Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
Mother's Day 2023: சர்க்கரை நோய் உள்ள அம்மாக்களுக்கு எந்த மாதிரியான பரிசுகளை கொடுக்கலாம்?
Mother's Day 2023: ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் நம்மை உலகிற்கு கொண்டு வந்த அன்னையரைப் போற்றும் வகையில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அன்னையர் தினம் மே 14 ஆம் தேதி வருகிறது.
அன்னையர் தினத்தன்று குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக கடினமாக உழைத்து, அன்பைக் காட்டி, பல தியாகங்களை செய்த தாய்மார்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்களுக்கு பிடித்தவாறு மற்றும் ஆச்சரியமளிக்கும் பரிசுகளை வழங்கி நன்றி தெரிவிக்கப்படுகிறது.

அன்னையர் தினத்தை பலவாறு கொண்டாடலாம். அதில் அன்னையர்களுக்கு க்ரீட்டிங் கார்டுகள், பரிசுகள் மற்றும் பூக்கள் போன்றவற்றை பலரும் பொதுவாக செய்வார்கள். இன்னும் சிலர் அன்னையர் தினத்தன்று அன்னையுடன் நேரத்தை செலவிட்டு, அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வார்கள். நீங்களும் இந்த அன்னையர் தினத்தன்று உங்கள் அன்னைக்கு ஒரு பயனுள்ள பரிசுகளை வழங்க விரும்புகிறீர்களா?
உங்கள் அம்மாவிற்கு சர்க்கரை நோய் உள்ளதா? உங்கள் அம்மாவின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும் வகையிலான பரிசுகளை வழங்க ஆசைப்படுகிறீர்களா? கீழே சர்க்கரை நோய் உள்ள அம்மாக்களுக்கு எந்த மாதிரியான பரிசுகளை வழங்கலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வாங்கிக் கொண்டு உங்கள் அம்மாவை சந்தோஷப்படுத்துங்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கான ஸ்நாக்ஸ்கள்
சர்க்கரை நோய் இருந்தால் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதை சாப்பிடுவதாக இருந்தாலும், சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருக்கும் உணவுகளையே உண்ண வேண்டும். உங்கள் அம்மாவிற்கு சர்க்கரை நோய் இருந்தால், அவர்களுக்கு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருக்கும் நட்ஸ், விதைகள், டார்க் சாக்லேட், கார்போஹைட்ரேட் குறைவான புரோட்டீன் பார்கள் மற்றும் நற்பதமான பழங்களை அவர்களுக்கு பரிசாக வழங்கலாம்.
ஃபிட்னஸ் ட்ராக்கர்
தற்போது உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வகையில் ஃபிட்னஸ் ட்ராக்கர்கள் விற்கப்படுகின்றன. இந்த ஃபிட்னஸ் ட்ராக்கரைக் கொண்டு இதயத் துடிப்பு, தினமும் எவ்வளவு அடிகள் நடந்துள்ளோம், பிபி அளவு போன்றவற்றைக் கண்காணிக்கலாம். உங்கள் அம்மாவிடம் இந்த மாதிரியான ஒன்று இல்லாவிட்டால், அதை இந்த அன்னையர் தினத்தில் பரிசாக வழங்கலாம்.
இன்சுலேட்டட் லஞ்ச் பேக்
உங்கள் அம்மா வேலைக்கு செல்கிறார்களா? அவர் தினசரி அலுவலகத்திற்கு உணவை கொண்டு செல்வாரா? அப்படியானால் அவருக்கு இன்சுலேட்டட் லஞ்சு பேக்கை வாங்கித் தரலாம். இது நீண்ட நேரம் உணவை சூடாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, உணவைக் கெட்டுப் போகாமல் தடுக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கான சமையல் புத்தகம்
சர்க்கரை நோய் உள்ள உங்கள் அம்மாவிற்கு சமையல் செய்ய மிகவும் பிடிக்குமானால், அவருக்கு சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றவாறான சமையல் புத்தகத்தை வாங்கிக் கொடுக்கலாம். இது நிச்சயம் அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இரத்த சர்க்கரையை சோதிக்கும் மீட்டர்
சர்க்கரை நோயாளிகள் தங்களின் இரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரிக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளின் வீட்டில் இரத்த சர்க்கரையை சோதிக்கும் மீட்டர் இருப்பது நல்லது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தேவையான போது பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.
டயபெட்டிக் சாக்ஸ்
சர்க்கரை நோயாளிகளுக்கு என்று பிரத்யேகமாக விற்கப்படும் ஒரு பயனுள்ள பொருள் தான் டயபெட்டிக் சாக்ஸ். இந்த சாக்ஸ் வெடிப்புகளைத் தடுக்கும், கால்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளன. எனவே உங்கள் அம்மாவிற்கு இந்த சாக்ஸை வாங்கிக் கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications