Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
எந்தெந்த அறிகுறிகள் இருந்தால் உடலில் என்னென்ன நோய்கள் இருக்கும்... அவசியம் தெரிஞ்சிக்கோங்க...
நம்முடைய உடலுக்குள் இருக்கின்ற நோய்கள் குறித்து நம்முடைய உடல் பாகங்கள் என்னென்ன அறிகுறிகளைக் காட்டுகின்றன என்பது பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்.
நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் திடீரென ஒருவருக்கு பெரும் தீவிர வியாதி ஏதாவது வந்துவிடுகிறது. அதை கண்டுபிடிப்பதற்குள் அவருக்கு நோய் முற்றிவிட்டது என்று. அப்படி எந்த நோயும் வருவதில்லை. எல்லாவிதமான நோய்களும் வருவதற்கு முன்பாகவே சில அறிகுறிகளை நமக்குக் காட்டுகின்றன.

அதை நாம் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். நோயின் ஆரம்பக் கட்டத்தில் அறிகுறிகளும் மிக எளிமையானதாகத் தான் இருக்கும். அப்படி எந்தெந்த நோய்கள் என்னென்ன அறிகுறிகளுடன் வருகின்றன என்று பார்ப்போம்.
நம்முடைய உடலுக்கு ஏதாவது நோய் வருவதற்கு முன்பாக உடலில் சில அறிகுறிகள் தோன்றுகின்றன.

முக அரிப்பு
நம்முடைய முகத்தில் ஏதேனும் அரிப்போ நமைச்சலோ எடுத்தது என்றால், உங்களுடைய கூந்தலில் சுத்தம் இல்லை என்று அர்த்தம். சிலர் முகத்தை நமைச்சலால் சொரிந்து கொண்டே இருப்பார்கள். அது ஏதோ சருமப் பிரச்சினை என்று மட்டும் நினைத்துவிடக் கூடாது. அதற்கு தலைமுடிக்கும் நிறைய சம்பந்தம் உண்டு.

வயிற்றுவலி
வயிற்று வலியோ வயிற்றுக் கடுப்போ இல்லது வயிற்றுப் போக்கோ இருந்தால் அதுஉங்களுடைய கைவிரல் நகங்களில் சுத்தமில்லை என்று அர்த்தம்.

மூக்கு அரிப்பு
உங்களுடைய கண்களிலோ மூக்கிலோ தொடர்ந்து அரிப்பு எடுத்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்கப் போகின்றது என்று அர்த்தம். ஜலதோஷம் பிடித்தவுடன் ஒரு வாரம் அவதிப்படுவதை விட, ஆரம்பிக்கும் முன்னரே உணர்ந்து கொண்டால் நல்லது.

காது வலி
காது வலி ஏதோ காதின் உள்ளுக்குள் இருக்கிற கொப்புளம், நரம்பு பிரச்சினை என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். நம்முடைய காதுகளில் குடைச்சலோ வலியோ வந்தது என்றால் காய்ச்சல் வரப் போகின்றது என்று அர்த்தம். அதைப் புரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

கழுத்து மடிப்பு
சிலருக்கு கை, கால், கழுத்து மடிப்புப் பகுதி அடர்ந்த கருப்பாக இருக்கும். அது சரும அழுக்குகள் சேர்ந்ததால் மட்டும் வருகிறது என்று நினைக்காதீர்கள். அவ்வாறு கை மடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்குகளில் கருப்பான பட்டை விழுந்தால் உங்களுடைய கணையத்தில் இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது என்பது பொருள்
உடலில் இன்சுலின் அதிகமாகச் சுரந்து அதிக அளவில் அடிக்கடி பசி எடுக்கிறது என்றால், அது நீரிழிவின் ஆரம்பம் என்பது பொருள்.

கால் வெடிப்பு
உங்களுடைய கால் பாதங்களில் அதிக அளவில் வெடிப்புகள் உண்டாகிறது என்றால், உடலில் அதிக அழுத்தமும் உடல் சூடும் இருக்கிறது என்பது பொருள். இது வெறும் பனி காலத்தில் ஏற்படுகிற ஒன்று மட்டுமில்லை, பித்தத்தால் வருவது மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

முழங்கால்
முழங்கால் மூட்டுகள் அல்லது கை, கால்களின் மணிக்கட்டுகளில் வலி எடுத்தால் உங்ளுடைய உடல் எடை உங்கள் உயரத்துக்கு ஏற்றதை விடவும் அதிகரித்து விட்டது. உடனே அதை குறைக்க வேண்டும் எ்னறு அர்த்தம்.

இடுப்பு வலி
தொடர்ந்து உங்களுடைய முதுகுத் தண்டு அல்லது இடுப்புப் பகுதியில் வலி எடுக்குமானால் அந்த பகுதியில் உள்ள இரண்டு முக்கிய எலும்புகளும் மிருதுவாகி, தேய்மானம் உண்டாகத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.

உதடு வெடிப்பு
உதட்டில் அல்லது உதட்டின் மேல் தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிவது போன்றவை ஏற்படுமானால் உங்களுடைய உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப் பசையும் குறைந்து விட்டது என்று பொருள்.

தோள்பட்டை
தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால் உடலில் காற்றின் அழுத்தம் அதிகரித்து வாயு தேங்கியிருக்கிறது என்று அர்த்தம்.

கைவிரல்கள்
கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக் கோடு விழுந்தால் இதயத்தில் பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். இது பெரும்பாலும் அவ்வளவு எளிதாக நம்மால் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஏனெனில் கைவிரல்களையும் அதில் மாறும் நிற மாற்றம், நகங்களின் நிறங்களை நாம் பொருட்படுத்தாமல் இருப்பதே இதற்குக் காரணம்.



Click it and Unblock the Notifications
