Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
உடல் எடையை வேகமா குறைக்க உதவும் ஜப்பானிய வாழைப்பழ டயட் பற்றி தெரியுமா?
Morning Banana Diet In Tamil: நாளுக்கு நாள் உலகில் பல்வேறு டயட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை மக்களால் அதிகம் பின்பற்றப்பட்டும் வருகின்றன. அப்படி சமீப காலமாக மக்களிடையே அதிகம் பிரபலமாகியுள்ள ஒரு டயட் தான் மார்னிங் பனானா டயட் (Morning Banana Diet). இந்த டயட் ஜப்பானில் உருவானது மற்றும் இந்த டயட் ஜப்பானில் மட்டுமின்றி, உலகளவிலும் மக்களால் அதிகம் பின்பற்றப்பட்டும் வருகிறது.
இந்த மார்னிங் பனானா டயட் அதிகம் கஷ்டப்படாமல், வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பிரபலமான ஜப்பானிய டயட் உண்மையிலேயே உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுமா என்பது குறித்து இக்கட்டுரையில் சற்று விரிவாக காண்போம்.

மார்னிங் பனானா டயட் என்றால் என்ன?
மார்னிங் பனானா டயட் என்பது ஜப்பானிய மருந்தாளுனரான சுமிகோ வதனாபே மற்றும் அவரது கணவரான ஹிட்டோஷி வதனாபே ஆகிய இருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஹிட்டோஷி வதனாபே தனது சமூக வலைத்தளத்தில் வெற்றிகரமாக உடல் எடையைக் குறைத்த கதையை பகிர்ந்து கொண்ட போது, இந்த டயட் குறுகிய நாட்களிலேயே மிகவும் பிரபலமானது.
இந்த டயட்டின் அடிப்படை என்னவென்றால், காலை உணவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாழைப்பழங்கள் உண்பது மற்றும் மதிய வேலை மற்றும் இரவு வேளையில் வழக்கமான உணவுகளை உண்பது தான். அத்துடன் ஒருசில எளிய விதிகளை மட்டும் பின்பற்ற வேண்டும்.
இந்த டயட் எப்படி வேலை செய்கிறது?
மார்னிங் பனானா டயட்டானது ஒருசில எளிய விதிகளைப் பின்பற்றுவதன் மூலம், உடல் எடையைக் குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது. அவை பின்வருமாறு:
* காலை உணவின் போது வாழைப்பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும். அதுவும் இத்தனை வாழைப்பழம் தான் என்று இல்லாமல், எவ்வளவு வேண்டுமானாலும், எந்த வகையான வாழைப்பழத்தை வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதற்கு எவ்வித கட்டுப்பாட்டும் இல்லை.
* மார்னிங் பனானா டயட்டை மேற்கொள்பவர்கள், காலையில் காபி, டீ என்று எதையும் குடிக்கக்கூடாது. முக்கியமாக காலையில் எழுந்ததும் குடிக்கக்கூடாது. மற்றபடி இதர வேளைகளில் குடிக்கலாம்.
* மதிய உணவு மற்றும் இரவு உணவுகளை சரியான நேரத்தில் தவறாமல் உட்கொள்ள வேண்டும். அதில் மதிய உணவை 3 மணிக்கு முன்னரும், இரவு உணவை 8 மணிக்கு முன்னரும் முடித்துவிட வேண்டும். 8 மணிக்கு மேல் எதையும் சாப்பிடக்கூடாது.
* இரவு உணவிற்கு பின் ஸ்நாகஸ், இனிப்புகள் என எதையும் உட்கொள்ளக்கூடாது. ஒருவேளை இவற்றை சாப்பிட விரும்பினால், அதையும் 8 மணிக்கு முன்னரே உட்கொள்ள வேண்டும்.
* முக்கியமாக இந்த டயட்டிற்கு உடற்பயிற்சியை அவசியம் செய்ய வேண்டிய கட்டாயமில்லை. ஆனால் உடல் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், மிதமான உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொள்ளலாம்.
உண்மையில் இது உடல் எடையைக் குறைக்குமா?
இந்த மார்னிங் பனானா டயட்டின் எளிமையான விதிகளைப் பார்க்கும் போது, பலருக்கும் உண்மையிலேயே இந்த டயட் உடல் எடையைக் குறைக்குமா என்ற கேள்வி மனதில் எழும். ஆனால், உண்மையில் இதற்கு எந்த ஒரு அறிவியல்பூர்வமான ஆதாரமும் இல்லை.
வாழைப்பழங்கள் ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழம். பலரும் டயட்டில் இருக்கும் போது வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதே சமயம் வாழைப்பழத்தை காலை உணவாக உட்கொண்டால் உடல் எடை குறையும் என்பதற்கும் எவ்வித ஆராய்ச்சியும் இல்லை.
ஆனால் இந்த பனானா டயட்டை மேற்கொள்ளும் போது, உடல் எடை குறைய முக்கிய காரணம் குறைவான அளவில் கலோரிகளை எடுப்பது தான். அதுவும் காபி, டீ போன்றவை காலையில் தவிர்ப்பது, இரவு நேரத்தில் ஸ்நாக்ஸ்களை உட்கொள்வது போன்றவற்றால் அதிக கலோரிகள் உடலில் சேர்வது தடுக்கப்படுகிறது.
கூடுதலாக காலையில் வாழைப்பழத்தை சாப்பிடும் போது, வயிறும் நிரம்பும், நீண்ட நேரம் பசியெடுக்காமலும் இருக்கும். இருப்பினும், இந்த டயட்டை ஒருவர் நீண்ட காலம் மேற்கொள்ள முடியாது. இந்த டயட்டால் சந்திக்கும் எந்த எடை இழப்பும் நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்காது.
மார்னிங் பனான டயட் பாதுகாப்பானதா?
மார்னிங் பனானா டயட் எந்த ஒரு மோசமான ஆரோக்கிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தாவிட்டாலும், ஒருசில பக்கவிளைவுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. அதில் காலையில் காபி, டீயைத் தவிர்க்கும் போது, சிலர் தலைவலி, எரிச்சலுணர்வு போன்ற அறிகுறிகளை சந்திக்கலாம். மேலும் வெறும் வாழைப்பழத்தை மட்டுமே காலை வேளையில் உட்கொள்ளும் போது, உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்காமல் போகலாம்.
பொதுவாக வயது, பாலினம், உயரம், எடை, உடல் செயல்பாடு போன்றவற்றைப் பொறுத்து சிலருக்கு அதிகமாகலோ அல்லது குறைவாகவோ கலோரிகள் தேவைப்படலாம். ஆனால் இந்த டயட்டில் இதுக்குறித்து எதுவும் இல்லாததால், கண்மூடித்தனமாக இந்த டயட்டைப் பின்பற்றினால், ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நிறைய வாய்ப்புள்ளது.
நினைவில் கொள்ள வேண்டியவை
மார்னிங் பனானா டயட் உடல் எடையை வேகமாக குறைக்க உதவலாம். ஆனால் இது ஒரு நிலையான அணுகுமுறை அல்ல. குறுகிய காலத்தில் எடையை குறைப்பது எவ்வளவு ஒரு சிறந்த மற்றும் நிரந்தர தீர்வாக இருக்காது. குறுகிய காலத்தில் எடையைக் குறைக்கும் எந்த ஒரு டயட்டும், நிச்சயம் ஒரு கட்டத்தில் உடலில் மோசமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். எனவே நீங்கள் எந்த ஒரு டயட்டை மேற்கொள்வதாக இருந்தாலும், ஊட்டச்சத்து நிபுணரை அணுகி உடல் உடலுக்கு ஏற்றவாறு டயட்டை கேட்டு, அவற்றைப் பின்பற்ற முயற்சி செய்வதே நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











