Latest Updates
-
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். ..
Karuvadu Benefits: 100 கிராம் கருவாடு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை கிடைக்குமா? இத்தன நாள் இது தெரியாம போச்சே..
Karuvadu Benefits In Tamil: அசைவ பிரியர்களின் மிகவும் விருப்பமான உணவுகளுள் ஒன்று தான் கருவாடு. அதே சமயம் மற்ற அசைவ உணவுகளை விட இது விலைக்குறைவில் கிடைக்கக்கூடியது. குறிப்பாக தமிழ்நாட்டில், அதுவும் கடல் சார்ந்த பகுதிகளில் இருப்பவர்களின் தினசரி உணவில் கருவாடு நிச்சயம் இருக்கும்.
மீனை காய வைத்து பெறப்படும் இந்த கருவாட்டில் ஏராளமான சத்துக்கள் உள்ளன என்பது தெரியுமா? இப்படிப்பட்ட கருவாடு தொக்கு செய்து, பழைய சோறுடன் சேர்த்து சாப்பிட்டால், அவ்வளவு பிரமாதமாக இருக்கும். ஆனால் கருவாட்டில் உப்பு அதிகமாக இருப்பதால், இதை சாப்பிட பலரும் யோசிப்பார்கள். ஏனெனில் உப்பானது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் பல நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும். ஆனால் எதையும் அளவாக சாப்பிட்டால் ஆபத்தானது அல்ல என்பதே உண்மை.

உங்களுக்கு கருவாடு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், யாரெல்லாம் சாப்பிடலாம், யார் சாப்பிடக்கூடாது என்பனவெல்லாம் தெரியாதா? குழந்தை நல மருத்துவரும், உணவு ஆலோசகருமான டாக்டர். அருண்குமார் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கருவாடு சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் குறித்து விரிவாக கூறியுள்ளார். அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கருவாட்டில் உள்ள சத்துக்கள்
அதில் அவர் கூறியதாவது "நற்பதமான மீனை கல் உப்பு கலந்த நீரில் நன்கு ஊற வைத்து, அதை வெயிலில் காய வைத்து, அதில் உள்ள நீர்ச்சத்து 20 சதவீதத்திற்கும் கீழ் குறைந்திருக்கும் போது கிடைப்பது தான் கருவாடு. இப்படிப்பட்ட கருவாட்டை எந்த பிரச்சனையும் இல்லாமல் நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்தலாம் என்று டாக்டர் அருண் குமார் கூறினார்.
* நற்பதமான 100 கிராம் மீனில் 100 முதல் 120 கலோரிகள் உள்ளது என்றால், 100 கிராம் கருவாட்டில் 200 முதல் 250 கலோரிகள் உள்ளது.
* நற்பதமான 100 கிராம் மீனில் 20 முதல் 22 கிராம் புரோட்டீன் உள்ளது என்றால், 100 கிராம் கருவாட்டில் 55 கிராம் முதல் 70 கிராம் புரோட்டீன் உள்ளது. அதுவும் இருக்கும் உணவுகளிலேயே அதிகளவு புரோட்டீன் கருவாட்டில் தான் உள்ளது. ஒரு நாளைக்கு 100 கிராம் கருவாடு சாப்பிட்டாலே ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய புரோட்டீன் எளிதில் கிடைத்துவிடும்.
* அதுமட்டுமின்றி, கருவாட்டின் மூலம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் கிடைக்கும். ஆனால் நற்பதமான மீனை விட சற்று குறைவான அளவில் கிடைக்கும்.
* மேலும் கருவாட்டில் உள்ள முட்கள் மெல்லியதாக இருப்பதால், அதை முட்களுடன் சேர்த்து சாப்பிடுவோம். அப்படி சாப்பிடும் போது அதன் மூலம் கால்சியம் கிடைக்கும். அதுவும் பால் மூலம் கிடைப்பதை விட பலமடங்கு அதிகமாக கால்சியம் கிடைக்கும்.
* இதுதவிர நுண் சத்துக்களான வைட்டமின் பி12, செலினியம், அயோடின் போன்ற சத்துக்களும் கிடைக்கும்.
மொத்தத்தில் ஒரு நல்ல புரோட்டீன் எடுக்க நினைத்தால், அசைவ விரும்பிகளுக்கு கருவாடு ஒரு மிகச்சிறந்த தேர்வு. மேலும் கருவாட்டை குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பெரியவர்கள் என்று அனைவருமே சாப்பிடலாம். யோசிக்கவே வேண்டாம்" என்றும் டாக்டர் கூறினார்.
யாரெல்லாம் கருவாடு சாப்பிடக்கூடாது?
"கருவாட்டில் உள்ள ஒரே ஒரு மைனஸ் என்றால், அதில் உப்பு அதிகமாக உள்ளது. அதுவும் 100 கிராம் கருவாடு சாப்பிட்டாலே 5-7 கிராம் உப்பு உடலுக்குள் செல்லும். அதுவும் 2 முறை நீரில் நன்கு கழுவினாலும் கூட உப்பு உடலுக்குள் புகும்.
இது சாதாரண மக்களுக்கு, குழந்தைகளுக்கு பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள், சிறுநீரக நோய் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கருவாட்டை உட்கொள்வதை தவிர்த்து, பிரஷ்ஷான மீனை உட்கொள்வது நல்லது" என்று டாக்டர் கூறினார்.
சமீபத்தில் ஸ்ரீலங்காவில் குழந்தைகளுக்கான உணவு பரிந்துரை அட்டவணையில், குழந்தைகளுக்கு 6 மாதத்தில் இணை உணவை ஆரம்பிக்கும் போது, அதில் நெத்திலிக் கருவாட்டை அரைத்து பொடி செய்து, இணை உணவுடன் 2 ஸ்பூன் சேர்த்து கொடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இப்படி 2 ஸ்பூன் கருவாட்டு பொடி என்றால் குழந்தைக்கு ஒரு நாளைக்கு 10 கிராம் புரோட்டீன் எளிதில் கிடைத்துவிடும். இதை நாமும் பின்பற்ற வேண்டும் என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! உங்களுக்கு கருவாடு பிடிக்குமானால், இனிமேல் அதை சாப்பிட யோசிக்காமல், தினமும் கூட உணவில் சிறிது சேர்த்து வரலாம். இதனால் உடல் ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும் இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












