Latest Updates
-
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 'ஒரு' காயை சாப்பிட்டா போதுமாம்... உங்க பாலியல் ஆசை இருமடங்கு அதிகரிக்குமாம்...அது முருங்கைக்காய் இல்ல!
Benefits Of Ladies Finger In Tamil: இன்றைய நாளில் பெரும்பலான தம்பதிகள் உடலுறவில் மகிழ்ச்சி மற்றும் திருப்தி இல்லமால் இருக்கிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முதன்மையானது உடலுறவில் சலிப்பு ஏற்படுவது மற்றும் ஆர்வம் குறைவது ஆகும். உடலுறவில் ஆர்வம் இல்லையென்றால், அது உங்கள் பாலியல் வாழ்க்கை முழுவதையும் பாதிக்கும்.
காலங்காலமாக, ஆண்களும் பெண்களும் பாலுணர்வைத் தூண்டுவதற்காக பாலியல் ஆசையை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட்டு வருகிறார்கள். இது தம்பதிகளின் பாலியல் ஆர்வத்தை அதிகரிப்பதோடு, பாலியல் இன்பத்தையும் செயல்திறனையும் அதிகரிக்க உதவும். அந்த வகையில், உங்கள் பாலுணர்வை அதிகரிக்க நாட்டுக்காய்கறியான வெண்டைக்காய் உங்களுக்கு உதவும்.

பாலியல் ஆரோக்கியத்திற்கு வெண்டைக்காயின் நன்மைகள்
உங்கள் நினைவாற்றல் திறனை மேம்படுத்த உதவும் வெண்டைக்காய், உங்கள் பாலியல் ஆரோக்கியத்திற்கும் பல அதிசயங்களை செய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா? பொதுவாக காய்கறி மற்றும் கீரைகள் ஆண், பெண்களின் பாலியல் வாழ்க்கைக்கு நன்மைகளை வழங்குகின்றன.
வெண்டைக்காயில் இரும்புச்சத்து, ஃபோலேட்டுகள், துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை நிறைந்துள்ளன. இவை அனைத்தும் பாலியல் சுரப்பிகளுக்கு நல்லது. இதேபோல், இது ஒரு இயற்கையான தளர்த்தியாகவும் செயல்படுகிறது. ஏனெனில் இதன் அதிகளவு பீட்டா கரோட்டின் காரணமாக லிபிடோவை சமநிலைப்படுத்த உதவுகிறது.
மாத்திரை, மருந்து மற்றும் செயற்கை தயாரிப்பு பொருட்களை சாப்பிடுவதை விட, உங்கள் பாலியல் ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும் காய்கறி வெண்டைக்காய். இது பல வைட்டமின்கள் மற்றும் துத்தநாகத்தின் சிறந்த மூலமாக இருக்கிறது. துத்தநாகக் குறைபாடு ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு முக்கிய காரணமாகிறது.
அதிக வைட்டமின் உள்ளடக்கம் சோர்வை சமாளிக்கவும் பாலியல் வீரியத்தை புதுப்பிக்கவும் உதவுகிறது. மேலும், இதிலுள்ள துத்தநாகம் ஆண்களின் விறைப்பு தன்மை பிரச்சனையை சரிசெய்ய உதவுவதோடு, உடலுறவில் நன்றாக செயல்படவும் ஆற்றலை வழங்குகிறது. ஆதலால், உங்கள் உணவில் வெண்டைக்காயை சேர்க்கக் மறக்காதீர்கள்.
எப்படி சாப்பிடலாம்?
வெண்டைக்காயை வறுத்தும் குழம்பு வைத்தும் சாப்பிடலாம். அதை பொடி செய்து ஒரு கிளாஸ் பால் மற்றும் தேனுடன் சேர்த்து சாப்பிடலாம். மேலும், வெண்டைக்காய் நீரையும் நீங்கள் குடிக்கலாம். இது விறைப்புத்தன்மைக்கு உதவுவதோடு, உங்களுக்கு பாலுணர்வையும் அதிகமாக தூண்டும்.
பெண்களுக்கு வழங்கும் நன்மைகள்
பெண்களின் பாலின ஆரோக்கியத்திற்கும் வெண்டைக்காய் சிறந்தது. மாதவிடாய் சுழற்சியின் போது அதிக இரத்தப்போக்கு அல்லது எண்டோமெட்ரியோசிஸால் பாதிக்கப்படும் பெண்கள் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்கவும்.
இரவு முழுவதும் தண்ணீரில் வெண்டைக்காயை ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் முதலில் குடிக்க வேண்டும். இதை சில வாரங்களுக்கு குடித்து வந்தால், மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் இரத்தப்போக்கு குறைவதோடு, பாலியல் ஆரோக்கியம் தொடர்பான மற்ற விஷயங்களுக்கும் உங்களுக்கு நன்மையளிக்கும்.
பசியைத் தூண்டுவதற்கு உதவுகிறது
ஊட்டச்சத்தின் ஆற்றல் மையமாகும். மேலும் இது பல்வேறு நிலைகளில் உடல் செயல்பாட்டை ஆதரிக்கிறது. நார்ச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களின் சிறந்த ஆதாரமாக இருப்பது மட்டுமின்றி, இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்தும் உள்ளன. இந்த இரண்டு வகையான நார்ச்சத்தும் வயிற்றில் நிரம்பிய உணர்வைத் தருகிறது. எனவே பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
சிறுநீர் பாதை நோய்தொற்று
பாலியல் ரீதியாக பரவும் நோய்தொற்று, வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க வெண்டைக்காய் உதவுகிறது. வெண்டைக்காயில் உள்ள அதிக நீர் உள்ளடக்கம் மற்றும் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சிறுநீர்ப்பை செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் நச்சுகளை வெளியேற்றுகிறது. மேலும்,இது நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரியும் உணர்வைக் குறைக்க உதவும்.
யோனி வறட்சி
மாதவிடாய் அல்லது எண்டோமெட்ரியோசிஸின் போது அதிக இரத்தப்போக்கால் பாதிக்கப்படும் பெண்கள் வெண்டைக்காய் நீர் குடிப்பதால் பலனடைவதாக கூறுகிறார்கள். வெண்டைக்காய் நீர் யோனி வறட்சியை போக்க உதவுகிறது. மேலும், இந்த நீரில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளதால், பாலியல் ஆற்றலைப் புதுப்பிக்க உதவுகிறது. எனவே சிறந்த பாலியல் வாழ்க்கையை பெற வெண்டைக்காயை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

