Latest Updates
-
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்...
ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்? எந்த முட்டை நல்லது? - டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க...
How Many Eggs Should I Eat A Day: முட்டை மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பதை அனைவரும் அறிவோம். தினமும் முட்டை சாப்பிட்டால் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களில் இருந்து பாதியை பெற்றுவிடலாம். ஆனால் இந்த முட்டைக் குறித்த பல கட்டுக்கதைகள் மக்களிடையே உலாவி வருகின்றன. முக்கியமாக முட்டையை தினமும் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரித்து மாரடைப்பு வந்து விடும், மஞ்சள் கருவை சாப்பிடக்கூடாது, வெள்ளைக்கரு மட்டும் தான் உடலுக்கு நல்லது என்பன போன்ற பல கருத்துக்கள் மக்களிடையே உள்ளன.
முட்டை குறித்து இவ்வளவு கருத்துக்கள் உலா வருவதால், நிறைய பேருக்கு இருக்கும் ஒரு சந்தேகம், ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம், உண்மையிலேயே முட்டையின் மஞ்சள் கரு ஆபத்தானதா என்பது தான். இந்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில் உணவு ஆலோசகர் டாக்டர் அருண்குமார் தனது சமூகவலைத்தள பக்கத்தில் இந்த கேள்விகளுக்கான பதிலை தெளிவாக விளக்கியுள்ளார். வாருங்கள் அது என்னவென்பதைக் காண்போம்.

அதில் அவர் கூறியதாவது, "முட்டை ஆரோக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த முட்டையின் மீது இப்படியொரு பயம் ஏற்பட என்ன காரணம் என்றால், அமெரிக்க இதய மருத்துவர்களின் கூட்டமைப்பு 1980-களில் சில ஆராய்ச்சிகளைக் கொண்டு ஒரு நாளைக்கு உணவில் இருக்கும் கொலஸ்ட்ரால் 300 மிகி-க்கு அதிகமாக எடுக்கக்கூடாது, அப்படி எடுத்தால் இதயத்துக்கு ஆபத்து என்று கூறினார்கள். ஆனால் இப்படியான ஒன்றை சரியான ஆய்வை மேற்கொண்டு அவர்கள் வெளியிடவில்லை, அறிவியல் அடிப்படை ஏதும் இல்லாமல் திடீரென்று வெளியிட்ட ஒன்றாகும். இதை கொண்டு தான் மக்களிடையே முட்டையின் மீது ஒரு பயம் வரத் தொடங்கியது.
முதலில் முட்டையில் உள்ள சத்துக்களை தெரிந்து கொள்ள வேண்டும். முட்டையில் வெள்ளைக்கரு, மஞ்சள்கரு என இரண்டு பகுதி உள்ளது. இதில் முட்டையின் வெள்ளைக்கருவில் உயர்தரமான புரோட்டீன் 6 கிராம் உள்ளது. இந்த வகையான தரமான புரோட்டீன் வேறு எந்த உணவிலும் இல்லை. அதனால் தான் மற்ற உணவுகளின் புரோட்டீனின் தரத்தை முட்டையின் புரோட்டீனுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். அவ்வளவு உயரிய புரோட்டீன் ஒரு முழு முட்டையில் உள்ளது. அதேப் போல் மஞ்சள் கருவை எடுத்துக் கொண்டால், அதில் 5.5 கிராம் கொழுப்பு உள்ளது.
நிறைய பேருக்கு கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ராலுக்கு இடையேயான வித்தியாசம் தெரிவதில்லை. கொழுப்பு என்பது வேறு, கொலஸ்ட்ரால் என்பது மில்லிகிராம் அளவில் இருக்கக்கூடிய பொருள். மேலும் இதில் சாச்சுரேட்டட் கொழுப்புக்களான கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பதாக நினைக்கிறார்கள். இந்த சாச்சுரேட்டட் கொழுப்பு இதில் வெறும் 28 சதவீதம் மட்டும் தான் உள்ளது. ஆனால் மோனோ அன் சச்சுரேட்டட் கொழுப்பான நல்ல கொழுப்பு சுமார் 40 சதவீதம் உள்ளது. சரி, கொலஸ்ட்ரால் எவ்வளவு என்றால், ஒரு முட்டையில் 180 மிகி கொலஸ்ட்ரால் தான் உள்ளது." என்று கூறினார்.
முட்டைக்கும் இதய நோய்க்கும் சம்பந்தம் உள்ளதா?
"முட்டை சாப்பிடுவதற்கும் மாரடைப்பு வருவதற்கும் தொடர்பு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதுவும் 1980 முதல் 2000 வரை சுமார் 15 ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த ஆய்வுகள் எதிலும் முட்டை அதிகமாக சாப்பிடுவதால் மாரடைப்பு வரும் அபாயம் உள்ளது என்று எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தவிர முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமா என்று துல்லியமாகவும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதிலும் எந்த சம்பந்ததும் இல்லை என்பது தெரிய வந்தது." என்று கூறினார்.
"பொதுவாக ஒரு நாளைக்கு நமது உடலுக்கு 1800-2000 மிகி கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. இது நமது உடலின் இயற்கையான தேவை. சொல்லப்போனால் கொலஸ்ட்ரால் ஒருவருக்கு மாரடைப்பை வரத் தூண்டும் பொருள் அல்ல. அது நமது உடலின் ஒவ்வொரு செல்லின் சவ்விலும் உள்ள பொருள். சொல்லப்போனால் நமது உடலே ஒரு நாளைக்கு வேண்டிய கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும்.
அதுவும் நாம் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவை உட்கொள்ளும் போது, நமது உடல் தினசரி தேவைக்கேற்ப கொலஸ்ட்ரால் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ளும். இது தெரியாமல் அமெரிக்க இதய மருத்துவர்களின் கூட்டமைப்பு ஒரு நாளைக்கு ஒருவர் 300மிகி கொலஸ்ட்ராலை மட்டும் தான் எடுக்க வேண்டும் என்று அறிவியல் ஆதாரமற்ற ஒரு வாதத்தை முன்வைத்தது. இதனால் தான் மக்களிடையே முட்டை மீது இவ்வளவு பயம் வந்தது." என்று கூறினார்.
ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?
"ஒரு நாளைக்கு ஒருவர் 3 முட்டையை சாப்பிட்டாலும், மாவுச்சத்தை குறைவாக உட்கொண்டால், உடலில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சொல்லப்போனால் ஒரு நாளைக்கு 3 முட்டையை சாப்பிட்டாலும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. உடலினுள் காயத்தை ஏற்படும் அபாயம் குறைகிறது மற்றும் இரத்த குழாய்கள் சேதப்படும் அபாயம் குறைகிறது. எனவே முட்டை ஒருவருக்கு தீங்கு விளைவிக்கிறது என்றால், அது அந்த முட்டையுடன் மாவுச்சத்தை சேர்த்து எடுக்கும் போது தானே தவிர, முட்டை தீங்கை விளைவிப்பதில்லை என்று ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமின்றி முட்டையில் கோலைன், ரிபோஃப்ளேவின், வைட்டமின் டி, வைட்டமின் பி12, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, ஃபோலேட், செலினியம், ஜிங்க் போன்ற உயர்தர நுண் சத்துக்கள் ஏராளமாக உள்ளன. ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிட்டாலே உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய நுண் சத்துக்களில் 40 சதவீதம் கிடைத்துவிடுகிறது. எனவே ஒரு நாளைக்கு தினமும் 1-2 முழு முட்டையை தாராளமாக சாப்பிடலாம். அதுவே லோ கார்ப் டயட்டில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 4-5 முட்டைகளை சாப்பிடலாம்." என்று கூறினார்.
பிராய்லர் முட்டை, நாட்டுக்கோழி முட்டை- எந்த முட்டை நல்லது?
முட்டையை எடுத்துக் கொண்டால் பிராய்லர் முட்டை நல்லதா, நாட்டுக்கோழி முட்டை நல்லதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இரண்டு முட்டைகளும் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களை கொண்டுள்ளன. ஆனால் ஒரு வித்தியாசம் நாட்டுக்கோழி முட்டையில் பிராய்லர் முட்டையை விட அதிகமா ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது ஒரு வித்தியாசம் தானே தவிர, மற்றபடி இரண்டு முட்டைகளும் உடலுக்கு நல்லது தான் என்று டாக்டர். அருண்குமார் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












