Latest Updates
-
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
உடம்புல இரத்தம் கம்மியா இருக்கா? ஒரு மாதம் இந்த மாதிரி சாப்பிடுங்க டக்கு-ன்னு அதிகரிக்கும்...
Iron Rich Foods In Tamil: உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் இரத்தத்தின் மூலம் தான் உடலுறுப்புக்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கின்றன. அதுவும் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் தான் இந்த முக்கிய பணியை செய்கிறது.
ஹீமோகுளோபினில் இரும்புச்சத்துக்கள் உள்ளன. இது காற்றில் இருந்து ஆக்ஸிஜனை எடுத்து, உடலுறுப்புகளுக்கு வழங்குகின்றன. இந்த ஹீமோகுளோபின் அளவு குறைந்தால், அது இரத்த சிவப்பணுக்களை இழக்கச் செய்து, இரத்த சோகைக்கு வழிவகுக்கும். மேலும் உடலில் உணவில் இருந்து சத்துக்களை உறிஞ்ச முடியாமல் போகும்.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருந்தால், அது உடல் பலவீனம், உடல் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும். சில ஆய்வுகளின் படி, ஹீமோகுளோபின் குறைபாடு பெண்களிடையே தான் பொதுவாக காணப்படுகின்றன.
இதற்கு பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாய் ஒரு முக்கிய காரணமாகும். இம்மாதிரியான சூழ்நிலையில், மாதவிடாய் காலத்தில் இழந்த இரத்தத்தை மேம்படுத்த உணவுகள் தான் பெரிதும் உதவி புரிகின்றன. உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளதா? அப்படியானால் அதன் அளவை சட்டென அதிகரிக்க பின்வரும் உணவுகளை உட்கொள்ளுங்கள்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்
கீரைகள், நட்ஸ், இறைச்சி போன்ற உணவுகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளன. இந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், அது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவி புரியும். எனவே ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படக்கூடாதெனில், இந்த மாதிரியான உணவுகளை அடிக்கடி உட்கொண்டு வாருங்கள்.
மேலும் இந்த வகை உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. அதோடு, இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள், இரும்பு பாத்திரங்களில் உணவுகளை சமைத்து உட்கொண்டால், உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரிக்கும்.
இப்படிப்பட்ட இரும்புச்சத்து சிக்கன், ஈரல், மண்ணீரல், ப்ராக்கோலி, முட்டை மஞ்சள் கரு, இறால், உலர் திராட்சை, பேரிச்சம் பழம், பசலைக்கீரை, தர்பூசணி, பூசணி விதைகள், டோஃபு போன்றவற்றிலும் கணிசமான அளவில் காணப்படுகின்றன.
வைட்டமின் சி உணவுகள்
உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்து முழுமையாக கிடைக்க வேண்டுமானால், உடலில் வைட்டமின் சி சிறப்பான அளவில் இருக்க வேண்டும். எனவே உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள், இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். வைட்டமின் சி தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, எலுமிச்சை, குடைமிளகாய் போன்றவற்றில் உள்ளன.
வைட்டமின் பி9 உணவுகள்
இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியில் வைட்டமின் பி9 சத்தும் முக்கிய பங்கை வகிக்கிறது. வைட்டமின் பி9 என்பது வேறொன்றும் இல்லை, ஃபோலிக் அமிலம் தான். உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகமாக இருந்தால் தான், ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்.
இந்த ஃபோலிக் அமிலமானது பச்சை இலை காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், வெண்டைக்காய், பீட்ரூட், பப்பாளி, வாழைப்பழம், மாம்பழம், பீன்ஸ், பருப்பு வகைகள், நட்ஸ், அவகேடோ, ப்ராக்கோலி, அஸ்பாரகஸ் போன்றவற்றில் அதிகமாக உள்ளன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications