உணவுகளை எப்படி விருப்பப்பட்டு சாப்பிடுவது? இதோ சில ட்ரிக்ஸ்...

Health Tips In Tamil: என்றைக்காவது சாப்பிடும் போது அதன் ருசியை சுவைத்து சாப்பிட்டு இருக்கீங்களா? சாப்பிடும் போது கவனத்துடன் சாப்பிடுவது மிகவும் முக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் பல்வேறு சமயங்களில் நாம் அப்படி செய்வதில்லை. நிறைய வேலை நேரங்களில் டென்ஷனாக இருக்கும் சமயங்களில் நாம் அப்படி உணவை ரசித்து ருசித்து சாப்பிடுவதில்லை.

உணவில் கவனம் இல்லாமல் சாப்பிடும் போது ஏகப்பட்ட பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. இதனால் வயிற்றில் வாயுத் தொல்லை, வயிறு வீக்கம், வயிற்று வலி போன்ற ஏராளமான பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். எனவே உணவை கவனத்துடன் எடுத்துக் கொள்ள எந்த மாதிரியான ட்ரிக்ஸ்களை பின்பற்றலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

Health Tips: Ways to be Mindful While Eating In Tamil

மிகையாக சாப்பிடாதீர்கள்

உங்கள் அளவுக்கு மீறி உணவை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். அதே மாதிரி சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். தாமதமாக உணவை எடுத்துக் கொள்ளும் போது நீங்கள் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே முடிந்த வரை போதுமான உணவை சரியான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி எடுத்துக் கொள்ளும் போது உணவானது நன்றாக சீரணிக்க உதவுகிறது.

வானவில் வண்ணத்தில் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள்

வானவில்லின் ஏழு வண்ணங்கள் மாதிரி வானவில் நிறத்தில் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். சிவப்பு, ஊதா, மஞ்சள், நீலம் மற்றும் வெள்ளை என்ற நிறத்தில் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த காய்கறிகள் நம் உடலுக்கு தேவையான பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. மேலும் இது உணவில் ஏற்படும் சலிப்பை போக்க உதவுகிறது.

நறுமணத்தை நுகருங்கள்

உணவில் நறுமணத்தை நுகர்வது மிகவும் அவசியம் ஆனது. உணவின் நறுமணம் உங்களுக்கு பசி உணர்வை அதிகரிக்க உதவுகிறது. கொதிக்கும் மசாலாப் பொருட்களின் நறுமணத்தை நீங்கள் நுகரலாம்.

உடலால் உணருங்கள்

உங்கள் சமையலின் சுவையை உடலால் உணருங்கள். நீங்கள் சமைக்கும் போது உடல் உணர்வுகளை வெளிக் கொண்டு வாருங்கள். இது உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை தருவதோடு உங்கள் பசி உணர்வை அதிகரிக்கவும் உதவுகிறது.

உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்

நீங்கள் அவசரமாக உணவை உண்ணும் போது சுவாசம் குறைகிறது. எனவே உணவை மெதுவாக எடுத்துக் கொள்ளுங்கள். எனவே சாப்பிடும் போது உங்கள் சுவாசத்தை கவனிப்பது மிகவும் அவசியம். எனவே உங்கள் ஆழ்ந்த சுவாசத்தை கவனித்து அதன் படி சாப்பிடுங்கள்.

சாப்பிடுவதற்கு சரியான நேரம் தேவை

அவசர அவசரமாக வேலை பார்க்கும் போதும், டீவி மற்றும் மொபைல் பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள். சாப்பிடுவதற்கு சரியான நேரம் வரும் வரை காத்திருந்து சாப்பிடுங்கள். நம் ஐம்புலன்களும் ஒருங்கிணைந்து சாப்பிடும் செரிமானம் துரிதமாக நடைபெறுகிறது. உங்கள் உணவை முழுமையாகவும் முறையாகவும் மென்று சாப்பிடுங்கள். ஒவ்வொரு வாயையும் நன்றாக ரசித்து ருசித்து மென்று சாப்பிடுங்கள். குறைந்தது 20 நிமிடங்கள் ஆவது சாப்பிடுங்கள்.

டைனிங் டேபிளை அழகுபடுத்துங்கள்

நீங்கள் சாப்பிடும் இடத்தை அழகாக வைப்பது மிகவும் அவசியம். எனவே டைனிங் டேபிளை அழகுபடுத்துங்கள். மேசையில் சில பூச்செடிகளை வைத்து அழகுபடுத்துங்கள். உங்களுக்கு பிடித்தமான இசையை கேட்டுக் கொண்டே சாப்பிடுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, August 6, 2023, 16:00 [IST]
Desktop Bottom Promotion