Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
Muskmelon Benefits: கோடையில் முலாம் பழம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Muskmelon Benefits: ஒரு சீசன் பழமானது அந்த சீசனில் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்க்கக்கூடிய மருத்துவ பண்புகளை கொண்டிருக்கும். அப்படி கோடைக்காலத்தில் கிடைக்கக்கூடிய பழங்கள் தான் மாம்பழம், தர்பூசணி, முலாம் பழம். இவற்றில் மாம்பழம் மற்றும் தர்பூசணியைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆனால் முலாம் பழத்தை பற்றி குறைவானவர்களுக்கே தெரியும்.
முலாம் பழம் ஒரு கோடைக்கால பழம் மட்டுமின்றி, மிகவும் சுவையான பழமும் கூட. முலாம் பழத்தில் தர்பூசணியைப் போன்றே நீர்ச்சத்து அதிகளவில் உள்ளன. இது தவிர இவற்றில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களும் நிரம்பியுள்ளன. கோடையில் அதிகப்படியான தாகம் எடுக்கும். அப்படி தாகம் எடுக்கும் போது, வெறும் நீரை மட்டும் குடிக்காமல், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொண்டால், தாகம் தணிவதோடு, உடல் வறட்சியடையாமலும் இருக்கும்.

முலாம் பழத்தை கிர்னி பழம் என்றும் அழைப்பார்கள். கோடையில் இந்த பழத்தை தெருவோரங்களில் விற்கப்படுவதை பலரும் காணலாம். இந்த பழத்தை கோடையில் தினமும் உட்கொண்டு வந்தால், கோடைக்காலத்தில் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இப்போது கோடையில் முலாம் பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
இரத்த அழுத்தத்திற்கு நல்லது
முலாம் பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளன. இந்த பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இவையும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் பங்களிக்கின்றன. அதற்கு முலாம் பழத்தை அப்படியே சாப்பிலாம் அல்லது அவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரித்தும் குடிக்கலாம்.
செரிமானம் மேம்படும்
முலாம் பழத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து செரிமான மண்டலத்திற்கும் நல்லது. முக்கியமாக இது கோடையில் அதிகப்படியான சூட்டினால் சந்திக்கும் மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்க உதவி புரியும். எனவே கோடைக்காலத்தில் உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் எதுவும் வரக்கூடாது என்று நினைத்தால், முலாம் பழத்தை சாப்பிடுங்கள்.
உடல் வறட்சி தடுக்கப்படும்
முலாம் பழத்தில் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. வெயில் காலத்தில் உடல் வறண்டு போகாமல் இருக்க வேண்டுமானால், போதுமான நீரைக் குடிக்க வேண்டும் மற்றும் நீர்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுவும் கோடைக்கால பழங்களான தர்பூசணி, மாம்பழம், கிவி, பெர்ரி மற்றும் முலாம் பழம் போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், உடலை நீரேற்றத்துடன் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
சரும ஆரோக்கியம் மேம்படும்
முலாம் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. முலாம் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் இருப்பதால், இது சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. கொளுத்தும் கோடையில் சருமம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க முலாம் பழத்தை சாப்பிடுவதோடு, அவற்றைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளையும் போடலாம்.
உடல் சூடு குறையும்
வெயில் காலத்தில் ஏராளமானோர் உடல் சூடு பிரச்சனையை சந்திப்பார்கள். இந்த உடல் சூட்டைக் குறைக்க முலாம் பழம் பெரிதும் உதவி புரியும். இதற்கு இப்பழத்தில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து தான் முக்கிய காரணம். எனவே நீங்கள் அடிக்கடி உடல் சூடு பிரச்சனையால் அவதிப்படுபவராயின், முலாம் பழத்தை வாங்கி அடிக்கடி சாப்பிடுங்கள்.
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொண்டவை
முலாம் பழத்தை கோடைக்காலத்தில் சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அதுவும் இந்த பழத்தில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, ஃபோலேட், பொட்டாசியம், புரோட்டீன், வைட்டமின் சி போன்றவை அதிகளவில் உள்ளன.
எனவே இந்த கோடைக்காலத்தில் உங்கள் உடல் நீரேற்றத்துடன் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், முலாம் பழத்தை உங்களின் தினசரி உணவில் சேர்த்து வர முயற்சி செய்யுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications