Latest Updates
-
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
மாரடைப்பை தூண்டும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த பழங்களை அதிகமா வாங்கி சாப்பிடுங்க...
Summer Fruits For High Cholesterol In Tamil: கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற ஒரு பிசுபிசுப்பான கொழுப்பு பொருள். இது நமது உடல் செல்களில் காணப்படுகிறது. இந்த கொலஸ்ட்ரால் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது. இந்த கொலஸ்ட்ரால் வெறும் உணவுகள் மூலமாக மட்டும் நமக்கு கிடைப்பதில்லை. நமது கல்லீரலும் இந்த கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது.
கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால். இவற்றில் கெட்ட கொலஸ்ட்ரால் என்னும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் மிகவும் ஆபத்தானது. இது உடலில் அளவுக்கு அதிகமானால், அந்த கொலஸ்ட்ரால் இரத்தக் குழாய்களில் படிந்து, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, விரைவில் மாரடைப்பை வரத் தூண்டும்.

இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனையால் உலகளவில் ஏராளமானோர் அவதிப்பட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையானது பெரும்பாலும் நாம் உண்ணும் உணவுகள் மூலமாக ஏற்படுகிறது. எப்படி உணவுகளால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறதோ, அதேப் போல் ஒருசில உணவுகளின் மூலமே கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம்.
அதுவும் தற்போது கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் கோடைக்கால பழங்களும் மார்கெட்டுகளில் விலைக் குறைவில் அதிகம் விற்கப்பட்டு வருகிறது. இந்த கோடைக்கால பழங்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுவதோடு மட்டுமின்றி, மாரடைப்பைத் தூண்டும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவுகின்றன. இப்போது அந்த பழங்கள் எவையென்பதைக் காண்போம்.
பப்பாளி
பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதிப் பொருள், செரிமானத்திற்கு உதவி புரிவதோடு, கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து கொலஸ்ட்ராலை எதிர்த்துப் போராட உதவுகிறது. கோடையில் மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய இந்த பப்பாளியை தினசரி உணவில் சேர்த்து வந்தால், கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுப்பதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும்.
கிவி
கிவி பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது கொலஸ்ட்ராலை திறம்பட எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது. எப்படியெனில் இந்த நார்ச்சத்தானது கொலஸ்டராலுடன் இணைந்து, இரத்த நாளங்களில் படிவதைத் தடுக்கிறது. எனவே இதயம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த விரும்பினால், கிவி பழத்தை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.
தர்பூசணி
கோடையில் விலைக் குறைவில் தெருவோரங்களில் ஆங்காங்கு விற்கப்படும் ஒரு பழம் தான் தர்பூசணி. இந்த தர்பூசணி தாகத்தைத் தணிப்பதுடன், இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதற்கு அதில் உள்ள லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு தான் காரணம். இது தான் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருப்பதால், கோடையில் சாப்பிட ஏற்ற மிகச்சிறந்த ஸ்நாக்ஸாகவும் இருக்கும்.
அன்னாசி
அன்னாசிப் பழத்தில் புரோமெலைன் என்னும் நொதி பொருள் அதிகம் உள்ளது. இது கொலஸ்ட்ரால் மற்றும் உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது செரிமானத்திற்கும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே கோடையில் இதயத்தை ஆரோக்கியமாகவும், உடலை நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ள விரும்பினால், அன்னாசிப் பழத்தை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.
சிட்ரஸ் பழங்கள்
எலுமிச்சை, ஆரஞ்சு, கிரேப் ஃபுரூட், சாத்துக்குடி போன்றவற்றில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளன. இது கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இது இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கூடுதலாக இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.
அவகேடோ
அவகேடோ என்னும் வெண்ணெய் பழத்தில், அதன் பெயருக்கு ஏற்ப மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாக உள்ளன. இது இதயத்திற்கு நம்பமுடியாத அளவில் நன்மைகளை அளிக்கின்றன. மேலும் இந்த வகை கொலஸ்ட்ராலுக்கு கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றல் உள்ளன. அதே வேளையில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் உதவுகின்றன. முக்கியமாக அவகேடோ உடல் சூட்டைக் குறைக்கக்கூடியது. எனவே இப்பழத்தை கோடையில் சாப்பிடுவதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதோடு, இதயத்தை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
முலாம் பழம்
முலாம் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக ப்ளேவோனாய்டுகள் அதிகமாக உள்ளன. இவை உடலில் உள்ள அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பதன் மூலம் கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றன. இந்த முலாம் பழத்தை கோடையில் உட்கொண்டால், உடல் குளிர்ச்சியுடனும், நீரேற்றத்துடனும் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் கட்டுப்பட்டு இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பழங்கள் அனைத்தும் கோடையில் அதிகம் கிடைக்கக்கூடிய பழங்களாகும். கொலஸ்ட்ரால் பிரச்சனையைக் கொண்டவர்கள், இந்த பழங்களை அதிகம் உட்கொண்டு வந்தால், கொலஸ்ட்ரால் கட்டுப்படுவதோடு, இதயம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications