Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
எப்பொழுதும் அழகாக ஜொலிக்க வேண்டுமா? அப்ப இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க...
Health Tips In Tamil: அழகான தோற்றம் என்பது எல்லாருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அதற்காக நாம் நிறைய மெனக்கெடல்களையும் செய்வதுண்டு. இருப்பினும் நம்மில் நிறைய பேர் வெளிப்புற தோற்றத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால் உண்மையில் அழகு என்பது வெளிப்புறம் மற்றும் உட்புறத்தையும் அழகாக வைப்பது தான்.
உங்கள் வெளிப்புற சருமத்தை அழகாக வைக்க நீங்கள் நிறைய பியூட்டி டிப்ஸ்களை பின்பற்றுவது உண்டு. ஆனால் என்னைக்காவது உங்கள் மனதையும் சந்தோஷமாக வைத்திருக்க முயற்சி செய்து இருக்கிறீர்களா? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். எனவே உங்கள் அகமும் புறமும் இரண்டுமே அழகாக இருக்க வேண்டும்.

எனவே எப்பொழுதும் நீங்கள் உள்ளேயும் வெளியேயும் அழகாக ஜொலிக்க என்ன செய்ய வேண்டும், அதற்கு எந்த மாதிரியான டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
மன அழுத்தத்தை குறையுங்கள்
நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். மனம் அழகாக இருக்கும் போது தானாகவே உங்கள் முகமும் தெளிர்ச்சியாக மாறுகிறது. மேலும் மன அழுத்தம் காரணமாக அழற்சி, இரத்த ஓட்டம் குறைதல், படை நோய், முகப்பருக்கள், ரோசாசியா மற்றும் எடை அதிகரிப்பு போன்ற தொற்றுக்களை சந்திக்க நேரிடும். உங்கள் சருமம் வறண்டு போய் விடக் கூடும். தியானம் மற்றும் யோகா மூலம் உங்கள் மனதை அமைதியாக்குங்கள். உங்கள் மன அழுத்தத்தை குறைக்க சிறிய சிறிய விஷயங்களை நீங்கள் செய்து வரலாம். எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
நல்ல தூக்கம் அவசியம்
அழகாக இருக்க நினைப்பவர்களுக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியம். சரியான தூக்கம் இல்லாவிட்டால் நீங்கள் சோர்வாக உணர்வீர்கள். எனவே உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தூக்கம் என்பது மிகவும் அவசியம். மோசமான தூக்க பழக்கம் மன அழுத்தம், பதட்டம், கருவளையங்கள் மற்றும் மனச்சோர்வுக்கு வழி வகுக்கும். எனவே இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்குங்கள்.
உங்களை நீங்களே காதலியுங்கள்
உங்கள் மனதை ரிலாக்ஸாக வைக்க நேர்மறையான உறுதிமொழியை படியுங்கள். நம்பிக்கையை அதிகரிக்கும் நேர்மறை எண்ணங்கள் உங்கள் மனதை எப்பொழுதும் ரிலாக்ஸாக வைக்க உதவுகிறது. உங்களை யார் காதலிக்கிறார்களோ இல்லையோ முதலில் உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும். உங்கள் மீது சுய அன்பு செலுத்துவது உங்கள் எண்ணங்களை மோலோங்க வைக்கும்.
நீர்ச்சத்துடன் இருங்கள்
சருமம் எப்பொழுதும் இளமையாக இருக்க போதுமான நீர்ச்சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் சருமத்தை எப்பொழுதும் நீரேற்றமாக வைத்திருங்கள்.அடிக்கடி தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ற வகையில் கையில் பாட்டிலை வைத்துக் கொள்ளுங்கள். காஃபைன் மற்றும் சர்க்கரை பானங்களை அதிகளவு எடுப்பதை தவிருங்கள். நல்ல ப்ரஷ்ஷான பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் குடித்து வரலாம். ஒரு நாளைக்கு 7-8 கிளாஸ் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடல் பராமரிப்பு மிகவும் அவசியம்
அழகாக இருக்க நினைப்பவர்கள் தங்கள் உடலையும் பராமரிக்க தவறுவதில்லை. ஒரு நாளைக்கு 10 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் உடல் மெட்டபாலிசம் நன்றாக செயல்படும். தினசரி கொஞ்ச தூரமாவது காலார நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.
ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்
அழகாக இருக்க நினைப்பவர்கள் ஆரோக்கியமாக சாப்பிடுவதும் அவசியம். காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் உடலுக்கு ஆற்றல் தரும் உணவுகளை எடுத்துக் கொண்டு வருவது அவசியம். சரிவிகித உணவு எப்பொழுதும் உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்க உதவுகிறது.
குடல் ஆரோக்கியம்
உங்கள் குடல் ஆரோக்கியம் உங்கள் அழகின் ரகசியம் என்பது உங்களுக்கு தெரியுமா. குடல் ஆரோக்கியம் கெடும் போது நகங்கள், இரத்த ஓட்டம், முடி மற்றும் மன நிலை இப்படி எல்லாமே பாதிக்கப்படுகிறது. குடலில் அதிகப்படியான கெட்ட பாக்டீரியாக்கள் இருந்தால் முகப்பருக்கள், அழற்சி போன்ற தொற்றுக்கள் ஏற்படலாம். எனவே முடிந்த வரை உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். நல்ல புரோபயாடிக் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
எல்லார் மீதும் அன்பாக இருங்கள்
அழகான நபர்கள் எப்பொழுதும் பிறரின் மீது அன்பாக இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தரும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போது நீங்களும் அழகாக தெரிவீர்கள். அதே மாதிரி மற்றவரிடம் இருக்கும் நல்ல விஷயங்களை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள். எந்த வித பாராட்டையும் எதிர்ப்பார்க்காமல் அடுத்தவருக்கு உதவி செய்யுங்கள்.
சரும ஆரோக்கியம் முக்கியம்
உங்கள் வெளித்தோற்றத்தை அழகாக வைப்பதில் சரும ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. முகத்திற்கு பேஸ் மாஸ்க் மற்றும் ரோஸ் வாட்டர் போன்றவற்றை பயன்படுத்துங்கள். உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பாக வையுங்கள். முகத்திற்கு மசாஜ் செய்தல், கூந்தல் பராமரிப்பு, கண் பராமரிப்பு போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருங்கள். உங்கள் அழகு மென்மேலும் மேம்படும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications