Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
Leo: 40 வயதிலும் சிக்கென்று ஃபிட்டாக இருக்கும் நடிகை த்ரிஷாவின் ஃபிட்னஸ் ரகசியம் தெரியுமா?
Leo Actress Trisha: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் த்ரிஷா கிருஷ்ணன். இவர் தமிழில் மட்டுமின்றி, தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் 1999 ஆம் ஆண்டு சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் திரைப்படங்களில் பல சைடு ரோல்களில் நடித்து வந்த இவர் சாமி, கில்லி போன்ற திரைப்படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார். முக்கியமாக இன்னும் இவருக்கு திருமணமாகவில்லை.

தற்போது இணையத்தில் ட்ரெண்ட்டாக இருக்கும் மற்றும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளிவரவுள்ள விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் கதாநாயகி இவர் தான். கில்லி திரைப்படத்திற்கு பின் விஜய்யும், த்ரிஷாவும் ஒன்றாக நடித்த திரைப்படம் என்றால் அது இப்படம் தான். இப்படத்தில் த்ரிஷா விஜய்யின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த லியோ படத்திற்கு முன் த்ரிஷா பொன்னியின் செல்வன் என்னும் பிரம்மாண்டமான திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் த்ரிஷா சிக்கென்று மிகவும் அழகாக தேவதை போன்று காணப்பட்டார். இதனால் இவரது ரசிகர் பட்டாளம் இன்னும் அதிகரித்துள்ளது.
40 வயதாகியும் த்ரிஷா இன்னும் அழகு சற்றும் குறையாமல், ஃபிட்டாக சிக்கென்று இருப்பதன் பின்னணியில் உள்ள ரகசியத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே நடிகை த்ரிஷாவின் ஃபிட்னஸ் ரகசியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
* த்ரிஷா காலை வேளையில் நல்ல ஊட்டச்சத்துள்ள பழங்களை தான் உட்கொள்வாராம். எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்ளமாட்டாராம்.
* முக்கியமாக த்ரிஷா ஹோட்டல் உணவுகளை அதிகம் உட்கொள்ளமாட்டாராம். பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் தான் சாப்பிடுவாராம். ஆம்லெட், தயிர், முழு தானிய பிரட் போன்றவற்றை விரும்பி சாப்பிடுவாராம்.
* தினமும் யோகா, உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை தவறாமல் ஈடுபடுவாராம்.
* உடல் நீரேற்றத்துடன் இருக்க நீரை அதிகளவில் குடிப்பாராம். இதுதவிர ஜூஸ்களை விரும்பி குடிப்பாராம். அதுவும் நற்பதமான பழங்களால் தயாரிக்கப்பட்ட ஜூஸ்களைத் தான் அதிகம் குடிப்பாராம். முக்கியமாக வைட்டமின் சி அதிகம் நிறைந்த எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ்களை விரும்பி குடிப்பாராம்.
* மைதா உணவுகள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடமாட்டாராம்.
* ஸ்நாக்ஸ் சாப்பிடுவதாக இருந்தால் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை தான் சாப்பிடுவாராம். முக்கியமாக எப்போதும் ஏதாவது ஒரு நட்ஸை தன் பையில் வைத்திருப்பாராம்.
* த்ரிஷாவிற்கு பிரியாணி என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஒருவேளை உடல் எடை அதிகரித்துவிட்டால், அதைக் குறைக்க கடினமாக உழைப்பாராம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications