Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
உங்க நகங்கள் இப்படி இருக்கா? அப்ப உடம்புல கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்...
High Cholesterol Symptoms In Tamil: தற்போது நிறைய பேரின் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது. இப்படி கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதனால் தான் மாரடைப்பால் நிறைய பேர் மரணத்தை சந்திக்கின்றனர். கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் உள்ள ஒரு மெழுகு போன்ற பிசுபிசுப்பான பொருள். ஒருவரது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் இருக்க வேண்டியது அவசியம் தான்.
ஆனால் அது அளவுக்கு அதிகமாகும் போது, இரத்தக்குழாய்களில் படித்து, இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்தி பல ஆபத்தான பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும். இப்படி கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு காரணம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும், உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும் தான். ஒருவரது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை நமது விரல் நகங்களிலேயே வெளிக்காட்டும் என்பது தெரியுமா?

கீழே உடலில் கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாக இருந்தால் நகங்களில் எந்த மாதிரியான மாற்றங்கள் தெரியும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. உங்களில் நகங்களில் இப்படியான மாற்றங்கள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள தொடங்குங்கள்.
1. நகங்களில் கோடுகள்
உங்களின் நகங்களில் வழக்கத்திற்கு மாறாக கோடுகள் தெரிகிறதா? பொதுவாக நகங்களில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலும் கொலஸ்ட்ரால் அல்லது இதயப் பிரச்சனை போன்ற ஒரு தீவிரப் பிரச்சனையால் ஏற்படலாம். அதுவும் ஒனிகோரெக்ஸிஸ் என்று அழைக்கப்படும் நகங்களில் ஏற்படும் இந்தக் கோடுகள் ஊட்டச்சத்து குறைபாடுகுள் மற்றும் இரத்த சோகை போன்றவ ஆரோக்கிய பிரச்சனைகளாலும் ஏற்படலாம்.
2. நிற மாற்றம் அல்லது அடர் நிற கோடுகள்
விரல் நகங்களில் அடர் நிற கோடுகள் அல்லது நகங்கள் நிறம் மாறி காணப்பட்டால், அது இரத்தத்தில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் காரணமாக இருக்கலாம். ஏனெனில் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, அது இரத்த ஓட்டத்தை பாதித்து, நகங்களில் இப்படியான மாற்றங்களை உண்டாக்குகின்றன.
3. வளைந்த நகங்கள்
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது நகங்களை பாதிக்கும். முக்கியமாக இது நகங்களின் முனைப்பகுதியை பஞ்சு போல மாற்றி, வளையச் செய்யும். எனவே உங்களின் விரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வளைந்து இருப்பதைக் கண்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. ஊதா நிற நகங்கள்
உங்கள் விரல் நகங்கள் ஊதா அல்லது நீல நிறத்தில் காணப்படுகிறதா? அப்படியானால் உங்கள் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கலாம். ஆகவே உங்கள் நகங்கள் திடீரென்று ஊதா நிறத்தில் காணப்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
5. எளிதில் உடையக்கூடிய அல்லது பலவீனமான நகங்கள்
உங்கள் நகங்கள் எளிதில் உடையக்கூடியவாறு உள்ளதா அல்லது மிகவும் பலவீனமாக உள்ளதா? அப்படியானால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எப்போது ஒருவரது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளதோ, அப்போது உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல், நகங்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய், பலவீனமாக மாறும்.
6. மெதுவான நக வளர்ச்சி
உங்களுக்கு நகங்கள் மிகவும் மெதுவாக வளர்கிறதா? அப்படியானால் உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் காரணமாக, நகங்களுக்கு இரத்த ஓட்டம் குறைவாக இருப்பது தான். எனவே நக வளர்ச்சி குறைவாக இருந்தால், உடனே அதை கவனியுங்கள்.
7. வெளிரிய நகங்கள்
ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் மிகவும் அதிகமாக இருந்தால், நகங்கள் வெளுத்துப் போய் இருக்கும். வெளிரிய நகங்கள் (சயனோசிஸ் எனப்படும் ஒரு நிலை) அதிக கொலஸ்ட்ரால் காரணமாக தமனிகளில் ஏற்படும் அடைப்புகளால் இரத்த ஓட்டம் குறைந்திருப்பதைக் குறிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











