Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
இந்த வைட்டமின் உங்கள் உடலில் குறைஞ்சா உங்களால் எப்போதும் திருப்தியான தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாதாம்...!
சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி உடலுக்கு அளிக்கும் நன்மைகள் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். வைட்டமின் டியின் நன்மைகளின் பட்டியலில் பல இருந்தாலும், இது செக்ஸ் வைட்டமினும் கூட என்பது பலருக்குத் தெரியாது.
பலவிதமான உடல் மற்றும் மனநிலை காரணமாக செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியின்மை இருப்பதை சிலரும் உணர்த்திருக்கலாம். ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு மறைமுக காரணியாக இருப்பது வைட்டமின் டி குறைபாடு.

வைட்டமின் டி-ன் நன்மைகள்
பல ஆய்வுகளில், வைட்டமின் டி பற்றாக்குறை மக்களின் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியின்மையை ஏற்படுத்துவதாகவும், டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் சூரியன் ஒரு பெரிய காரணியாக இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். இதனால் உடலில் இருக்கும் வைட்டமின் டி குறைபாடு ஆண்களின் பாலியல் வாழ்க்கையை பாதிக்கும்.
இருப்பினும், வைட்டமின் டி குறைபாடு ஆண்களை பாதிப்பதோடு மட்டுமில்லாமல், பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை குறைத்து பாதிப்பை ஏற்படுத்தும், இது திருப்தியற்ற செக்ஸ் வாழ்விற்கு வழிவகுக்கும்.
ஆய்வுகளின் படி, வைட்டமின் டி பிறப்புறுப்புகளில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து இரத்த நாளங்களின் சுவர்களை மேம்படுத்துகிறது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி திருப்தியின்மையை குறைக்க வழிசெய்கிறது.
பெண்களின் செக்ஸ் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பு
வைட்டமின் டி குறைபாடு அல்லது வேறு ஏதேனும் காரணிகளால் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் குறைபாடு, செக்ஸ் வாழ்வில் திருப்தியின்மையை ஏற்படுத்தும்.
மேலும், ஈஸ்ட்ரோஜன் யோனி திரவத்தை வெளியேற்றி, அதன் சுவரில் உள்ள தசைகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. போதுமான அளவு ஈஸ்ட்ரோஜன் இல்லாததால் இந்த திரவம் தேவையான அளவில் வெளியேறாமல், உங்கள் பிறப்புறுப்பை இயல்பை விட வறண்டு போக செய்து, உடலுறவில் திருப்தியின்மை மற்றும் பிறப்புறுப்பில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
ஆண்களின் செக்ஸ் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பு
வைட்டமின் டி குறைபாடு அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் உங்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருந்தால், உடலில் முடி குறைதல், தசை வலிமை குறைதல் மற்றும் ஆண்களின் மார்பகம் பெரியதாகுதல் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்.
114 ஆண்களில் வைட்டமின் டி மற்றும் செக்ஸ் வாழ்க்கை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைக் கண்டறியும் 2018 ஆய்வின்படி, அதிக வைட்டமின் டி அளவைக் கொண்டவர்களில் பெரும்பாலானோர் அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவு மற்றும் சிறந்த விறைப்புத்தன்மையைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
ஆண்களின் உடலுக்கு தேவையான சூரிய ஒளியின் அளவு
ஆய்வின்படி, திருப்தியற்ற செக்ஸ் வாழ்க்கையால் பாதிக்கப்பட்ட ஆண்கள், இரண்டு வார காலத்திற்கு ஒரு முறை 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருக்க வேண்டும். இந்த கோடை காலத்தில் வீட்டிற்குள் மின்விசிறி அல்லது ஏர் கண்டிஷனரின் கீழ் இருப்பதை போல், நீங்கள் போதுமான நேரத்தை சூரிய ஒளியில் செலவிடுவதை உறுதிசெய்யுங்கள்.
மெலனின் மற்றும் செக்ஸ் ஹார்மோன்களுக்கு இடையிலான இணைப்பு
சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி-யை பெறுவது உங்கள் உடலில் மெலனோசைட்-தூண்டுதல் ஹார்மோனை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. இது மெலனின் உற்பத்திக்கு உதவி, உங்கள் சருமத்தை சூரிய ஒளியின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
சில ஆய்வுகளின்படி, மெலனின் மற்றும் பாலியல் ஹார்மோன்கள் செயல்திறனை அதிகரிப்பதில் ஒன்றோடொன்று தொடர்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
