Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க இதயத்துக்கு ஓய்வு தேவை-ன்னு அர்த்தமாம்.. உஷாராகிக்கோங்க...
Heart Fatigue Symptoms In Tamil: நமது உடலில் இதயம் மிகவும் முக்கியமான உறுப்பு. இதயம் ஆரோக்கியமாக செயல்பட்டால் தான், உடலுறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். ஆனால் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடுகிறது.
சொல்லப்போனால் உலகளவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக மாரடைப்பு வந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இப்படி மாரடைப்பு வந்தவர்கள் பெரும்பாலானோர் புகாரளிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் தீவிரமான உடல் சோர்வு. முக்கியமாக மாரடைப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள் இந்த பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.

அதுவும் இந்த சோர்வு சில வாரங்களும், இன்னும் சிலருக்கு ஒரு வருடம் அல்லது அதற்கு மேலும் நீடித்திருப்பதாக புகாரளிக்கின்றனர். இந்த இதய சோர்வானது அதிகப்படியான உழைப்பு, மன அழுத்தம் அல்லது அடிப்படை இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நிலைமைகளால் ஏற்படலாம். சரி, ஒருவருக்கு இதயம் மிகவும் சோர்வாக இருந்தால், அது எந்த மாதிரியான அறிகுறிகளை வெளிக்காட்டும் என்பதை இப்போது காணலாம்.
உடல் ரீதியான அறிகுறிகள்
1. மூச்சு விடுவதில் சிரமம் - ஏதேனும் வேலைகளை செய்யும் போது அல்லது படுத்துக் கொண்டிருக்கும் போது மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திப்பது.
2. நெஞ்சு அசௌகரியம் - மிதமான நெஞ்சு வலி, மார்பு பகுதியில் இறுக்கம் அல்லது அழுத்தம் போன்றவற்றை சந்திப்பது.
3. உடல் சோர்வு - தொடர்ச்சியான உடல் களைப்பு அல்லது போதுமான ஓய்வை எடுத்த பின்னரும் உடலில் ஆற்றல் இல்லாதது போன்று உணர்வது.
4. வீக்கம் - கால்கள், கணுக்கால் அல்லது பாதங்களில் திரவங்கள் தேங்கி வீக்கம் ஏற்படுவது.
5. சீரற்ற இதயத் துடிப்பு - காரணமின்றி ஒருவிதமான படபடப்பை அதிகம் சந்திப்பது
6. வியர்வை - விவரிக்க முடியாத அளவில் மிகுதியாக வியர்வை வெளியேறுவது.
நடத்தை அறிகுறிகள்
ஒருவரது இதயம் மிகுந்த சோர்வுடன் இருந்தால், நடத்தைகளில் ஒருசில அறிகுறிகள் தெரியக்கூடும். அவையாவன:
* மிகுந்த உடல் சோர்வை உணராமலேயே தினசரி செயல்பாடுகளை செய்ய முடியாமல் சிரமப்படுவது.
* இரவு நேரத்தில் தூங்க முடியாமல் சிரமத்தை சந்திப்பது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் சந்தித்தால், அந்நபரின் இதயத்திற்கு ஓய்வு உடனே அவசியம் என்று அர்த்தம். உங்களுக்கும் இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
இதய செயலிழப்பின் எச்சரிக்கை அறிகுறிகள்
ஒருவரது இதய சோர்வு அதிகரித்தால், அது ஒரு கட்டத்தில் இதய செயலிழப்பிற்கு வழிவகுக்கும். இதயம் செயலிழக்க தொடங்கப் போகிறது என்றால் பின்வரும் அறிகுறிகள் தெரியக்கூடும். அந்த அறிகுறிகளாவன:
* சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் தொடர்ச்சியான மார்பு வலி
* மயக்கம் அல்லது சுயநினைவு இழப்பு
* சரும நிறம் நீல நிறத்தில் மாறத் தொடங்குவது அல்லது வழக்கத்திற்கு மாறாக கை கால்கள் ஜில்லென்று இருப்பது
* திரவ தேக்கத்தின் காரணமாக விவரிக்கப்படாத எடை அதிகரிப்பை சந்திப்பது
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தெரிந்தால் சற்றும் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறத் தொடங்குங்கள். அதோடு வாழ்க்கை முறையில் மாற்றங்கள், போதுமான ஓய்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் விஷங்களில் ஈடுபடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications