Latest Updates
-
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
ஒரு மாதம் சப்பாத்தியை சாப்பிடாமல் இருந்தா.. உடம்புல என்னென்ன நடக்கும்-ன்னு தெரியுமா?
Health Tips In Tamil: தற்போது அரிசிக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் சாப்பிடுவது கோதுமையால் ஆன சப்பாத்தியைத் தான். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்போரது தினசரி உணவில் சப்பாத்தி நிச்சயம் இடம் பெற்றிருக்கும். மேலும் பெரும்பாலானோரின் வீட்டில் இரவு உணவாக சப்பாத்தி தான் இருக்கும். இப்படிப்பட்ட சப்பாத்தியை தவிர்ப்பது என்பது முடியாதது.
ஆனால் தற்போது நிறைய பேர் கோதுமை இல்லாத டயட்டை மேற்கொள்ள நினைக்கிறார்கள். ஏனெனில் கோதுமையால் க்ளுட்டன் சென்சிட்டிவிட்டி, உடல் பருமன், ஆட்டோஇம்யூன் நிலைமைகள் மற்றும் உயர் இரத்த சர்க்கரை போன்ற ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயம் உள்ளது.

இம்மாதிரியான சூழ்நிலையில் கோதுமையை உணவில் இருந்து முழுவதும் நீக்குவது நல்லதா? அப்படியே ஒரு மாதம் கோதுமை/சப்பாத்தியை சாப்பிடாமல் இருந்தால், உடலினுள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா? கோதுமையை உணவில் இருந்து நீக்குவதால் நன்மைகள், தீமைகள் என இரண்டுமே உள்ளன. இப்போது அதுக்குறித்து காண்போம்.
சப்பாத்தியை ஒரு மாதம் சாப்பிடாமல் இருந்தால் பெறும் நன்மைகள்:
1. இரத்த சர்க்கரை அளவு நிலையாக இருக்கும்
கோதுமை உடலுக்கு குளுக்கோஸை வழங்குவதில் பெரும் பங்கை வகிக்கிறது. இப்படிப்பட்ட கோதுமையை முற்றிலும் தவிர்க்கும் போது, இரத்த சர்க்கரை அளவு குறையும். குறிப்பாக உயர் இரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது க்ளுட்டோஸ் சகிப்புத்தனமை மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கும்.
2. செரிமானம் மேம்படும்
கோதுமையில் உள்ள கார்போஹைட்ரேட்டுக்களை அதிகமாக உட்கொள்ளும் போது, அது குடல் பகுதியில் அடைப்பு அல்லது செரிமானத்தை மந்தப்படுத்தி, அதன் விளைவாக வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம், குமட்டல், வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்று பிடிப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதுவே கோதுமையை குறைவாக உட்கொண்டால், அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.
3. எடை இழப்பு
சுத்திரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த வெள்ளை பிரட், பிட்சா, பர்கர், பாஸ்தா போன்றவை உடல் எடையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த வகையான உணவுகள் திருப்தியைத் தராது. மேலும் கோதுமை இல்லாத டயட்டை மேற்கொள்ளும் போது, அது கலோரி உட்கொள்ளலைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும்.
4. செலியாக் நோய் அபாயம் குறையும்
கோதுமையை உட்கொள்ளும் போது அது செலியாக் நோயின் அபாயத்தை அதிகரிக்கும். செலியாக் நோய் என்பது ஒரு ஆட்டோஇம்யூன் நோயாகும். இது மரபணு ரீதியாக வருகிறது. அதாவது பரம்பரையில் யாருக்கேனும் க்ளுட்டன் சகிப்புத்தன்மை பிரச்சனை இருந்தால், அவர்களுக்கு இந்நோய் வரும். இதனால் சிறுகுடல் மோசமாக பாதிக்கப்படும். அதுவே கோதுமையை தவிர்க்கும் போது, செலியாக் நோய் அபாயம் குறையும்.
ஆயினும் கோதுமையை உணவில் இருந்து நீக்க வேண்டுமா என்பதை தீர்மானிப்பது ஒருசில காரணிகள் தான். அதுவும் ஒருவருக்கு செலியாக் நோய் அல்லது க்ளுட்டன் சகிப்புத்தன்மை இருந்தால், அவர்கள் கோதுமையைத் தவிர்ப்பதே நல்லது. மற்றபடி தேவையில்லாமல் கோதுமையை தவிர்க்க தேவையில்லை. ஏனெனில் கோதுமையில் நார்ச்சத்து, வைட்டமின் பி, இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஆதரவளிக்கிறது.
கோதுமையை உணவில் இருந்து நீக்கினால் சந்திக்கும் பிரச்சனைகள்
1. மலச்சிக்கல் அதிகரிக்கும்
கோதுமையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், இது செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவி புரிகிறது. இப்படிப்பட்ட கோதுமையை உணவில் இருந்து முழுமையாக நீக்கும் போது, அது நாள்பட்ட மலச்சிககல் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
2. வைட்டமின் பி குறைபாடு
கோதுமையில் பி வைட்டமின்கள் உள்ளன. இந்த அத்தியாவசிய வைட்டமின் இல்லாமல் உடலால் சரியாக செயல்பட முடியாது. ஏனெனில் இந்த வைட்டமின் தான் உணவில் இருந்து ஆற்றலை உருவாக்கவும், செல்கள் மற்றும் திசுக்களை புதுப்பிக்கவும் செய்கிறது. எனவே கோதுமையை தவிர்க்கும் போது இந்த பி வைட்டமின் குறைபாடு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும்.
எனவே நீங்கள் கோதுமையை சாப்பிடுவதைத் தவிர்க்க திட்டமிட்டால், உங்கள் உணவில் கோதுமைக்கு பதிலாக திணை, குதிரைவாலி போன்ற க்ளுட்டன் இல்லாத தானியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications