Latest Updates
-
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! -
இந்த 4 ராசி பெண்கள் ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்குள் கருமையை போக்கணுமா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
வாஸ்து படி கேஸ் அடுப்பு அருகில் வைக்கக்கூடாத பொருட்கள் - இது துரதிர்ஷ்டம் மட்டுமல்ல ஆபத்தும் கூட -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு சாப்பிடுங்க..
மாதுளை பழத்தை விரும்பி சாப்பிடுபவரா நீங்க? அப்ப உங்களுக்கான முக்கிய செய்திதான் இது...!
நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உணவு முறைகளைக் கண்காணிப்பது மிகவும் அவசியம். வயதுக்கு ஏற்ப நல்ல இருதய ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது.
நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உணவு முறைகளைக் கண்காணிப்பது மிகவும் அவசியம். வயதுக்கு ஏற்ப நல்ல இருதய ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. இதயப் பிரச்சினை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு மூன்று மாதுளைப் பழங்களை உட்கொள்ள வேண்டும், ஏனெனில் அவை இதயத்திற்கு பல முக்கிய நன்மைகளை அளிக்கும்.

உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 3 மாதுளை பழங்களை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள். அதன் முழுப் பலன்களைப் பெற, உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மற்ற வாழ்க்கை முறையிலும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். மாதுளை எப்படி உங்கள் இதயத்தை பாதுகாக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மாதுளை ஜூஸ்
மாதுளை சாறில் க்ரீன் டீ அல்லது ரெட் ஒயின் போன்றவற்றில் இருப்பதை விட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் உள்ளது. மாதுளை சாரில் உள்ள பாலிஃபீனால்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பல இதய நன்மைகளை வழங்குகின்றன, இது கெட்ட கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதத்தை (எல்டிஎல்) குறைக்கிறது. அதன் அடர் சிவப்பு நிறத்துடன், மாதுளை சாறு பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, மற்ற பழச்சாறுகளை விட அதிக ஆக்ஸிஜனேற்றத்தையும் கொண்டுள்ளது. அரை கப் மாதுளையில் 80 கலோரிகள், 16 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் மூன்று கிராம் நார்ச்சத்து உள்ளது. மாதுளையில் ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் கே போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதய ஆரோக்கியம்
மாதுளை தமனிகளைச் சுத்தப்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த நாளங்களில் அடைப்பைத் தடுக்கவும் உதவுகிறது, இதன் மூலம் நல்ல இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது.

இரத்தத்தை மெலிதாக்குகிறது
மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், 'உங்கள் இரத்தத்தை மெல்லியதாக' மாற்ற உதவுகின்றன. மாதுளையின் விதைகள் உங்கள் இரத்த தட்டுக்கள் உறைவதையத் தடுக்கிறது.
இரண்டு வகையான இரத்தக் கட்டிகள் உள்ளன, முதலாவதாக ஒரு வெட்டு அல்லது காயத்தின் போது மீட்சியை விரைவுபடுதாமல் இருப்பது, இரண்டாவதாக இதயம், தமனிகள் அல்லது உடலின் வேறு எங்கும் ஏதேனும் உள் உறைவு ஏற்படுவது. இந்த வகை கட்டிகள் நல்லதல்ல மற்றும் உயிருக்கு ஆபத்தானவை.

தமனி அடைப்புகளை நீக்குகிறது
வயது அதிகரிக்கும் போது நாம் வாழும் வாழ்க்கை முறை, கொலஸ்ட்ரால் காரணமாக நமது தமனிகளின் சுவர்கள் கடினமாகி, சில நேரங்களில் அடைப்புகளை ஏற்படுத்தும். மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை கெட்ட கொலஸ்ட்ராலை ஆக்சிஜனேற்றம் செய்வதைத் தடுக்கிறது. எனவே மாதுளை சாப்பிடுவது அதிகப்படியான கொழுப்பை நீக்குகிறது மற்றும் தமனி சுவர்கள் கடினமாவதைத் தடுக்கிறது.

ஆக்சிஜன் மாஸ்க்
மாதுளை நமது இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை பம்ப் செய்ய உதவுகிறது. மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, கொழுப்பைக் குறைத்து, ரத்தம் உறைவதைத் தடுக்கிறது. இவை அனைத்தும் இறுதியில் இரத்தம் எந்த தடையும் இல்லாமல் உடல் முழுவதும் ஓட உதவுகிறது, இதனால் உங்கள் உடலில் ஆக்ஸிஜனின் அளவை மேம்படுகிறது.



Click it and Unblock the Notifications
