Latest Updates
-
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
இந்த உணவுகளை ஃப்ரிட்ஜ்ஜில் வெச்சு சாப்பிடாதீங்க.. இல்ல ஃபுட் பாய்சன் ஆயிடும்.. ஜாக்கிரதை!
Dangerous Foods In Your Fridge: வீட்டு சாப்பாடு தான் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் வீட்டில் ஒரு வேளையில் சமைக்கும் உணவுகள் ஒரே வேளையில் முற்றிலும் காலியாவதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மிஞ்சிய உணவுகளை பலரும் வீட்டு ஃப்ரிட்ஜ்ஜில் எடுத்து வைத்து, மறுநாளோ அல்லது 2-3 நாட்கள் வைத்தோ சூடேற்றி சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி ஃப்ரிட்ஜ்ஜில் எடுத்து வைத்து, சூடேற்றி சாப்பிடுவது என்பது நல்லதல்ல.
அதுவும் குறிப்பிட்ட சில உணவுகளை சமைத்த பின், அவற்றை உடனே சாப்பிட்டுவிடுவது தான் நல்லது. அதைவிட்டு, அந்த உணவுகளை எடுத்து வைத்து மறுநாள் அல்லது 2-3 நாட்கள் கழித்து சூடேறறி உட்கொண்டால், பின் அது ஃபுட் பாய்சனாகி, உடலுக்கு கேடு விளைவித்து, சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். இப்போது எந்த மாதிரியான உணவுகளை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் காண்போம்.

அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகள்
அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகளை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து உட்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நுண்கிருமிகளுக்கு புரோட்டீன் உணவுகள் மிகவும் பிடிக்கும். எனவே இறைச்சிகள், மீன், பால், சீஸ், முட்டை போன்றவற்றை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். அதுவும் குளிர்ச்சியான நிலையில் உள்ள இறைச்சிகளில் லிஸ்டீரியா போன்ற பாக்டீரியாக்கள் செழித்து வளரும். எனவே ஃப்ரிட்ஜ்ஜில் இறைச்சிகளை வைக்கும் போது, அவற்றை முறையாக சேமித்து வைக்க வேண்டும். இதனால் மற்ற உணவுகளில் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். முடிந்தவரை புரோட்டீன் உணவுகளை ஃப்ரிட்ஜ்ஜில் நீண்ட காலம் வைத்து சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
மீந்து போன உணவுகள்
சமைத்து மீந்து போன உணவுகளை ஃப்ரிட்ஜ்ஜில் எடுத்து வைத்து சாப்பிடுவது என்பது நல்லதல்ல. சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜ்ஜில் நீண்ட காலம் வைத்திருக்கும் போது, அதன் மேல் பூஞ்சை, பாக்டீரியா போன்றவை வளரத் தொடங்கிவிடும். எனவே சமைத்த உணவுகளை 3-4 நாட்கள் வரை வைத்து சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
கீரைகள் மற்றும் வெட்டப்பட்ட பழங்கள்
ஃப்ரிட்ஜ்ஜில் ஒருசில பழங்கள், காய்கறிகளை மட்டும் தான் வைத்து சாப்பிட வேண்டும். ஆனால் கீரைகள், வெட்டப்பட்ட பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். கீரைகளை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும். அதேப் போல் நறுக்கிய காய்கறிகள் பழங்களை சரியாக ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கும் போது, கிருமிகள் அதில் வளரும் அபாயம் உள்ளன. இதன் விளைவாக இப்படிப்பட்ட காய்கறி, பழங்களை உட்கொள்ளும் போது, அதன் விளைவாக ஃபுட் பாய்சன் ஏற்படும் அபாயம் உள்ளன.
சாதம் மற்றும் சமைத்த பாஸ்தா
தற்போது பெரும்பாலான வீடுகளில் மீந்து போன சாதத்தை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, அடுத்த வேளை எடுத்து சூடுபடுத்தி சாப்பிட்டு வருகின்றனர். மேலும் இதை பாதுகாப்பானதாகவும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. சாதம் மற்றும் சமைத்த பாஸ்தாவை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கும் போது, அதில் பேசிலஸ் செரியஸைக் கொண்டிருக்கலாம். இந்த பாக்டீரியாவானது வெப்பத்தை எதிர்க்கும் நச்சுக்களை உருவாக்கும். இந்நிலையில் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்த சாதத்தை சூடேற்றி உட்கொள்ளும் போது, அதன் விளைவாக ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
மீன்
மீன்களை ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பது நல்லதல்ல. ஏனெனில் மீன்கள் வேகமாக அழுகக்கூடியவை மற்றும் கடுமையான உணவு மூலம் பரவும் நோய் அபாயத்தை ஏற்படுத்தும். அதுவும் சரியான முறையில் மற்றும் சரியான வெப்பநிலையில் சேமிக்கப்படாவிட்டால், அது ஹிஸ்டமைன் பாய்சன் ஏற்பட வழிவகுக்கும். எனவே முடிந்தவரை மீன்களை வாங்கியதும் உடனே சமைத்து சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications