Latest Updates
-
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
டாட்டூ போடுவதால் எந்த மாதிரியான பிரச்சினைகள் உண்டாகிறது தெரியுமா?
Health Tips In Tamil: டாட்டூ போடுவது என்பது இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிகுந்த ஃபேஷனாகி வருகிறது. எந்த அளவுக்கு அழகும் பேஷனும் நிறைந்துள்ளதோ அந்த அளவுக்கு ஆபத்தும் இதில் இருக்கத்தான் செய்கிறது என்கிறார்கள் சரும நிபுணர்கள். ஏனெனில் நீங்கள் பச்சை குத்துவதால் பலவித நோய்த் தொற்றுகளுக்கு இன்னலாகக் கூடும்.
அவற்றில் பயன்படுத்தும் மை மற்றும் ஊசி வழியாக பல வித நோய்த்தொற்றுக்கள் ஏற்படலாம் என எச்சரிக்கிறது FDA. டாட்டூ போடுவதால் எந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

FDA (உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) கூறும் கருத்துக்கள்
உணவு மற்றும் மருந்து நிர்வாக வாரியம் டாட்டூ குத்துவது பற்றி நிறைய எச்சரிக்கை அம்சங்களை கூறியுள்ளது. அசுத்தமான மையை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்க்கிருமி அம்சங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டாட்டூ போடுவது என்பது நம்முடைய சருமத்தின் மேல் தோலில் வினாடிக்கு 10 முறை ஊசிகளால் துளையிடுவதை கூறுகிறது.
தோலின் மேற்பரப்பிற்கு கீழே 1.5 முதல் 2 மில்லிமீட்டர் ஆழத்தில் மை வைப்பது அடங்கும். எனவே டாட்டூ போடும் போது அசுத்தமான மையை பயன்படுத்துவதால் தொற்றுக்கள் மற்றும் கடுமையான காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மைகள் தோலினுள் செல்வதால் நோய்க்கிருமிகள் உட்சென்று நம்முடைய இரத்தம் மற்றும் நிணநீர் அமைப்புகள் வழியாக உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளது.
டாட்டூ போடுவதில் FDA கூறும் வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்
டாட்டூ போடுவது பிரபலமடைந்து வருவதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம். 2019 ஆம் ஆண்டு வாக்கெடுப்பின்படி, 30% அமெரிக்கர்கள் குறைந்த பட்சம் ஒரு முறையாவது டாட்டூ குத்தியுள்ளனர். இது 2012 ஆம் ஆண்டில் 21% ஆக இருந்தது.
18-34 வயதுடையவர்களில் நாற்பது சதவீதம் பேரும், 35-54 வயதுடையவர்களில் 36% பேரும் குறைந்தது ஒரு தடவையாவது டாட்டூ போட்டு உள்ளனர். எனவே மக்களுக்கு டாட்டூ போடுவதில் இருக்கும் ஆர்வம் அதை எப்படி பாதுகாப்பாக செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிவதில்லை.
டாட்டூ போடுவதில் இருக்கும் அபாயங்கள்
டாட்டூ போடும் போது நோய்க்கிருமிகள் உள் செல்வதால் சொறி, கொப்புளங்கள், வலிமிகுந்த கொப்புளங்கள் மற்றும் கடுமையான புண்கள் போன்றவை ஏற்படுகிறது. டாட்டூக்கு பயன்படுத்தும் அசுத்தமான மைகளில் காசநோய் அல்லாத மைக்கோபாக்டீரியாக்கள் காணப்படுகிறது. இந்த பாக்டீரியாக்கள் மண்ணிலும் நீரிலும் காணப்படுகிறது. இந்த பாக்டீரியாக்கள் சருமத்தினுள் செல்லும் போது ஏகப்பட்ட சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது.
டாட்டூ போடும் போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
* டாட்டூ மைகளை மிகுந்த பாதுகாப்புடன் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். டாட்டூ மைகளை தயாரிக்கும் மற்றும் பேக்கிங் செய்யும் விதங்கள் தரமானதாக இருக்க வேண்டும்.
* டாட்டூ போடும் போது பயன்படுத்தப்படும் மையை அப்படியே திறந்த வெளியில் வைக்க கூடாது. மையை மூடி வைக்க வேண்டும். இதனாலும் தொற்றுக்கள் உண்டாக வாய்ப்புள்ளது.
* டாட்டூ மை தயாரிக்க பயன்படுத்தும் பாத்திரங்கள் மற்றும் அதை கிளற பயன்படுத்தும் கரண்டிகள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.
* டாட்டூ போடுபவர் பொருத்தமான உடைகள், கையுறைகள், மாஸ்க்களை அணிந்து இருக்க வேண்டும்.
தொற்றுக்கள் அபாயம்
* நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் தோலில் ஊடுருவி பெரிய சிவப்பு கொப்புளங்கள், கட்டிகள், மெல்லிய சீரற்ற கோடுகளை உருவாக்கும்.
* மே 2019 ஆம் ஆண்டு படி, நுண்ணுயிர்களால் அசுத்தமான டாட்டூ மைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நுகர்வோர் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு இது குறித்து FDA பாதுகாப்பு எச்சரிக்கை வழங்கியுள்ளது.
* புகழ்பெற்ற மை உற்பத்தியாளர்கள் காமா கதிர்வீச்சு எனப்படும் செயல்முறையை பயன்படுத்துகின்றனர். இந்த கதிர்வீச்சு முறை நுண்ணுயிர்களைக் கொல்ல உதவுகிறது.
* கடந்த ஆண்டுகளில், ஹெபடைடிஸ் மற்றும் எச்.ஐ.வி பரவும் அசுத்த ஊசிகள் டாட்டூ போடுவதில் அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அந்த மாதிரியான பிரச்சினைகள் இப்போது இருப்பதில்லை என்று அவர் கூறியுள்ளார். டாட்டூவை அழிக்க அறுவை சிகிச்சை முறை தேவைப்படுகிறது. ஆனால் அறுவை சிகிச்சை வடுவுடன் நீங்கள் நீண்ட காலம் இருக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
எனவே டாட்டூ போடுவதற்கு முன்பு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஈடுபடுவது நல்லது என்கிறது FDA ஆய்வறிக்கை.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications