Latest Updates
-
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம்
முலாம் பழம் பிடிக்குமா? மறந்தும் இந்த நேரத்துல சாப்பிட்றாதீங்க.. இல்ல பிரச்சனையை சந்திப்பீங்க...
Musk Melon Side Effects In Tamil: கோடைக்காலத்தில் உடலை குளிர்விக்கும் வகையிலான பழங்கள் ஏராளமாக விற்கப்படும். அதில் ஒன்று தான் முலாம் பழம். இந்த முலாம் பழமானது வெள்ளரிப்பழம் போன்றே இருக்கும். இந்த பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகளவில் உள்ளது. கோடையில் முலாம் பழத்தை உட்கொண்டு வந்தால், பலவிதமான கோடைக்கால பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
முக்கியமாக இந்த பழத்தில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகளவில் உள்ளதால், இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மேலும் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. ஆனால் என்ன தான் முலாம் பழம் ஆரோக்கியமான பழமாக இருந்தாலும், அளவுக்கு அதிகமானால் அது தீங்கையே விளைவிக்கும்.

இப்போது முலாம் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், யரெல்லாம் முலாம் பழம் சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக காண்போம் வாருங்கள்.
இரத்த சர்க்கரையை உயர்த்தும்
சர்க்கரை நோயாளிகள் முலாம் பழத்தை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதிகளவு முலாம் பழத்தை சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரையை அதிகரித்துவிடும். எனவே சர்க்கரை நோய் இருப்பவர்கள், முலாம் பழத்தை ஒரு துண்டிற்கு மேல் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
இரைப்பை குடலை பாதிக்கும்
குறிப்பிட்ட உணவுகளை ஒன்றாக உட்கொண்டால், அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, பலவிதமான செரிமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். எனவே முலாம் பழத்தை சாப்பிட்ட பின் தண்ணீரைக் குடிக்காதீர்கள். இல்லாவிட்டால், அது செரிமான மண்டலத்தை பாதிக்கும். ஏனெனில் முலாம் பழத்தில் நீர், சர்க்கரை மற்றும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. நுண்ணுயிர்கள் மற்றும் பாக்டீரியாக்கள் வளரவும், பெருக்கமடையவும், நீர் மற்றும் சர்க்கரை தேவை. எனவே முலாம் பழத்தை உண்ட பின் நீரை அருந்தும் போது, வயிற்றில் உள்ள நுண்ணுயிர்கள் பெருக்கமடைவதோடு, வயிறு முழுவதும் பரவிவிடும்.
வயிற்றுப்போக்கை உண்டாக்கும்
முலாம்பழம் என்ன தான் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான பழமாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக இந்த பழத்தை சாப்பிடும் போது அது வயிற்றுப்போக்கை ஏற்படுத்திவிடும். முலாம் பழத்தில் சார்பிடால் என்னும் சர்க்கரை மூலக்கூறு உள்ளது. எனவே அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, அது வயிற்றுப்போக்கை ஏற்படுத்துவதோடு, வாயு பிரச்சனையும் சந்திக்க வைத்துவிடும். எனவே அளவாக சாப்பிட்டு நன்மை பெறுங்கள்.
முலாம் பழத்தை எப்போது சாப்பிடக்கூடாது?
முலாம் பழத்தை சாப்பிட சிறந்த நேரம் பகல் வேளை தான். மாலை வேளையில் உட்கொண்டால், அப்பழத்தில் உள்ள எளிய சர்க்கரைளை ஜீரணிக்க உடல் அதிக சிரமப்படும். எனவே மாலை மற்றும் இரவு நேரத்தில் முலாம் பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. பொதுவாக நமது செரிமான செயல்முறையானது இரவு நேரத்தில் வழக்கத்தை விட மெதுவாக இருக்கும். எனவே இந்த நேரத்தில் சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அது ஒருவரது தூக்கத்தின் தரத்தை பாதிப்பதோடு, உடல் பருமனுக்கும் வழிவகுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications