Latest Updates
-
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்
ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய 10 விதமான மருத்துவக் கருவிகள்!
Health Tips In Tamil: உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே தான் நாம் ஒவ்வொருவரும் உடல் ஆரோக்கியத்தை கவனமாக பராமரிக்க வேண்டும். இன்றைய தொழில் நுட்ப சூழலில் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்க ஏராளமான மருத்துவக் கருவிகள் வந்து விட்டன.
ஒரு இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு பார்ப்பதாக இருந்தாலும் சரி இனி நீங்கள் மருத்துவமனையை நாடிச் செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டில் இருந்த படியே உங்கள் இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு போன்றவற்றை நீங்கள் எளிதாக பார்த்துக் கொள்ளலாம்.

இந்த மருத்துவ பாதுகாப்பு சாதனங்கள் உங்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுகிறது. திடீரென உயர் இரத்த சர்க்கரை இருந்தால் கூட இந்த கருவியை பயன்படுத்தி அறிந்து கொண்டு உடனே மருத்துவ உதவியை நாட வேண்டும். எனவே இந்த கட்டுரையில் வீட்டில் வைத்திருக்க வேண்டிய 10 மருத்துவ கருவிகளைப் பற்றி நாம் பார்க்க போகிறோம்.
வீட்டில் வைத்திருக்க வேண்டிய 10 விதமான மருத்துவக் கருவிகள்:
இரத்த அழுத்த மானிட்டர்
இந்த இரத்த அழுத்த மானிட்டர் கருவி உங்கள் இரத்த அழுத்தத்தையும் இதயத்தின் ஆரோக்கியத்தையும் கண்காணிக்க உதவுகிறது. இதன் மூலம் உங்கள் இரத்த அழுத்தத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதனை எளிதாக கண்டறிய முடியும்.
தெர்மோ மீட்டர்
தெர்மோ மீட்டர் ஒவ்வொரு வீட்டிலும் முக்கியமாக இருக்க வேண்டிய கருவியாகும். இந்த தெர்மோ மீட்டர் உடல் வெப்பநிலையை துல்லியமாக கண்டறிய உதவுகிறது. காய்ச்சல், நோயை முன்கூட்டியே அறிதல் போன்ற பலவற்றை முன்னரே அறியலாம். டிஜிட்டல் தெர்மோ மீட்டர்களை எளிதாக பயன்படுத்த முடியும். டிஜிட்டல் தெர்மோ மீட்டர் விரைவான முடிவுகளை துல்லியமாக வழங்குகிறது. இந்த தெர்மோ மீட்டர் பெரியவர்கள் முதல் குழந்தைகளுக்கு ஏற்றது.
பல்ஸ் ஆக்ஸிமீட்டர்
இந்த ஆக்ஸிமீட்டர் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் செறிவையும், இதயத் துடிப்பு அளவையும் கண்டறிய உதவுகிறது. சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. ஆக்சிஜன் அளவை முன்னரே கண்டறிந்து சுவாசப் பிரச்சினைகளை போக்க முடியும்.
குளுக்கோ மீட்டர்
குளுக்கோ மீட்டர் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு அத்தியாவசியமான கருவியாகும். இந்த சிறிய சாதனம் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவை எளிதாக அறிய முடியும். இதன் மூலம் இரத்த சர்க்கரையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
நெபுலைசர்
நெபுலைசர் சுவாச பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இது பொதுவாக ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் தடுப்பு, பிற சுவாச நிலைகள் உள்ளவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அவசர காலங்களில் நெபுலைசரை பயன்படுத்தி சிகிச்சை பெறலாம்.
முதலுதவி பெட்டி
உங்களுக்கு விபத்துகள் மற்றும் காயங்கள் போன்ற எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கு இந்த முதலுதவி பெட்டி உதவுகிறது. இந்த முதலுதவி பெட்டியில் பேண்டேஜ்கள், கிருமி நாசினிகள் , வலி நிவாரணிகள், டேப்கள் மற்றும் கையுறைகள் போன்றவைகள் இருக்கும்.
வாக்கர்ஸ் மற்றும் ஊன்றுகோல் கருவிகள்
அறுவை சிகிச்சை மற்றும் காயங்கள் போன்றவற்றில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு வாக்கர்ஸ் மற்றும் ஊன்றுகோல் கருவிகள் உதவுகின்றன. எனவே வாக்கர்ஸ் மற்றும் ஊன்றுகோலை பயன்படுத்தி அவர்களால் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாக நடக்க முடியும்.
மாத்திரைகள் சேமிப்பு பெட்டி
வீட்டில் பலவித மருந்துகள் மற்றும் மாத்திரைகளை நிர்வகிப்பது என்பது சவாலான ஒன்றாக இருக்கும். எனவே வீட்டில் உபயோகிக்கும் மாத்திரைகளை ஒழுங்காக பராமரிக்க வேண்டும். மேலும் டோஸ்களை தவறவிடாமல் எடுத்துக் கொள்ள இந்த மாத்திரை சேமிப்பு பெட்டி உங்களுக்கு உதவியாக இருக்கும்.
உடற்பயிற்சி சாதனங்கள்
நம் ஒட்டுமொத்த உடல் நலத்தையும் பராமரிக்க நாம் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம். எனவே ஃபிட்னஸ் டிராக்கர்கள் அல்லது ஸ்மார்ட் வாட்ச்கள் போன்ற உடற்பயிற்சி சாதனங்களை பயன்படுத்தி வரலாம். இது இதயத்துடிப்பை கண்காணிக்க உதவுகிறது. உங்கள் உடற்பயிற்சி இலக்குகளை அடைய உந்துதலை தருகிறது. இவை உங்களை சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது.
தானியங்கி டிஃபிபிரிலேட்டர்
ஒரு தானியங்கி டிஃபிபிரிலேட்டர் அவசர காலங்களில் உயிரைக் காக்கும் கருவியாகும். இந்த சாதனம் உங்களுக்கு ஏதேனும் மாரடைப்பு ஏற்பட்டால் இதயத்திற்கு மின்சாரத்தை வழங்கி மறுபடியும் இதயம் இயங்க உதவுகிறது. இது இதயத் துடிப்பை மீட்டெடுக்க உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications