Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கொசுவர்த்தி சுருளை தினமும் யூஸ் பண்றீங்களா? இந்த நோய் வர 90% வாய்ப்பிருக்கு.. உஷார்...
Mosquito Coil Side Effects In Tamil: மழைக்காலம் என்பதால் அவ்வப்போது மழை பெய்து ஆங்காங்கு மழை நீர் தேங்கி, கொசுக்கள் பெருக்கமடைகின்றன. இதனால் வீட்டில் கொசுத் தொல்லையால் நிறைய பேர் அவதிப்படுவதுண்டு. மேலும் தற்போது டெங்கு காய்ச்சலால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்கு முக்கிய காரணமே கொசுக்கள் தான்.
எனவே கொசுக்களிடம் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். கொசுக்களை அழிக்க பல்வேறு பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், இன்னும் பலரது வீடுகளில் கொசுவர்த்தி சுருள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த கொசுவர்த்தி சுருள் கொசுக்களை அழிப்பதோடு, நம் ஆரோக்கியத்தையும் மெதுவாக அழிக்கும் என்பது தெரியுமா?

கொசுவர்த்தியில் இருந்து வெளிவரும் புகையை அதிகமாக ஒருவர் சுவாசிக்கும் போது, அது நுரையீரலை படுமோசமாக பாதிப்பதோடு, பல மோசமான நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும். இப்போது ஒருவர் கொசுவர்த்தி சுருளின் புகையை தினமும் சுவாசித்தால், எந்த மாதிரியான பிரச்சனையால் அவதிப்படக்கூடும் என்பதைக் காண்போம்.
தலைவலி
கொசுவர்த்தி சுருளில் உள்ள பொருட்கள், தலைவலியைத் தூண்டக்கூடியது. அதனால் தான் பெரும்பாலானோர் கொசுவர்த்தியை ஏற்றியதும் தலைவலியை சந்திக்கிறார்கள். ஆகவே கொசுக்களை அழிக்க கொசுவர்த்தியை பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல. முடிந்தவரை, அதன் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
சரும அழற்சி
கொசுவர்த்தியில் சருமத்தில் தடிப்புகள் மற்றும் அழற்சியை ஏற்படுத்தும் உட்பொருட்கள் நிறைந்துள்ளன. ஆகவே ஏற்கனவே அழற்சியைக் கொண்டவர்கள், கொசுவர்த்தியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே நல்லது. இல்லாவிட்டால், அது நிலைமையை மோசமாக்கிவிடும்.
நுரையீரல் புற்றுநோய்
கொசுக்களை அழிக்க பயன்படுத்தப்படும் கொசுவர்த்தி சுருளில் கார்சினோஜென்கள் உள்ளன. இந்த கார்சினோஜென்களை ஒருவர் தொடர்ந்து சுவாசிக்கும் போது, அது நுரையீரலில் புற்றுநோயை உண்டாகும் செல்களின் வளர்ச்சியை அதிகரித்து, புற்றுநோயின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
ஆஸ்துமா மற்றும் சிஓபிடி
தற்போது நிறைய பேர் ஆஸ்துமா மற்றும் சிஓபிடி (COPD) பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில் கொசுக்களை அழிக்க வீட்டில் கொசுவர்த்தியை தினமும் பயன்படுத்தினால், அதன் புகையை சுவாசித்து ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகள் மற்றும் இருமலால் கூட அவதிப்படக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.
குழந்தைகளுக்கு ஆபத்தானது
வீட்டில் குழந்தைகள் இருந்தால், முடிந்தவரை கொசுவர்த்தி சுருளை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. தினமும் கொசுவர்த்தி சுருளை ஏற்றி, அதன் புகையை சுவாசித்தால், அதில் உள்ள கெமிக்கல்கள் குழந்தைகளுக்கு தீவிரமான சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தி, அவர்களின் ஆரோக்கியத்தை மோசமாக்கலாம். ஆகவே இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.
தற்போது கொசுவர்த்திக்கு மாற்றாக பல்வேறு கொசுக்களை அழிக்கும் பொருட்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. ஒருவேளை அவற்றை வாங்க முடியாவிட்டால், இயற்கை வழிகளின் மூலம் கொசுக்களை விரட்டலாம். எனவே உடல் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், கொசுவர்த்தி சுருளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications