Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
International Men's Day 2023: வேலைக்கு செல்லும் 40 வயது ஆண்களுக்கான சில எளிய உடற்பயிற்சிகள்!
International Men's Day 2023: உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் பெண்களை விட ஆண்கள் சற்று சோம்பேறிகள் என்றே கூறலாம். பெண்கள் தங்கள் அழகிற்கு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் கூடுதல் அக்கறை காட்டுவார்கள். ஆனால் ஆண்களோ அப்படி இல்லை. இந்த காரணத்தினாலேயே பெண்களை விட ஆண்கள் உயிரைப் பறிக்கும் பல நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக மாரடைப்பு போன்றவற்றால் இளம் வயதிலேயே இறக்கிறார்கள்.
இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால், ஆண்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதுவும் 30 வயதை கடந்துவிட்டால், ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறையை செலுத்த வேண்டியது அவசியம். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

ஏனெனில் தற்போதைய உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையில், உடலுக்கு வேலை கொடுக்கும் ஒரு செயல் உடற்பயிற்சி மட்டும் தான். ஆனால் இந்த உடற்பயிற்சியை செய்ய பல ஆண்களுக்கும் நேரம் கிடைப்பதில்லை. உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா? வேலைக்கு செல்கிறீர்களா? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எளிய உடற்பயிற்சிகளை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
கீழே சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு 40 வயதில் வேலைக்கு செல்லும் ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒருசில எளிய உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தாலே ஃபிட்டாக இருக்கலாம்.
டெஸ்க் ஸ்ட்ரெட்ச் (Desk Stretches)
உட்கார்ந்தவாறே நீங்கள் வேலை செய்பவரா? அப்படியானால் உட்கார்ந்த இடத்திலேயே ஒருசில ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இந்த ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகளை உட்கார்ந்தவாறோ அல்லது நின்று கொண்டோ கூட செய்யலாம். அதுவும் கழுத்து, தோள்பட்டை, கைகள் போன்றவற்றை ஸ்ட்ரெட்ச் செய்யலாம். அதன் பின் மெதுவாக தலையை பக்கவாட்டில் சாய்க்க வேண்டும், தோள்பட்டையை சுழற்ற வேண்டும் மற்றும் மணிக்கட்டு மற்றும் முன் கைகளை நீட்டி ஸ்ட்ரெட்ச் செய்யலாம்.
ஸ்குவாட்ஸ் (Squats)
ஸ்குவாட்ஸ் பயிற்சி உடலின் கீழ் பகுதியை வலுவாக்க பெரிதும் உதவி புரிகிறது. இதற்கு முதலில் எழுந்து நின்று, நாற்காலியில் அமர்வது போன்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போது முதுகுப் பகுதி நேராக இருக்க வேண்டும். இப்படி ஒரு செட்டிற்கு 10-15 ஸ்குவாட்ஸ் என 3 செட்களை செய்ய வேண்டும்.
லஞ்சஸ் (Lunges)
லஞ்சஸ் கால்களின் வலிமை மற்றும் சமநிலையை மேம்படுத்த உதவுகிறது. அதற்கு முதலில் நேராக நின்று ஒரு காலை முன்புறத்தில் வைத்து, 2 முழங்கால்களும் 90 டிகிரி கோணத்தில் இருக்கும் வரையில் நிற்க வேண்டும். இப்படி ஒரு செட்டிற்கு 10-12 எண்ணிக்கை என மொத்தம் 3 செட்டுகளை செய்ய வேண்டும்.
புஷ் அப்ஸ் (Push-Ups)
புஷ் அப்ஸ் ஒரு மிகச்சிறந்த மேல் உடலுக்கான பயிற்சியாகும். இந்த புஷ் அப்பை தரையில் தான் செய்ய வேண்டும் என்பதில்லை, சுவற்றிலோ அல்லது மேஜையில் கூட செய்யலாம். இப்படி ஒரு செட்டிற்கு 8-12 எண்ணிக்கை என 3 செட்டுகளை செய்ய வேண்டும்.
ப்ளான்க் (Plank)
ப்ளான்க் பயிற்சிகள் உடலின் முக்கிய தசைகளை வலுப்படுத்தி, தோரணையை மேம்படுத்த உதவுகின்றன. அதற்கு தரையில் 30 நொடிகள் முதல் 1 நிமிடம் வரை பலகை போன்ற நிலையில் இருக்க வேண்டும். உடல் வலிமைக்கு ஏற்றவாறு போகப் போக நேரத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
சிறு நடைப்பயிற்சி (Walk)
முக்கியமாக அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் போது, அவ்வப்போது சிறு நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதுவும் 10-15 நிமிடம் நடந்தால், உடலில் இரத்த ஓட்டம் மேம்படும், மன அழுத்தம் குறையும், மனநிலை புத்துணர்ச்சியடையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications