Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உடல் எடை குறையணுமா? அப்போ முட்டையை இப்படி சாப்பிடுங்கள்..!
உடல் எடையை குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் காலை உணவாக முட்டை எடுத்துக் கொள்ளலாம். அதிலும் காலை உணவு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்யும் நிலையில், அதற்கு தகுந்த உணவாக முட்டை இருக்கிறது.
முட்டையில் அளவற்ற புரதச்சத்து நமக்கு கிடைக்கும். அது நாள் முழுவதும் நமக்குத் தேவையான ஆற்றலை வழங்கும். முட்டை சாப்பிட்டால் நாள் முழுவதும் பசி கட்டுக்குள் இருக்கும். இதனால் பிற உணவுகளின் அளவு குறைகிறது என்ற அளவில் உடல் எடையை குறைக்க இது உதவியாக அமையும் இன்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முட்டைகளைச் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையைக் குறைப்பது எப்படி?
முட்டைகள் புரதத்தின் நல்ல மூலமாகக் கருதப்படுகிறது. நல்ல ஆரோக்கியத்திற்காகத் தினமும் முட்டை சாப்பிடுங்கள். தசை வளர்ச்சிக்காக ஜிம்மிற்கு செல்பவராக இருந்தாலும் சரி, மக்களின் ஆரோக்கியமான காலை உணவிற்கான தேர்வாக இருந்தாலும் சரி முட்டைதான் அனைவரின் முதல் விருப்பமாக இருக்கிறது. இருப்பினும், முட்டையைச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் ஒரு சிலர் முட்டையைச் சாப்பிடுவதில்லை.குறிப்பாக எடை குறைப்பவர்கள் முட்டையை ஒதுக்கி வைக்கிறார்கள். ஆனால் நீங்கள் பயப்பட தேவையில்லை, முட்டை சாப்பிட்டாலும் உடல் எடையைக் குறைக்க முடியும்.
முட்டையில் உள்ள சத்துக்கள்
முட்டையில் அதிக புரதம், வைட்டமின் B12, பயோட்டின் போன்ற பல சத்துக்கள் உள்ளன, இவை எடையைக் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி முட்டையில் வைட்டமின் A, B, B12, வைட்டமின் D, வைட்டமின் E போன்றவையும் நிறைந்துள்ளன. இது தவிர, இது ஃபோலேட், செலினியம் மற்றும் பல தாது உப்புகளின் நல்ல மூலமாகும். உடலில் உள்ள கூடுதல் கொழுப்பு மற்றும் கலோரிகளை குறைக்க முட்டை உதவுகிறது. உங்கள் எடையைக் குறைக்க முட்டை எவ்வாறு உதவுகிறது, அதில் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
புரதச்சத்து உணவு : புரதச்சத்து மிகுதியாக கொண்ட முட்டை சாப்பிட்டால் நம் தசைகள் வலிமை அடையும் மற்றும் உடல் உறுப்புகள் இயல்பாக செயல்பட தொடங்கும். முட்டையில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் நம் உடல் வலிமை பெற உந்துசக்தியாக அமையும் மற்றும் நமக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். இதனால் அதிகமாக பசி எடுக்காது. உடல் எடையும் குறையும்.
கொலஸ்ட்ரால் அளவு குறையும் : முட்டையில் கொழுப்புச்சத்து அதிகம் என்பதால் நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று பலர் நம்புகின்றனர். ஆனால், இது தவறான கண்ணோட்டம் ஆகும். ஏனென்றால் முட்டையில் இருப்பது நல்ல கொழுப்புச் சத்து ஆகும். இதய நோய்களுக்கு இந்த கொழுப்பு காரணம் அல்ல. ஆகவே, காலை உணவாக தவறாமல் முட்டையை எடுத்துக் கொள்ளலாம். கெட்ட கொழுப்புகள் கறையும். உடல் எடையும் குறையும்.
அவித்த முட்டை நல்லது : முட்டையை வெவ்வேறு வெரைட்டியில் சாப்பிடுவது உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கலாம். ஆம்லெட், ஆஃபாயில், புல்ஃபாயில் என்று ருசிகரமான வகைகள் பல இருந்தாலும், எந்த கலவையும் இல்லாத, ஆவியில் வேக வைக்கப்பட்ட முட்டை மிகவும் சத்து வாய்ந்தது ஆகும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வேக வைத்த முட்டையைதான் சாப்பிட வேண்டும். வேண்டுமானால், அவித்த முட்டையை வெட்டி கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்.
அதேபோல அவித்த முட்டையுடன் வெங்காயம், தக்காளி, கிரேவி உள்ளிட்டவை சேர்க்கப்பட்ட முட்டை மாஸ் செய்தும் இதனை சாப்பிடலாம். சத்தானது என்று நினைத்து முட்டையை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதில் பாக்டீரியா தொற்றுகள் இருக்க வாய்ப்பு உண்டு.
தினசரி எத்தனை முட்டை சாப்பிடலாம் : ஒவ்வொரு மனிதனின் உடல் தேவை மற்றும் அவர்களுடைய ஆரோக்கிய நிலை ஆகியவற்றைப் பொருத்து எத்தனை முட்டை சாப்பிடலாம் என்ற எண்ணிக்கை மாறுபடுகிறது. எனினும், பிற பின்விளைவுகளை தவிர்க்க, சராசரியாக ஒரு நபர் நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை சாப்பிடலாம்.
கருப்பு மிளகுடன் முட்டை சாப்பிடுங்கள்
உடல் எடையைக் குறைக்க, நீங்கள் முட்டையுடன் கருப்பு மிளகை சேர்த்து சாப்பிட வேண்டும். கருப்பு மிளகில் பைபரின் உள்ளது. இது கொழுப்பு உயிரணுக்கள் உருவாவதை தடுக்கிறது. வேகவைத்த முட்டையுடன் கருப்பு மிளகை சேர்த்து சாப்பிடுவது உடல் எடை விரைவாகக் குறைப்பதற்கு உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications