் பொருட்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
9-15 வயது
9 வயதில் குழந்தைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதியளவு வளர்ந்திருப்பார்கள். மீதி பாதியளவு வளர இவர்கள் பாலை கட்டாயம் குடிக்க வேண்டும். அதுவும் இந்த வயதுகளில் குழந்தைகள் ஒரு நாளைக்கு 3 கப்புக்கும் அதிகமான அளவில் பாலைக் குடிக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் டீனேஜ் வயதில் நுழைவதால், இவர்களுக்கு ஒரு நாளைக்கு 3000 கலோரிகள் தேவைப்படும். எனவே இந்த கலோரிகளைப் பெற ஒரு நாளைக்கு 4 கப்புக்கும் அதிகமான பாலைக் குடிக்க கொடுக்க வேண்டும்.
15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது
உங்கள் வீட்டில் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருந்தால், ஒவ்வொரு நாளும் நல்ல சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது அவசியம். அத்துடன் தினசரி பாலையும் குடிக்க வேண்டும். அதுவும் இந்த வயதிற்கு மேல் ஒரு நாளைக்கு 1 1/2 கப் பாலை குடிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். இப்படி தினமும் குடிக்கும் போது உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, எலும்புகளும் வலிமையாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications