Latest Updates
-
பட்டாணி சாதமும், கத்திரிக்காய் கிரேவியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்று ஒரே நாளில் உருவாகும் ஹன்ஸ், கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
சர்க்கரை நோயாளிகளுக்கான அவல் இட்லியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும்
உங்களுக்கு ஹை கொலஸ்ட்ரால் இருக்கா? மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப சமையலில் இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுங்க...
Heart Healthy Cooking Oils In Tamil: கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் உள்ள மெழுகு போன்ற பொருள். இந்த கொலஸ்ட்ரால் பித்தம், வைட்டமின் டி, செல் சவ்வு மற்றும் ஸ்டெராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் உடலுக்கு தேவையான கொலஸ்ட்ரால் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், விலங்கு அடிப்படையிலான உணவுகளின் மூலமும், சமையலில் சேர்க்கும் எண்ணெய்களின் மூலமும் உடலில் கொலஸ்ட்ரால் சேரக்கூடும்.
அதுவும், ட்ரான்ஸ் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகள் கல்லீரலில் அதிக கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யத் தூண்டும். இதில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் தான் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். உதாரணமாக, சமையலில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த தேங்காய் எண்ணெய், பாம் ஆயில், பாம் கெர்னல் ஆயில் போன்றவற்றை சேர்க்கும் போது, அது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை சட்டென்று அதிகரித்துவிடும்.

இந்த எண்ணெய்களை தொடர்ந்து உணவில் சேர்த்து வரும் போது, ஒரு கட்டத்தில் இரத்தக்குழாய்களில் கொழுப்புக்கள் படியத் தொடங்கி, நாளடைவில் அவை அடைப்பை ஏற்படுத்தி, இதய நோய்களின் அபாயத்தை உண்டாக்கிவிடும். எனவே வயது அதிகரிக்கும் போது, ஒருவர் சமையலில் சேர்க்க எந்த எண்ணெய் சிறந்தது என்பதை அறிந்து அவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.
அதுவும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், உடனே சரியான எண்ணெயை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். கீழே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் சமையலில் எந்த எண்ணெயை சேர்க்கலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. நல்லெண்ணெய்
எள்ளு விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் மற்ற எண்ணெய்களை விட கொழுப்பு குறைவு. கூடுதலாக இந்த எண்ணெயில் சீரான அளவில் கொழுப்புக்கள் உள்ளன. அதுவும் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயில் 5கி மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பும், 2கி சாச்சுரேட்டட் கொழுப்பும் உள்ளது. இந்த நல்லெண்ணெயை தினசரி சமையலில் பயன்படுத்தலாம். ஆனால் இதன் வலுவான ப்ளேவர் சில உணவுகளின் சுவையில் இடையூறை ஏற்படுத்தலாம்.
2. கடலை எண்ணெய்
வேர்க்கடலையில் இருந்து பெறப்படுவது தான் கடலை எண்ணெய். இந்த கடலை எண்ணெயின் மணம் சில உணவுகளின் சுவையை இன்னும் அதிகரிக்கும். எனவே இந்த எண்ணெயைக் கொண்டு எந்த வகையான சமையலையும் செய்யலாம். ஆனால் இந்த எண்ணெயைக் கொண்டு உணவுகளை டீப் ப்ரை செய்யும் போது, அது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, உடலுக்கு கேடு விளைவிக்கும். எனவே இந்த எண்ணெயில் உணவுகளை பொரிக்காதீர்கள்.
3. ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் கொலஸ்ட்ரால் இல்லை. மேலும் எண்ணெய்களிலேயே மிகவும் ஆரோக்கியமான எண்ணெயும் கூட. அதுவும் கோல்ட் பிரஸ்டு ஆலிவ் ஆயில் உயர்தரம் வாய்ந்த எண்ணெய். சாதாரணமான ஆலிவ் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு குணங்கள் இல்லாவிட்டாலும், அது இன்னும் சத்தானது மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளை உள்ளடக்கியது. இருப்பினும், எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெயின் புகை புள்ளி மிக அதிகமாக இல்லை. எனவே, மிதமான வெப்பத்தில் மெதுவாக சமைக்கும் போது, சாலட்டின் மேல் அலங்கரிக்கும் போது அல்லது பாஸ்தாவிற்கு மேல் பூச்சுகளாகப் பயன்படுத்தும் போது இது சிறப்பாக செயல்படும்.
4. சியா விதை எண்ணெய்
இதயத்திற்கு ஆரோக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் உற்பத்திக்கு பங்களிக்கும் ஆல்பா-லினோலெனிக் அமிலம், சியா விதை எண்ணெய்களில் அதிகம் உள்ளன. அதன் மிக அதிக புகை புள்ளி மற்றும் மென்மையான சுவை காரணமாக இதை எந்த வகை உணவிலும் பயன்படுத்தலாம். சியா விதைகளில் அதிக நார்ச்சத்து உள்ளது. ஆனால் இதன் எண்ணெயில் அது இல்லை. எனவே நார்ச்சத்து நிறைந்த எண்ணெயை தேர்வு செய்ய நினைத்தால், அதற்கு இந்த எண்ணெய் ஏற்றது அல்லது. மற்றபடி இது மிகவும் ஆரோக்கியமான எண்ணெய்களுள் ஒன்று.
5. அவகேடோ எண்ணெய்
அவகேடோ என்னும் பழத்தில் இருந்து பெறப்படுவது தான் அவகேடோ எண்ணெய். இந்த அவகேடோ எண்ணெயில் மோனாஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம். மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் இருப்பதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கூடுதலாக அவகேடோ எண்ணெயில் லுடீன் என்னும் ஆரோக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த லுடீன் கண் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. எனவே இந்த லுடீனைப் பெற விரும்பினால், அவகேடோ எண்ணெயை சமையலில் சேர்த்து வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications