Latest Updates
-
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்!
ரெட் லைட் தெரபி என்றால் என்ன? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
Health Tips In Tamil: ரெட் லைட் தெரபி அல்லது சிவப்பு ஒளி சிகிச்சை முறை என்பது சரும அழகை மேம்படுத்த உதவுகிறது. இது குறைந்த அளவிலான லேசர் சிகிச்சை முறை என்று அழைக்கப்படுகிறது. இது உடல் வலியை குறைக்கவும், உடலில் செல்லுலார் செயல்பாட்டை மேம்படுத்தும் LED லேசர் அம்சங்கள் இதில் காணப்படுகிறது.
இந்த குறைந்த அளவிலான லேசர் சிகிச்சை முறை உங்கள் சருமத்திற்கு எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்காது. ஆர்த்ரிட்ஸ் போன்ற மூட்டு வலி பிரச்சினைகள், இரத்த ஓட்ட அதிகரிப்பு, காயங்களை ஆற்றுதல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், தைராய்டு ஹார்மோன்களை சமநிலையில் வைத்தல் போன்ற பலவித நன்மைகளை இந்த சிவப்பு ஒளி சிகிச்சை முறை உங்களுக்கு வழங்குகிறது.

சிவப்பு ஒளி லேசர் சிகிச்சை முறையின் நன்மைகள்:
முடக்கு வாதம் மற்றும் மூட்டு விறைப்பு பிரச்சினைகள்
சிவப்பு ஒளி சிகிச்சையானது உங்களுக்கு ஏற்படும் முடக்கு வாதம் மற்றும் மூட்டு விறைப்பு பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. இந்த சிவப்பு ஒளி லேசர் சிகிச்சையானது மூட்டுகளை சூடாக்கி மூட்டுகளில் ஏற்படும் விறைப்பை தடுக்க உதவுகிறது.
இதன் மூலம் 20 % மூட்டுகளின் இயக்கத்தை மேம்படுத்த முடியும். இதன் மூலம் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த முடியும். இதன் மூலம் குருத்தெலும்புகளை மீண்டும் உருவாக்கலாம். மூட்டுகளில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் வயதான காலங்களில் ஏற்படும் தேய்மானம், கழுத்து மற்றும் முதுகுவலி போன்ற விஷயங்களை சரி செய்ய உதவுகிறது.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல்
சிவப்பு ஒளி லேசர் சிகிச்சை மூலம் ஏற்படும் வெப்பம் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வாஸ்குலார் கோளாறுகளில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், சரும ஆரோக்கியம், நரம்பியல் ஆரோக்கியம், செரிமானம் போன்ற விஷயங்கள் நன்றாக நடைபெற உதவுகிறது.
சருமம் இளமையாக இருக்க உதவுகிறது
சிவப்பு ஒளி லேசர் சிகிச்சை மூலம் உங்கள் சரும சுருக்கங்கள், வயதாகுதல் போன்ற பிரச்சினைகளை சரி செய்ய முடியும். சரும வடுக்கள், காயங்கள், அலோபீசியா முடி உதிர்தல், கடுமையான முகப்பருக்கள், ரோசாசியா மற்றும் சரும பிரச்சனைகள் போன்றவற்றை போக்க உதவுகிறது.
சிவப்பு ஒளி லேசர் சிகிச்சை மூலம் கொலாஜனை அதிகரிக்க முடியும். கூந்தல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சரும சுருக்கங்கள் மற்றும் சரும கோடுகளை போக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
சிவப்பு ஒளி லேசர் சிகிச்சை என்பது நம் உடலில் உள்ள செல்களை திறம்பட செயல்படுத்த உதவுகிறது. இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. குளுக்கோஸை ஆற்றலாக மாற்றி திறனை அதிகரிக்கிறது. எடை இழப்புக்கான ஆற்றலை திறம்பட எரிக்க உதவுகிறது. எனவே சீக்கிரமே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த சிவப்பு ஒளி லேசர் சிகிச்சையை பயன்படுத்தி வரலாம்.
மனநிலை மேம்படுதல்
இந்த சிவப்பு ஒளி லேசர் சிகிச்சையானது மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. செல்களில் ஆற்றலை தூண்டவும், உடல் முழுவதும் எதிர்வினையால் வெப்பமடைவதை தடுக்கவும் உதவுகிறது. இது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. நேர்மறை எண்ணங்கள், மன அமைதி மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. எனவே கவலை மற்றும் மனச்சோர்வு இருப்பவர்கள் இந்த சிவப்பு ஒளி லேசர் சிகிச்சையை மேற்கொண்டு வரலாம்.
வலியை குறைக்கிறது
சிவப்பு ஒளி லேசர் சிகிச்சை மூலம் வலியை குறைக்க முடியும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மூட்டு விறைப்பு, வீக்கம், தசைப் பிரச்சினைகளை போக்க உதவுகிறது. எனவே வலி இருப்பவர்கள் இந்த சிவப்பு ஒளி லேசர் சிகிச்சையை மேற்கொண்டு வரலாம்.
காயங்களை ஆற்ற உதவுகிறது
சிவப்பு ஒளி லேசர் சிகிச்சை மூலம் விரைவாக காயங்களை ஆற்ற முடியும். இது உடல் வெள்ளை அணுக்களை தூண்டி வேகமாக காயங்களை ஆற்ற உதவுகிறது. நீணநீர் மண்டல கழிவுப் பொருட்களை சேகரித்து வெளியேற்றுகிறது. காயங்களில் தொற்று நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. இது தோலில் ஏற்படும் வடுவை போக்க உதவுகிறது. தீக்காயங்களை உடனே ஆற்றுகிறது. வாயைச் சுற்றி ஏற்படும் வாய் புண்கள் மற்றும் குளிர் புண்களை சமாளிக்க பல் மருத்துவர்கள் இந்த சிவப்பு ஒளி லேசர் சிகிச்சையை பயன்படுத்தி வருகின்றனர்.
நல்ல தூக்கத்தை தர உதவுகிறது
சிவப்பு ஒளி லேசர் சிகிச்சை மூலம் நீங்கள் நல்ல தூக்கத்தை பெற முடியும். இது உடலில் இயற்கையாக மெலடோனின் ஹார்மோன் வெளியீட்டை அதிகரிக்கிறது. இதன் மூலம் நீங்கள் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications