Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
Heart Attack: பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் தோன்றும் முக்கிய அறிகுறிகள்... அலட்சியமாக இருக்காதீங்க...!
உலகளவில் அதிக மக்களின் இறப்பிற்கு முதன்மை காரணமாக இருப்பது மாரடைப்புதான். இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 448 பேர் மாரடைப்பால் இறக்கின்றனர். அதில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது. American Heart Association கூற்றுப்படி, பெண்கள் பெரும்பாலும் மாரடைப்பின் அறிகுறிகளை அமில ரிஃப்ளக்ஸ் அல்லது காய்ச்சல் போன்ற ஆபத்தில்லாத பிரச்சினைகள் என்று தவறாக கருதுகிறார்கள்.
பல பெண்கள் மாரடைப்பின் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காணத் தவறிவிடுகிறார்கள், ஏனெனில் பெண்களுக்கு தோன்றும் மாரடைப்பின் அறிகுறிகள் வழக்கமான மார்பு வலியிலிருந்து கணிசமாக வேறுபடுகின்றன. மாரடைப்பு என்பது ஒரு மருத்துவ அவசரநிலை, மேலும் இதன் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது கடுமையான சிக்கல்கள் அல்லது மரணத்தைத் தவிர்ப்பதற்கு மிகவும் முக்கியம். பெண்களுக்கு புறக்கணிக்கக் கூடாத மாரடைப்பின் அசாதாரண அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மார்பில் அசௌகரியமான அழுத்தம் அல்லது வயிறு நிரம்பி இருப்பது
மார்பு வலி என்பது மாரடைப்பின் மிகவும் பொதுவான அறிகுறியாகும். இருப்பினும், சில பெண்கள் இதை ஆண்களை விட கொஞ்சம் வித்தியாசமாக அனுபவிக்கலாம். American Heart Association கருத்துப்படி, அசௌகரியமான அழுத்தம், வயிறு நிரம்பி இருப்பது அல்லது வலி போன்ற உணர்வுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த வலி பெண்களின் மார்பின் மையத்தில் இருக்கலாம், பெரும்பாலும் இடது பக்கத்தில் தோன்றாது.
கைகள், முதுகு, கழுத்து அல்லது தாடையில் வலி
பெண்களுக்குத் தோன்றும் மாரடைப்பின் மற்றொரு தனித்துவமான அறிகுறி மேல் உடலில் வலி அல்லது அசௌகரியம் ஏற்படுவது. பெண்கள் ஒரு கை அல்லது இரண்டிலும் படிப்படியாக அல்லது திடீர் வலியை அனுபவிக்கலாம், அதே போல் முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிற்றிலும் வலி ஏற்படலாம். தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டால், இந்த வலி உங்களை எழுப்பிவிடும். இது மாரடைப்பின் வழக்கமான அறிகுறிகளிலிருந்து மிகவும் வேறுபட்டது, எனவே இதை பெண்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வயிறு வலி
சில நேரங்களில் பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன்பு வயிற்று வலி ஏற்படும். இது பெரும்பாலும் நெஞ்செரிச்சல், காய்ச்சல் அல்லது பிற குடல் பிரச்சினைகள் என்று கணிக்கப்படுகிறது. வலி சாதாரணமாக உணரப்பட்டு வயிற்றுப் பகுதியில் கடுமையான அழுத்தம் போல் உணரப்படலாம். சில பெண்கள் இதை வயிறு மீது யானை அமர்ந்திருப்பது போல இருக்கும் என்று விவரிக்கிறார்கள்.
மூச்சுத் திணறல்
பெண்களிடையே தோன்றும் மூச்சுத் திணறல் மாரடைப்பின் மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும், இது பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் அறிகுறியாகும். இது மார்பு வலியுடன் அல்லது இல்லாமல் ஏற்படலாம். உங்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ, மூச்சுத் திணறல் ஏற்பட்டாலோ, அல்லது மூச்சு விட முடியாமல் போனாலோ,உடனடியாக மருத்துவ உதவியை பெற வேண்டியது அவசியம். இந்த அறிகுறிகள் பொதுவாக பதட்டம், சோர்வு அல்லது சுவாசப் பிரச்சினை என்று நிராகரிக்கப்படுகின்றன. ஆனால் இது மாரடைப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
குளிர் வியர்வை
பதட்டமான சூழலில் குளிர் வியர்வை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான பொதுவான அறிகுறியாகும். உடற்பயிற்சி அல்லது சோர்வு காரணமாக ஏற்படும் வியர்வை என்று பெண்கள் பெரும்பாலும் இதை நிராகரிக்கின்றனர். இருப்பினும், இந்த அறிகுறியை நிராகரிக்கக்கூடாது. குளிர் வியர்வையுடன் குமட்டல் மற்றும் லேசான தலைவலி இருந்தால், உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
