Latest Updates
-
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்!
உங்க இரத்தத்துல அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால் என்ன நடக்கும்? இதோ பாருங்க...
உங்கள் இரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால் என்ன நடக்கும் என்பது பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம்.
ஹைபர்கொலெஸ்டிரோலீமியா என்பது இரத்தத்தில் அதிக அளவு கொழுப்பை ஏற்படுத்தும் ஒரு நிலை ஆகும். குடும்ப ஹைபர்கொலெஸ்டிரோலீமியா அறக்கட்டளையின் கூற்றுப்படி, உலகளவில் 250 பேரில் 1 பேருக்கு ஹைபர்கொலெஸ்டிரோலீமியா இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கல்லீரலானது கொலஸ்ட்ராலை மறுசுழற்சி செய்யவோ அல்லது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவோ முடியாமல் போய் விடுகிறது. இதன் விளைவாக கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது.

கொலஸ்ட்ரால்
இந்த கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற ஒரு பொருளாகும் .இது உடலால் உற்பத்தி செய்யப்படும் அல்லது சில உணவுகளின் மூலம் பெறலாம். கோழி இறைச்சி, மீன், பால் பொருட்கள் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றில் இந்த கொலஸ்ட்ரால்கள் காணப்படுகின்றன. உயிரணு சவ்வுகளை உருவாக்க, ஹார்மோன் உற்பத்திக்கு, சில சேர்மங்களை உருவாக்க இந்த கொலஸ்ட்ரால் முக்கியமாக தேவைப்படுகிறது. ஆனால் அதிகளவு கொலஸ்ட்ரால் இரத்தத்தில் இருந்தால் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஹைபர் கொலெஸ்டிரோலீமியாவின் காரணங்கள்
மரபணுக்களில் ஏற்படும் பிறழ்ச்சி அல்லது மாற்றம் காரணமாக குடும்பத்தில் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு ஹைபர் கொலெஸ்டிரோலீமியா அனுப்பப்படுகிறது. நமது ஜீன்களில் ஒரே ஒரு ஜீன் மட்டும் எல்டிஎல் ஏற்பியாக புரோட்டீனை உருவாக்குகிறது. இந்த ஏற்பியின் வேலை நமது உடலில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட்ரால் அல்லது கெட்ட கொலஸ்ட்ராலை நீக்குகிறது. ஆனால் குடும்ப ஹைபர் கொலெஸ்டிரோலீமியாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஜூன் மாற்றத்தால் இந்த எல்டிஎல் ஏற்பி செயல்பாடு தடைபடுகிறது.
இதனால் உடம்பில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. இப்படியே இந்த கெட்ட கொழுப்புகள் இரத்தக் குழாய்களில் படிந்து இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க மற்றொரு காரணம் APOB மற்றும் PCSK9 மரபணுக்களில் ஏற்படும் மாற்றமாகும். வழக்கமாக, நமது உடலில் கல்லீரல் தான் நல்ல கொழுப்பை உருவாக்குவதில் செயல்படுகிறது. இருப்பினும், குடும்ப ஹைபர் கொலெஸ்டிரோ லீமியாவில், கல்லீரலானது கொலஸ்ட்ராலை மறுசுழற்சி செய்யவோ அல்லது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவோ முடியாமல் போய் விடுகிறது. இதன் விளைவாக கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது.

வகைகள்
குடும்ப ஹைபர்கொலெஸ்டிரோலீமியாவில் இரண்டு வகைகள் உள்ளன. ஒரு நபர் ஒரு பெற்றோரிடமிருந்து FH மரபணுவைப் பெறும்போது ஹெட்டோரோசைகஸ் குடும்ப ஹைபர்கொலெஸ்டிரோலீமியா (HeFH) என்பது ஏற்படுகிறது.
ஒரு நபர் இரு பெற்றோரிடமிருந்தும் FH மரபணுவைப் பெறும்போது ஹோமோசைகஸ் குடும்ப ஹைபர்கொலெஸ்டிரோலெமியா (ஹோஃப்ஹெச்) ஏற்படுகிறது. ஆனால் இது அரிதான ஒன்றாக உள்ளது.

அறிகுறிகள்
நெஞ்சு வலி
சாந்தோமாஸ், தோல் அல்லது தசைநார்களில் மொழுகு போன்று கொழுப்புகள் படிந்து காணப்படுதல்.
தோலில் சிறிய புடைப்புகள், குறிப்பாக கைகள், முழங்கால்கள், முழங்கைகள் அல்லது கண்களைச் சுற்றி காணப்படுதல்
கண்களின் கீழ் அல்லது கண் இமைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொழுப்பு மஞ்சள் நிறத்தில் படிந்து காணப்படுதல்.
பெற்றோர் இருவரிடமிருந்தும் பிறழ்ந்த மரபணுக்களைப் பெற்ற குடும்ப ஹைபர்கொலெஸ்டிரோலீமியா கொண்ட ஒருவர் சிறு வயதிலும் குழந்தை பருவத்திலும் சாந்தோமாஸால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

கண்டறிதல்
ஒரு நபரின் உடல் அறிகுறிகளைப் பற்றி கேட்டல் மற்றும் குடும்ப வரலாறு விவரங்கள் மூலம் நோயானது கண்டறியப்படுகிறது. அதே மாதிரி உடலில் ஆங்காங்கே தேங்கி இருக்கும் கட்டிகளை மருத்துவர் பரிசோதிப்பார். இந்த கட்டிகளின் அளவு குழந்தைகளில், இது 250 மி.கி / டி.எல் விட அதிகமாகவும், பெரியவர்களில் 300 மி.கி / டி.எல்-க்கும் அதிகமாகவும் இருந்தால், அது கவலைக்குரிய ஒன்றாக இருக்கும்.

இரத்த பரிசோதனை
ஒரு நபரின் மொத்த கொழுப்பின் அளவைக் கண்டறிய இரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. மரபணு சோதனைகள், குரோமோசோமில் ஏற்படும் மாற்றம் மூலம் மரபணு மாற்றத்தை கண்டறிய இயலும்.மூலக்கூறு மரபணு சோதனைகள், குரோமோசோமல் மரபணு சோதனைகள் மற்றும் உயிர்வேதியியல் மரபணு சோதனைகள் போன்ற பல முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

சிகிச்சைகள்
அறிகுறிகளின் தீவிரத்தை பொறுத்து இதற்கு சிகச்சைகள் வழங்கப்படுகின்றன. கொழுப்பின் அளவைக் குறைக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது. அதிக கொழுப்பை கொண்டவர்கள் எல்.டி.எல் அபெரெஸிஸ் எனப்படும் ஒரு முறை மூலம் தேவையற்ற கொழுப்புகளை இரத்தத்தில் இருந்து நீக்க வேண்டியிருக்கும். குடும்ப ஹைபர்கொலெஸ்டிரோலெமியாவுக்கு அடோர்வாஸ்டாடின் என்ற மருந்து பரிந்துரைக்கப்படுகிறது இது கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது. பிற மருந்துகளில் பித்த அமில வரிசைமுறை பிசின்கள், ஃபெனோஃபைட்ரேட், எஸெடிமைப், நிகோடினிக் அமிலம் அல்லது நியாசின் மற்றும் ஜெம்ஃபைப்ரோசில் போன்ற மருந்துகளும் அடங்கும்.

எப்படி தடுப்பது
வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் உங்க கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
உயர் இரத்த அழுத்தம், டயாபெட்டீஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க குடும்ப ஹைபர்கொலெஸ்டிரோலீமியாவை கட்டுப்பாட்டில் வைப்பது சிறந்தது.
குடும்ப ஹைபர்கொலெஸ்டிரோலீமியா கொண்ட ஒருவர் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்தால் தேவையற்ற கொழுப்பை கரைத்து விடலாம்.
ஒரு நபர் ஒரு நாளைக்கு 10-20 கிராம் நார்ச்சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். டிரான்ஸ் கொழுப்பு மற்றும் சேச்சுரேட்டு கொழுப்புகளை குறைந்த அளவில் சேருங்கள்.
புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆக்ஸிஜன் சப்ளே இரத்த ஓட்டத்திற்கு தேவை. எனவே நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











