Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
Google Year In Search 2023: மலச்சிக்கலைப் போக்க 2023-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகள்!
Google Year In Search 2023: மலச்சிக்கல் என்பது ஒரு பொதுவான செரிமான பிரச்சனையாகும். இப்பிரச்சனையால் உலகில் ஏராளமானோர் தினந்தோறும் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒருவருக்கு மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணம் போதுமான அளவில் நீர் அருந்தாமல் இருப்பதும், நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பதும், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் தான். மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் இந்த மூன்றையும் சரிசெய்தால், அப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இன்றைய காலத்தில் உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை சரிசெய்வதற்கான வழிகளை முதலில் கூகுளில் தான் தேடுகிறோம். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட மக்கள் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதையும் கூகுளில் தேடியுள்ளனர். கீழே 2023 ஆம் ஆண்டில் மலச்சிக்கலுக்காக கூகுளில் அதிகம் தேடப்பட்ட சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

1. அதிக நார்ச்சத்துள்ள உணவுகள்
2023-ல் மலச்சிக்கலுக்காக அதிகம் தேடப்பட்ட உணவு தான் நார்ச்சத்துள்ள உணவு. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், அது குடலியக்கத்தை ஊக்குவித்து, குடலில் சேரும் அதிகப்படியான கழிவுகளை எளிதில் நகரச் செய்து, சிரமமின்றி வெளியேற வழிவகை செய்யும்.
2. சிட்ரஸ் பழங்கள்
மலச்சிக்கலில் நிவாரணம் பெற கூகுளில் தேடிய போது கூகுள் பரிந்துரைத்த மற்றொரு உணவுப் பொருள் தான் சிட்ரஸ் பழங்கள். சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் இருப்பதைத் தவிர, கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் பெக்டின் வடிவிலும் உள்ளன. இந்த கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் ஒரு மலமிளக்கியாக செயல்பட்டு, குடலில் மலம் அதிகம் தேங்கவிடாமல் தடுப்பதோடு, எளிதில் செரிமான பாதை வழியாக நகர்ந்து செல்லவும் உதவுகின்றன. எனவே மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஆரஞ்சு, கிரேப்ஃபுரூட், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது நல்லது. இந்த பழங்கள் மலச்சிக்கலைத் தடுப்பதோடு, செரிமானத்தை மேம்படுத்துகின்றன.
3. சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள்
2023-ல் மலச்சிக்கலுக்கு தேடப்பட்ட மற்றொரு உணவு தான் சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள். இவ்விரு விதைகளும் கரையக்கூடிய மற்றும் கரையாத சத்துக்களை அதிகம் கொண்டவை. இந்த விதைகளை உட்கொள்வதன் மூலம், செரிமான மண்டலத்தின் செயல்பாடு தூண்டப்பட்டு, குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
4. அத்திப்பழம்
அத்திப்பழம் நார்ச்சத்தை அதிகம் கொண்ட மற்றொரு பாம். இந்த பழத்தை உட்கொள்வதன் மூலம், மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் இது இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்துகிறது. சொல்லப்போனால் வயிறு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு இப்பழம் ஒரு தீர்வாகும். இந்த அத்திப்பழத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் உட்கொள்ள வேண்டும்.
5. பச்சை இலை காய்கறிகள்
கீரைகள், காலிஃப்ளவர், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளன. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் இந்த வகை காய்கறிகளை உட்கொண்டு வந்தால், அது குடலில் சேரும் கழிவுகளை எளிதில் செரிமான பாதையில் பயணித்து சிரமமின்றி வெளியேற்ற உதவி புரியும்.
6. ஆப்பிள் மற்றும் பேரிக்காய்
ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றில் நீர்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளன. இந்த பழங்களை உட்கொண்டு வந்தால், அவை செரிமான செயல்பாட்டை ஊக்குவித்து, மலச்சிக்கலைத் தடுக்கும். அதுவும் இவ்விரு பழங்களையும் தோலுடன் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் அவற்றின் தோலில் தான் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. முக்கியமாக இந்த பழங்களில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இவை சீரான குடலியக்கத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











