Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
இந்த 5 ஆரோக்கிய பிரச்சனைகளை கொண்டவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது.. இல்லன்னா நிலைமை மோசமாயிடும்.. உஷார்..
Side Effects Of Mango In Tamil: கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், மாம்பழ சீசனும் தொடங்கிவிட்டது. மார்கெட்டுகளில் மாம்பழத்தின் பல வெரைட்டிகள் வந்து குவிவதை காணலாம். பழங்களின் ராஜாவாக கருதப்படும் மாம்பழம் அதன் சுவையால் மட்டுமின்றி, அதன் மணத்தாலும் ஒருவரை மயக்கும் திறன் கொண்டது.
இப்படிப்பட்ட மாம்பழத்தை அப்படியேவோ அல்லது சாலட், ஐஸ்க்ரீம், மில்க்ஷேக் என்று பலவாறு சாப்பிடலாம். இந்த மாம்பழம் சுவையானது மட்டுமின்றி, ஏராளமான சத்துக்களையும் உள்ளடக்கியது. அதுவும் அதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி9, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, நார்ச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், தாமிரம் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனால் மாம்பழத்தை ஒருவர் சாப்பிடுவதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

அதில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை பல நன்மைகள் அடங்கும். ஆனால் மாம்பழம் எவ்வளவு ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், சிலர் இந்த மாம்பழத்தை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஒருவேளை இந்த மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால், அது உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். குறிப்பாக சில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் மாம்பழத்தை சாப்பிட்டால், அவர்களின் நிலைமை மோசமாகவும் வாய்ப்புள்ளது. இப்போது யாரெல்லாம் மாம்பழத்தை சாப்பிடக்கூடாது என்பதையும், அதற்கான காரணத்தையும் காண்போம்.
1. சர்க்கரை நோயாளிகள்
மாம்பழத்தை சாப்பிடக்கூடாதவர்களின் பட்டியலில் முதலில் இருப்பது சர்க்கரை நோயாளிகள். ஆம், சர்க்கரை நோய் இருந்தால் மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மாம்பழத்தில் இயற்கை சர்க்கரை அதிகமாக உள்ளது. இதனால் இதை சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் போது இரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும். எனவே உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்து, மாம்பழத்தை சாப்பிட விரும்பினால், உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
2. உடல் பருமன்
குண்டாக இருப்பவர்கள் மாம்பழத்தை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மாம்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை அதிக அளவில் உள்ளன. எனவே மாம்பழத்தை அதிகம் உட்கொள்ளும் போது உடல் எடை இன்னும் அதிகரிக்கும். அதுவும் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், மாம்பழத்தை சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. இல்லாவிட்டால் எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும்.
3. செரிமான பிரச்சனைகள்
செரிமான பிரச்சனைகளைக் கொண்டவர்களும் மாம்பழத்தை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் மாம்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது அஜீரணத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக வாய்வு தொல்லை, மலச்சிக்கல், வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் பலவீனமான செரிமான அமைப்பைக் கொண்டவர்களும் மாம்பழத்தை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
4. அழற்சி பிரச்சனைகள்
மாம்பழம் சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தலாம். அதுவும் சென்சிடிவ் சருமத்தினருக்கு மாம்பழம் சருமத்தில் தீங்கை விளைவிக்கலாம். இதற்கு மாம்பழத்தில் உள்ள ஒருசில ரசாயனங்கள் காரணமாக இருக்கலாம். அப்படி அழற்சியைக் கொண்டிருந்தால் மாம்பழத்தை சாப்பிட்டதும் சருமத்தில் தடிப்புகள், அரிப்புகள், பருக்கள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எனவே அழற்சி பிரச்சனையைக் கொண்டிருந்தால், மாம்பழத்தை தவிர்ப்பதே நல்லது.
5. உடல் சூடு
உங்களுக்கு அதிகமாக சூடு பிடித்திருக்கும் போது மாம்பழத்தை சாப்பிடக்கூடாது. ஏனெனல் மாம்பழம் இயற்கையாகவே சூடான தன்மையைக் கொண்டது. இந்நிலையில் சூடு பிடித்திருக்கும் போது மாம்பழத்தை இன்னும் அதிகமாக சாப்பிட்டால், உடல் வெப்பம் இன்னும் அதிகரித்துவிடும். இதன் விளைவாக வாந்தி, தலைச்சுற்றல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே சூடு பிடித்திருந்தால், மாம்பழத்தை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











