Latest Updates
-
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...!
இதய நோய் வரக்கூடாதா? அப்படின்னா இந்த புரோட்டீன் உணவுகளை அதிகமா சாப்பிடுங்க...
Heart Healthy Foods In Tamil: தற்போது உலகளவில் இதய நோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி அதிகரித்து வரும் இதயம் தொடர்பான பிரச்சனைகளால், ஒவ்வொருவரும் தங்களின் இதய ஆரோக்கியத்தின் மீது வழக்கத்தை விட கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
அதுவும் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இதய நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனின் கூற்றுப்படி, உலகளவில் 110 மில்லியனுக்கும் அதிகமான ஆண்களும், 80 மில்லியனுக்கும் அதிகமான பெண்களும் இதய நோயுடன் வாழ்கின்றனர்.

இதய நோய் ஒருவருக்கு வர முதன்மையான காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான். இவற்றில் சரியான மாற்றங்களை செய்தால், அதன் அபாயத்தைக் குறைக்கலாம். இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு சத்துக்கள் மிகவும் இன்றியமையாதவை. அதில் ஒன்று தான் புரோட்டீன்.
பலரும் புரோட்டீன் தசைகளின் வளர்ச்சிக்கு மட்டும் தான் அவசியமானவையாக நினைக்கின்றனர். ஆனால் இதயம் வலிமையாகவும், ஃபிட்டாகவும் இருக்க புரோட்டீனும் அவசியம். குறைவான புரோட்டீன் நிறைந்த உணவுமுறையானது இதய நோயுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே இதய நோய் வராமல் இருக்கவும், இதயம் ஆரோக்கியமாகவும் இருக்க புரோட்டீன் உணவுகளை தினமும் உணவில் சேர்த்து வாருங்கள். இப்போது இதய நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் புரோட்டீன் உணவுகள் எவையென்பதைக் காண்போம்.
கொண்டைக்கடலை
கொண்டைக்கடலையில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துள்ள உணவானது உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர்கொலஸ்ட்ரால் போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது. மேலும் கொண்டைக்கடலையில் மக்னீசியம், பொட்டாசியம், ஜிங்க் மற்றும் செலினியம் போன்ற பிற ஆரோக்கியமான சத்துக்களும் இருப்பதால், இவை இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகின்றன.
மீன்
மீனில் புரோட்டீன் அதிகமாக உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். மேலும் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அதிகமாக உள்ளன. இந்த அமிலங்களானது இதய ஆரோக்கியத்தை பராமரிக்க பெரிதும் உதவுகின்றன. மீன்களை அடிக்கடி உட்கொண்டு வந்தவர்களுக்கு இதய நோயின் அபாயம் குறைவதாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூறுகிறது. எனவே இதய நோய்களை தடுக்க விரும்பினால், மீன்களை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். அதுவும் எண்ணெயில் பொரித்து சாப்பிடாமல் குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
நட்ஸ்
நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் போன்றவை அதிகமாக உள்ளன. மேலும் இவற்றில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான இதய ஆரோக்கியத்தில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. அதுவும் நட்ஸ்களை சாப்பிடுவதாக இருந்தால், உப்பு சேர்க்காமல் சாப்பிடுங்கள். அதுவே இதயத்திற்கு நல்லது. உப்புடன் சாப்பிட்டால், அது இதயத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, இதய நோயின் அபாயத்தை தீவிரமாக்கிவிடும்.
விதைகள்
சியா விதைகள், ஆளி விதைகள், எள்ளு விதைகள், சூரிய காந்தி விதைகள் போன்றவற்றில் ஆரோக்கியமான கொழுப்புக்களும், கனிமச்சத்துக்களும் உள்ளன. மேலும் இவற்றில் புரோட்டீன் மற்றும் இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் வைட்டமின்கள் உள்ளன. இந்த விதைகளை தினசரி உணவில் சேர்த்து வந்தால், இதய நோயின் அபாயத்தைத் தடுக்க முடியும்.
பருப்பு வகைகள்
பருப்பு வகைகளில் புரோட்டீன் அதிகமாக உள்ளன. எனவே சைவ பிரியர்கள் தங்களின் தினசரி புரோட்டீன் தேவையை பருப்பு வகைகளின் மூலம் பெறலாம். பருப்பு வகைகளில் புரோட்டீன் மட்டுமின்றி, மக்னீசியம், இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகமாக உள்ளன. இவை அனைத்துமே இதய ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிப்பவையாகும்.
எனவே இதயம் ஆரோக்கியமாக நோயின்றி இருக்க வேண்டுமானால், முதலில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அதோடு புகைப்பழக்கம், மது பழக்கம் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால் தற்போதைய பலவிதமான நோய்களின் அபாயத்திற்கு இந்த செயல்பாடுகள் தான் முக்கிய காரணங்களாக உள்ளன. ஆகவே இதய நோய் வரக்கூடாதெனில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், உணவு பழக்கத்தையும் மேற்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











