Latest Updates
-
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம்
சர்க்கரை நோயை குணப்படுத்தும் தொட்டாச் சிணுங்கி!! அதனை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
தொட்டாச் சிணுங்கியின் மருத்துவ நன்மைகள் மற்றும் அவற்றின் பயன்கள் இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
தொட்டால்சிணுங்கி, பெயரைக்கேட்டாலே தெரிகிறதல்லவா, நாம் கண்ணால் காணும் உயிர்ப்புள்ள தன்மை கொண்ட தாவரம். எல்லா தாவரங்களுக்கும், மரங்களுக்கும் உயிர் உண்டு, அதனால்தான் அவை, வளர்ந்து, மலர்ந்து, காய் காய்த்து பழங்களைத் தந்து, மனிதர்களுக்கு நன்மை தருகின்றன.
ஆயினும், மனிதர்களின் தொடுதலில், அல்லது சற்று பெரிய அளவில் காற்று வீசினால் கூட, இலைகளை சுருக்கிகொள்ளும் குணம் படைத்த ஒரே தாவரம், தொட்டால்சிணுங்கி மட்டும்தான்.
ஆனால், இதன் முழுமையான பலன்கள் தெரியாததால், இந்தச்செடியை இதன் தொடுதலில் உள்ள அதிசயத்திற்காக மட்டும் நாம் நினைக்கிறோம், அல்லது சிறிய அளவிலான நட்பின் கிண்டல்களைக்கூட தாங்க முடியாதவர்களை, தொட்டால்சிணுங்கி என்று கூறி அவர்களை ஒதுக்கிவைக்கிறோம், அவர்களை மட்டுமா? மருத்துவ குணத்திலும், மனிதர்களின் மனத்தை செம்மைப்படுத்தவும் பயன்தரும் இந்த அரிய மூலிகையையும்தான்.
தொட்டால்சிணுங்கி செடி, நீர்ப்பாங்கான இடங்களில், ஆற்றங்கரை ஓரங்களில் எல்லாம் தானாக வளரக்கூடியது. மழைக் காலங்களில் தரையில் அடர்ந்து படரும் இந்தச்செடி, மிக நுண்ணிய காந்த ஆற்றல் கொண்ட தன்மைமிக்கது. மனிதர்களுக்கு உடல் பிணி மட்டுமல்லாமல், மனப்பிணியையும் போக்கும் ஆற்றல்மிக்கது.

ஆயினும் ஆச்சரியம் என்னவென்றால், இந்தச்செடி தெய்வீகத்தன்மை கொண்டதால், நாம் தேடும் சமயம் நமக்கு அருகில் தொட்டால்சிணுங்கி செடி இருந்தாலும், நம் மனதில் அந்தச்செடி அங்கு இருப்பதே தோன்றாது, வேறு எங்கோ தேடிக்கொண்டிருப்போம், நம்முடைய மனதில் நல்ல எண்ணங்களில் உள்ள நிம்மதியை, அமைதியை உணராமல், வெளியில் காசு கொடுத்து, கார்ப்பரேட் சாமியார்களிடம் கிடைக்கும் என்று தேடுகிறோமே, அதுபோல!
தொட்டால்சிணுங்கி தெய்வீக மூலிகை.
தொட்டால்சிணுங்கி செடியை துளசி போல வீடுகளில் வளர்த்துவரலாம். வீடுகளில் எதிர்மறை சக்திகளை வெளியேற்றி, நேர் சக்தி எண்ணங்களை உருவாக்கும் ஆற்றல்மிக்கது.
தினமும் குளித்தவுடன், துளசிமாடம் சுற்றிவரும் பெண்கள் மற்றும் ஆண்கள், இந்த தொட்டால்சிணுங்கி செடியை பவ்யமாக, கோமாதா எனக் கொண்டாடும் பசுமாட்டை எப்படித் தொட்டு வணங்குவோமா, அந்த நிலையில், தொட்டு வணங்கிவர, இதன் உயிர் ஆற்றல், உடலில் நுண் அதிர்வலைகளாக ஊடுருவி, சில மாதங்களில் மனதில் உள்ள நச்சு எண்ணங்கள் எல்லாம் நீங்கி மனம் ஒரு நிலையில் சீராக இயங்க ஆரம்பிக்கும்.
அந்த சமயத்தில் நன்மை தரும் எண்ணங்கள் யாவும் வலிமையாகி, நினைத்தது எல்லாம் நல்லவண்ணம் நடக்கும்.
தொட்டால்சிணுங்கி வேரை, சித்த மருத்துவத்தில் உடல்பிணி மருந்தாகவும், மாந்தரீகத்தில் மனப்பிணி தீர்க்கவும்,இன்னல்கள் களையவும் பயன்படுத்துவர்.
தொட்டால்சிணுங்கியின் இலை மற்றும் வேர்கள் அதிக பலனும் சக்தியும்மிக்கது.

சிறு நீர் எரிச்சல் :
தொட்டால்சிணுங்கி இலையை அரைத்து, தினமும் காலையில் தயிரில் கலந்து சாப்பிட்டுவர, உடல் சூடு குறையும், அதனால் ஏற்பட்ட, சிறுநீர் எரிச்சல் குணமாகும். இலைப்பொடியை தினமும் இரவில் பாலில் கலந்து பருகிவரவேண்டும்.
தொட்டால்சிணுங்கி வேரை நன்கு நசுக்கி, தண்ணீர் விட்டு காய்ச்சி, தண்ணீர் மூன்றில் ஒரு பாகமாக சுருங்கியதும், அந்த நீரை தினமும் பருகிவர, பெரியவர்களுக்கு ஏற்படும் சிறுநீர் அடைப்பு போன்ற வியாதிகள் குணமாகும்.
இதுவே, உடல் தளர்ச்சி நீக்கி, உடலுக்கு வலுவும் தரும் ஊட்டக்குடிநீராகவும் பலன் தரும்.

சர்க்கரை பாதிப்புகள் நீங்க
தொட்டால்சிணுங்கி இலைகளை வெயிலில் உலர்த்தி, அதை அரைத்து பொடியாக்கி, அதேபோல தொட்டால்சிணுங்கி வேரையும் வெயிலில் உலர்த்தி பொடியாக்கி, இரண்டையும் கலந்து வைத்துக்கொண்டு, அரை தேக்கரண்டி அளவு தினமும் இருவேளை சாப்பிட்டுவர, சர்க்கரை பாதிப்புகள் விலகும்.
இந்தக்கலவையையே, பாலில் கலந்து வருகிவர, மூல வியாதிகள் சரியாகும்.

வீக்கம் குறைய :
வீக்கங்கள் கரைய தொட்டால்சிணுங்கி இலையை அரைத்து பற்று போல தடவிவர, மூட்டு வீக்கங்கள் உள்ளிட்ட வீக்கங்கள் மறையும். ஆறாத புண்களுக்கு, தொட்டால்சிணுங்கி சாற்றை இட்டு, அதன் மேல் நசுக்கிய தொட்டால்சிணுங்கி இலைகளை வைத்து கட்டிவர, புண்கள் ஆறும். ஆசனப்புண்களும் குணமாகும். பெண்மணிகளின் மார்பக வீக்கத்தையும் சரிசெய்யும் ஆற்றல்மிக்கது.

வாதம் குணமாக :
தொட்டால்சிணுங்கி இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து, அதை இளஞ்சூட்டில் இடுப்பின் பின்புறம் சிறிது சிறிதாக ஊற்றிவர, இடுப்பு வலி குணமாகும்.
தொட்டால்சிணுங்கி இலையை அரைத்து, குளங்களில் கிடைக்கும் களிமண்ணுடன் சேர்த்து வாத வீக்கம் எனப்படும், மூட்டு, இடுப்பு, கால் பகுதிகளில் ஏற்படும் வீக்கங்களில் தடவி வர, அவை நீங்கும்.

மாத விடாய் :
தொட்டால்சிணுங்கி இலைகளை சேகரித்து, இலைகளோடு, சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கலந்து அரைத்து, பெண்கள் மோரில் கலந்து பருகிவர, பெண்களுக்கு மாத விலக்கு சமயங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு போன்றவை குணமாகும்.

தேமல் படை போன்றவை நீங்க
தொட்டால்சிணுங்கி இலைச்சாறு எடுத்து, அந்தச் சாற்றை தேமல் படை மீது தடவி வர, நெடுநாட்களாக இருந்து மனதளவில் துன்பம் தந்துகொண்டிருந்த அவை எல்லாம் மறையும்.

தொட்டால்சிணுங்கி சட்டை.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா, ஆமாம், தற்காலத்தில் இயற்கையை செயற்கையுடன் இணைத்து, கால நிலைக்கேற்ப புதிய கண்டுபிடிப்புகள் ஆங்காங்கே வெளியாவது நாம் அறிந்ததுதான். அந்தவகையில்தான் இந்த சட்டை. இந்திய மாணவர்களின் தயாரிப்பான இந்த சட்டை, சிறந்த உயிரியல் தொழில்நுட்ப ஆடைத்தயாரிப்பாக, ஐரோப்பிய ஆடை வடிவமைப்பு சங்கத்தின் வெள்ளி விருதை வென்றதாகும்.
தாவரங்கள் பொதுவாக கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்துக்கொண்டு, ஆக்சிஜனை வெளியிடும், இதுதான் மனிதனுக்கு சுவாசிக்க பயனாகிறது, இந்த வகையில் ஒரு சிறந்த ஆக்சிஜன் வெளிப்பெருக்கியாக திகழ்கிறது, தொட்டால்சிணுங்கி. எனவே, இந்தச் செடியின் இலைகளுடன் பருத்தி நூலை இணைத்து அசாமில் உள்ள ஐஐடி மாணவர் ஆடை வடிவமைப்பு பேராசிரியர் ஒருவருடன் இணைந்து, இந்த உயிரியல் சட்டையை உருவாக்கியுள்ளார்.
என்ன ஸ்பெசல் இந்த சட்டையில்?
தொட்டால்சிணுங்கி ஆடை கால சூழ்நிலைக்கேற்ப வெளிப்புற தன்மைக்கு ஏற்ற வகையில் மாறும் தன்மைமிக்கது. சுவாசிக்க ஆக்சிஜன் குறைவாக உள்ள இடங்களில், அதனை சரிசெய்து மனிதனுக்கு ஆக்சிஜனை சீராக வழங்கும் ஆற்றல்மிக்கது. வியர்வையில் அதிகம் சட்டையெல்லாம் நனைந்துவிடும் பாதிப்புள்ளவர்கள் எல்லாம், இந்த சட்டையை அணிந்தால், வியர்வை பாதிப்புகள் விலகிவிடும்.



Click it and Unblock the Notifications