Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? இந்த பானங்களை தினமும் ஒரு டம்ளர் குடிங்க...
Health Tips In Tamil: நாம் தினமும் உண்ணும் உணவுகள் மற்றும் பல விஷயங்களால் உடலினுள் கழிவுகள் சேரும். இப்படி சேரும் கழிவுகளை அவ்வப்போது வெளியேற்றிவிட்டால், உடல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால் இந்த கழிவுகளை வெளியேற்றாமல் அப்படியே விட்டுவிட்டால், அது நாளடைவில் உடலினுள் பல பிரச்சனைகளை வரவழைத்துவிடும்
உடலினுள் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிறந்த வழி ஒருசில டிடாக்ஸ் பானங்களைப் பருகுவது தான். அதுவும் இந்த வகையான பானங்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி, டீ-க்கு பதிலாக குடிக்க வேண்டும். இப்படி குடிக்கும் போது, அது உடலில் உள்ள நச்சுக்களை திறம்பட வெளியேற்றும். அதோடு, இந்த வகையான பானங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும்.

நீங்கள் அந்த மாதிரியான ஒரு பானங்களைத் தான் தேடிக் கொண்டிருக்கிறீர்களால், இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து எடையைக் குறைக்க உதவி புரியும் அற்புத பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து தினமும் குடித்து வாருங்கள்.
சீரக நீர்
பெரும்பாலானோர் சீரக நீரை தினமும் வழக்கமாக குடித்து வருகிறார்கள். சீரக நீரை சாதாரண நீருக்கு பதிலாக குடிப்பது நல்லது தான். ஆனால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமானால், இரவு நேரத்தில் சீரகத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி அந்நீரில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
நெல்லிக்காய் நீர்
உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமானால், அதற்கு நெல்லிக்காய் உதவும். அதற்கு ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் கற்றாழை ஜூஸை எடுத்து, அத்துடன் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
வெந்தய நீர்
வெந்தயம் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. இது உடலை சமநிலையில் பராமரிக்க பெரிதும் உதவுகிறது. இப்படிப்பட்ட வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் உற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீருடன் வெந்தயத்தையும் சாப்பிட வேண்டும். இதனால் உடலில் உள்ள கழிவுகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக இருக்கும்.
எலுமிச்சை நீர்
எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பெரிதும் உதவுகின்றன. அதற்கு இந்த எலுமிச்சையை வெதுவெப்பான நீரில் பிழிந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். வேண்டுமானால், இதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
பட்டை நீர்
பட்டை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும் அற்புதமான பொருள் மற்றும் இது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்க பெரிதும் உதவுகின்றன. அதற்கு இந்த பட்டையை 2 துண்டு எடுத்து, நீரில் போட்டு மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரில் சிறிது எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications