Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை!
ஆண், பெண் இருவரின் மார்பகத்திலும் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் வீட்டு வைத்தியங்கள்..!
யாராக இருந்தாலும் அவரவர்களது அந்தரங்க உறுப்பை அதிக ஆரோக்கியத்துடன் பராமரித்து கொள்ள வேண்டும். நமது உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது இந்த பிறப்புறுப்புகள் தான். இவற்றில் ஏதேனும் பாதிப்போ, நோய் தொற்றோ ஏற்பட்டால் உயிருக்கே கூட ஆபத்து நேரலாம். இன்றைய வேகமான உலக வாழ்வில் பலர் தங்களை கவனித்து கொள்ளவே மறந்து விடுகின்றனர்.

நமது உடலில் ஒவ்வொரு கால கட்டத்திலும் எண்ணற்ற மாற்றங்கள் உண்டாகும். அவற்றை நாம் கவனிக்க தவறினால் புற்றுநோய் போன்ற அபாயங்கள் ஏற்படும். ஆண், பெண் இருவருமே கட்டாயம் அவரவர்களின் அந்தரங்க உறுப்புகளில் என்னென்ன விதமான மாற்றங்கள் உண்டாகிறது என்பதை கவனித்தல் அவசியம்.
இது போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை காத்து கொள்ள ஒரு சில எளிய வழி முறைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

இருவருக்குமே..!
மார்பகத்தில் பலவித புற்றுநோய்கள் சாதாரணமாகவே ஏற்பட கூடும். பெண்களுக்கு மட்டும் தான் மார்ப்பகத்தில் இந்த வகை புற்றுநோய்கள் உண்டாகும் என்றில்லை.
இன்று ஆண்களுக்கும் இது அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை நம் உடலில் எளிதாக தடுக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒமேகா 3 உணவுகள்
பொதுவாக மார்பக புற்றுநோயின் அபாயத்தை தடுக்க கூடிய ஆற்றல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட உணவுகளுக்கு உள்ளதாம்.
இவை மார்பக பகுதியில் புற்றுநோய் செல்களை நமது உடலில் உருவாவதை தடுக்கிறதாம். ஆதலால் மீன், வால்நட்ஸ், அவகடோ போன்ற உண்வுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

கொழுப்பு எவ்வளவு..?
உடலில் சேர கூடிய கொழுப்பின் அளவை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமானது. உடலில் கொழுப்புகள் அதிகம் கூடினால் உடல் பருமனாகும்.
உடல் பருமன் இருப்போருக்கு மார்பக புற்றுநோயிற்கான அபாயம் அதிகம் என தற்போதைய ஆய்வு கூறுகிறது.

கிரீன் டீ
மார்பக புற்றுநோயை தடுக்க கூடிய ஆற்றல் கிரீன் டீயிற்கு உள்ளதாம். இவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட கூடிய தன்மை வாய்ந்தது.
வெறும் பாலோ, காபியோ குடிப்பதற்கு பதிலாக கிரீன் டீயை தினமும் குடித்து வந்தால் எதிர்ப்பு சக்தி கூடி மார்பக புற்றுநோயை தடுத்து விடலாம்.

டார்க் சாக்லேட்
மார்பக புற்றுநோயின் தாக்கம் உங்களை அண்டாமல் இருக்க ஒரு எளிய வழி உள்ளது. அதாவது, டார்க் சாக்கோலேட்டை சாப்பிட்டு வந்தாலே போதுமாம்.
சாப்பிட கூடிய சாக்லேட்டில் 70 சதவீதத்திற்கும் மேல் கோகோ இருப்பது அவசியம்.

வைட்டமின் டி
மார்பக புற்றுநோயை தடுக்க கூடிய ஆற்றல் வைட்டமின் டி வகை உணவுகளுக்கு உண்டு. குறிப்பாக கடல் உணவுகள், பால் பொருட்கள், முட்டையின் மஞ்சள் கரு, காளான், மாட்டின் கல்லீரல் ஆகியவற்றில் இவை அதிக அளவில் உள்ளது. தொடர்ந்து வைட்டமின் டி உணவுகளை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் அபாயம் குறையும்.

75 நிமிடங்கள்
ஆண்களும் பெண்களும் தங்களை மார்பக புற்றுநோயில் இருந்து காத்து கொள்ள வாரத்திற்கு 75 நிமிடம் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இவை ஹார்மோன்களை சீரான அளவில் உற்பத்தி செய்து புற்றுநோய் செல்களை நமது உடலில் வளர விடாமல் தடுக்குமாம்.

தாய்மார்களுக்கு
பெரும்பாலும் இந்த வகை மார்பக புற்றுநோய்கள் தாய்மார்களையே அதிக அளவில் குறி வைக்கின்றன. தனது முதல் குழந்தையை 30 வயதுக்கு முன்பு பெற்று எடுக்கும் தாய்மார்களை பெரிதும் பாதிக்க கூடிய அபாயம் உண்டு. எனவே, 6 மாத காலம் வரை தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு இதன் அபாயம் குறையுமாம்.

ஃபோலிக் அமிலம்
சாதாரணமாவே நமது உடலில் இருக்கும் DNA பாதிப்படைந்தால் மிக எளிதில் இந்த வகை புற்றுநோய்கள் உடலில் உண்டாக கூடும். இதை தடுக்க கூடிய தன்மை ஃபோலிக் அமிலம் நிறைந்த உண்வுகளில் உள்ளதாம்.
முக்கியமாக கருப்பு பட்டாணி, முளைக்கீரை, முழு தானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றில் இது நிறைந்துள்ளதாம். தினசரி உணவில் 400 மைக்ரோ கிராம் அளவாவது இந்த ஃபோலிக் அமிலம் உங்களின் உணவில் சேர்த்து கொள்ள வேண்டுமாம்.

சூது கவ்வும்..!
சமீபத்தில் நடத்திய ஆய்வில் புகை மற்றும் மது பழக்கம் கொண்டோருக்கு மார்பக புற்றுநோயின் பாதிப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த பழக்கத்தால் மார்பக புற்றுநோயின் வீரியம் கூடுதலாகவே இருக்கும். ஆதலால், மது மற்றும் புகை பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.



Click it and Unblock the Notifications