Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
உங்க தோசை மாவை ஆரோக்கியமானதாக மாற்றணுமா? இந்த 5 பொருட்களில் ஒன்றை சேர்த்து தோசை மாவு அரைங்க போதும்...!
தோசை என்பது உலகம் முழுக்க பிரபலமான ஒரு தென்னிந்திய உணவாகும். பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் காலை அல்லது மாலை நிச்சயம் தோசை பிரதான உணவாக இருக்கும். தோசை ஒரு உணவு என்பதையும் தாண்டி அது ஒரு எமோஷன். தோசையை நூற்றுக்கணக்கான வெரைட்டிகளில் நாம் செய்து சுவைக்கலாம்.
பொதுவாக தோசை அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து அரைத்த மாவை புளிக்கவைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது, மேலும் தேங்காய் சட்னி, கார சட்னி, இட்லி பொடி மற்றும் சாம்பாருடன் என எண்ணற்ற சைடிஷ்களுடன் நாம் இதை சாப்பிட்டு வருகிறோம். மாவின் நொதித்தல் இதை குடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாக மாற்றினாலும், இதில் உள்ள பெரிய குறைபாடு இதில் புரதம் இல்லை.

எனவே தோசையில் உள்ள புரதத்தின் அளவை அதிகரிக்க வழக்கமான தோசை மாவில் சில கூடுதல் பொருட்களை சேர்க்கலாம். இந்த பொருட்களை சேர்ப்பது தோசையை கூடுதல் ஆரோக்கியமான உணவாக மாற்றும். தோசையில் புரோட்டின் ஊட்டச்சத்தை அதிகரிக்க என்னென்ன பொருட்களை அதில் சேர்க்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பாசிப்பருப்பு
அமெரிக்க வேளாண்மைத் துறையின் அறிக்கையின் படி, 100 கிராம் சமைக்காத பாசிப்பருப்பில் சுமார் 24 கிராம் புரதம் உள்ளது. உங்கள் தோசையை ஆரோக்கியமானதாக மாற்ற உங்கள் தோசை மாவில் அரிசிக்குப் பதிலாக பாசிப்பருப்பை உளுந்துடன் சேர்த்து ஊறவைத்து மாவு அரைக்கவும் . இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது குடல் ஆரோக்கியத்தை சீராக்கும், எளிதில் செரிமானம் அடையும் மற்றும் பெரும்பாலும் தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமாக பாசிப்பருப்பு உள்ளது.
குயினோவா
100 கிராம் உலர் குயினோவாவில் கிட்டதட்ட 4 கிராம் புரதம் உள்ளது. தோசை மாவுக்காக வழக்கமான அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை ஊற வைக்கும் போது 1/2 கப் குயினோவாவை ஊறவைத்து அரைக்கவும். அவற்றை ஒன்றாக கலந்து புளிக்க வைக்கவும். குயினோவா 9 அத்தியாவசிய அமினோ அமிலங்களுடன் கூடிய புரதத்தின் முழுமையான மூலமாகும், மேலும் இது தோசையை மென்மையாக மாற்றும் மற்றும் தோசையின் புரதச்சத்தை அதிகரிக்கும்.
சோயாபீன்
சோயாபீன் புரதச்சத்தின் சிறந்த மூலமாக உள்ளது. 100 கிராம் சோயாபீனில் சுமார் 36 கிராம் புரதம் உள்ளது. சோயாபீன்ஸை உங்கள் மாவின் அளவிற்கு ஏற்ப ஊறவைத்து வேகவைத்து, பின்னர் மென்மையான பேஸ்டாக அரைத்து, உங்கள் வழக்கமான தோசை மாவில் சேர்க்கவும். இதில் புரோட்டினுடன், நார்ச்சத்தும் நிறைந்துள்ளது, இது தோசையின் ஊட்டச்சத்து மதிப்புகளை அதிகரிக்கிறது.
கடலை மாவு
அமெரிக்க வேளாண்மை துறையின் அறிக்கையின் படி, 100 கிராம் கடலை மாவில் சுமார் 20-22 கிராம் புரதம் உள்ளது. தோசை ஊற்றுவதற்கு முன், புளித்த மாவில் 2-4 தேக்கரண்டி கடலை மாவைச் சேர்த்து நன்றாக கலக்கவும். இது மாவுடன் நன்றாகக் கலந்து, உங்கள் தோசைக்கு தங்கம் போன்ற நிறத்தையும், உயர்ந்த சுவையையும் மற்றும் மிருதுவான அமைப்பையும் வழங்குகிறது.
அமராந்த்
100 கிராம் உலர் அமராந்த்-ல் சுமார் 13 கிராம் புரதம் உள்ளது. இதை மாவில் பயன்படுத்துவதற்கு அதை இரவு முழுவதும் ஊறவைத்து, பின்னர் அரிசி மற்றும் உளுந்துடன் சேர்த்து அரைக்கவும், அல்லது நொதித்தலுக்கு விடுவதற்கு முன் தனியாக அரைத்து மாவில் சேர்க்கவும். இதில் புரோட்டின் மட்டுமின்றி கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் நிறைந்துள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
