Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க
தக்காளியின் காம்பு பகுதி உண்மையில் ஆபத்தானதா? டாக்டர் என்ன சொல்றாரு-ன்னு பாருங்க..
Tomato Stem: நமது தினசரி உணவில் தவறாமல் சேர்க்கப்பட்டு வரும் ஒரு காய்கறி தான் தக்காளி. இந்த தக்காளியின் புளிப்புச் சுவை சமையலுக்கு ஒரு தனித்துவமான ருசியை தருவதோடு, இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட.
இப்படிப்பட்ட தக்காளி குறித்த பல புரளிகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதில் இன்னும் பலரும் உண்மையாக இருக்குமோ என்று நினைத்து, நம்பிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் தான் தக்காளியின் நடுவில் உள்ள பச்சை நிற காம்பு பகுதி ஆபத்தானது என்பது.

உண்மையிலேயே தக்காளியின் காம்பு பகுதி விஷம் நிறைந்ததா? இதை சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா? என்பது குறித்து உணவு ஆலோசகர் டாக்டர் அருண்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார். வாருங்கள் உண்மை என்ன என்பதை அறிவோம்.
அதில் டாக்டர் அருண்குமார் கூறியதாவது, "தக்காளியின் காம்பு பகுதியை சாப்பிடுவது ஆபத்தானது. அதில் சொலனின் என்ற மோசமான கெமிக்கல் உள்ளது. இதை சாப்பிடும் போது பயங்கரமான ஆட்டோ-இம்யூன் நோய்கள் வந்துவிடும் என்ற ஒரு கருத்து இணையத்தில் பரவி வருகிறது.
இது உண்மை தானா? என்றால், பொதுவாக தக்காளி மற்றும் உருளைக்கிழங்கின் காம்பு மற்றும் தோல் பகுதியில் சொலனின் என்ற அல்கலாய்டு கெமிக்கல் உள்ளது. இதை அதிகமாக ஒருவர் உட்கொண்டால், அது வாந்தி, பேதி போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள், சில சமயங்களில் அரிதான நரம்பு பாதிப்பு, ஏன் இறப்பு கூட ஏற்படலாம். இதை கொண்டு தான் யாரோ ஒருவர் தக்காளி காம்புடன் சாப்பிட்டால் ஆபத்தானது என்ற ஒரு புரளியை பரப்பியுள்ளனர்." என்று கூறினார்.
மேலும் "தக்காளியில் சொலனின் இருப்பது உண்மை தான். ஆனால் எந்த அளவில் உள்ளது என்பது தான் முக்கியமான ஒன்று. நாம் பச்சை தக்காளியை சாப்பிடுவோமா, இல்லை தானே, பழுத்த தக்காளியை தானே சாப்பிடுவோம். பச்சை தக்காளியில் சொலனின் வெறும் 100 கிராமில் 20-30 மிகி அளவு உள்ளது. இந்த பச்சையான தக்காளியை 300-400 கிராம் சாப்பிட்டால், உட்கொள்ளும் சொலனின் அளவு 100 மிகி-க்கு அதிகமாக இருக்கலாம். இந்த அளவில் சொலனினை ஒருவர் எடுத்தால், வாந்தி, பேதி போன்ற வயிறு உபாதைகள், மிகவும் அரிதாக நரம்பு பிரச்சனைகள் உருவாகலாம்.
ஆனால் பழுத்த தக்காளியில் 100 கிராமில் 0.5 மிகி தான் சொலனின் உள்ளது. எனவே பழுத்த தக்காளியில் உள்ள சொலனின் மூலம் கெடுதல் நடக்க வேண்டுமானால், கிட்டத்தட்ட 20 கிலோ தக்காளியை சாப்பிட வேண்டும். இந்த அளவு தக்காளியை சாப்பிட்டால் தான் ஓரளவு பிரச்சனையை சந்திக்க நேரிடும். இப்படி 20 கிலோ தக்காளியை யாராவது சாப்பிட முடியுமா என்ன? எனவே பழுத்த தக்காளியை நீங்க எப்படி வேணாலும் சாப்பிடுங்க. ஏன் தக்காளியின் காம்பு பகுதியுடன் கூட சாப்பிடுங்கள், ஒன்றும் ஆகாது." என்று கூறினார்.
எனவே நண்பர்களே! இனிமேல் தக்காளியை சமைக்கும் போது மெனக்கெட்டு அதோடு காம்பு பகுதியை நீக்கி சமைக்காம, அப்படியே கூட சமைத்து சாப்பிட்டு மகிழுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
