Latest Updates
-
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும்
7 நாட்களில் உங்கள் சருமம் அழகாக ஜொலிக்கனுமா? இந்த 5 சூப்பர் உணவுகளை சாப்பிடுங்கள்..!
உங்கள் சருமம் வறட்சியாக உள்ளதா? அது பார்பதற்கு உயிரற்றதாகத் தெரிகிறதா? அப்படியானால் இளமையிலேயே முதுமைக்கான அறிகுறிகள் தோன்றும். எத்தனையோ சருமப் பராமரிப்புப் பொருட்களை வெளிப்புறமாகப் பயன்படுத்தினாலும், உடல் உள்ளிருந்து சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்காது. சருமத்தில் கொலாஜன் அளவு குறைவாக இருந்தால், உங்கள் சருமம் நாளுக்கு நாள் தொய்வடைந்து கொண்டே இருக்கும்.
ஆனால் இதற்கு மிக எளிமையான தீர்வு உள்ளது. இதற்கு சில இயற்கை உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று நாம் அத்தகைய உணவுகளைப் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

இவை சருமத்திற்கு மிகவும் ஆரோக்கியமானவை. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், பளபளப்பான, பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். இந்த உணவுகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், லைகோபீன், வைட்டமின் ஈ போன்றவை இருப்பதால் உங்கள் அழகை மேம்படுத்துகிறது.
லைகோபீன் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்
ஊட்டச்சத்து நிபுணர் லவ்நீத் பாத்ராவின் கூற்றுப்படி, ஆரோக்கியமான மற்றும் ஜொலிக்கும் சருமத்தைப் பெற, நீங்கள் லைகோபீன் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது சருமத்திற்கு உடலின் பாதுகாப்பாளராக செயல்படுகிறது. லைகோபீனுக்கு தக்காளி, தர்பூசணி மற்றும் பப்பாளியை அதிகம் சாப்பிடுங்கள். லைகோபீன் வெயிலின் தாக்கத்தை 40 சதவீதம் குறைக்கிறது. இது வயதான தோற்றதத்தை மாற்றி அதற்கு எதிர்ப்பு முகவராக செயல்படுகிறது.
ஐசோஃப்ளேவோன்கள் முன்கூட்டிய வயதைத் தடுக்கின்றன
இது ஒரு தாவர ஈஸ்ட்ரோஜன் ஆகும். இது நமது சருமத்தை பல வழிகளில் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இதற்கு சோயா பால், டோஃபு மற்றும் கீரை சாப்பிடுவது அவசியம். மருத்துவ ஆய்வுகளின்படி, ஐசோஃப்ளேவோன் தோல் தடிமன் அதிகரிக்கிறது. முகத்தில் கோடுகள் போன்ற பிரச்சனைகளை படிப்படியாக நீக்குகிறது.
வைட்டமின் சி சருமத்தின் தொனியை மேம்படுத்துகிறது
வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், சருமத்தை ஆரோக்கியமாகவும் வைக்கிறது. இது சருமத்திற்கு பளபளப்பான மற்றும் நல்ல நிறமான நிறத்தை அளிக்கிறது. ஆம்லா என்பது வைட்டமின் சியின் ஆற்றல் மையமாகும். மேலும் உணவில் கொய்யா, பச்சை மற்றும் சிவப்பு கேப்சிகத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின் சி நிறைந்த இந்த உணவை தினசரி உட்கொள்வது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த பொருட்கள் அனைத்தும் சருமத்தின் நெகிழ்ச்சி மற்றும் வலிமையை அதிகரிக்கின்றன.
ஒமேகா-3 நிறைந்த உணவு
கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்கின்றன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உண்பதால் சருமம் மிருதுவாகவும், தெளிவாகவும் இருக்கும். இதற்கு தினமும் ஆளி விதைகள், அக்ரூட் பருப்புகள், சியா விதைகள் சாப்பிடலாம். ஒமேகா-3 முகப்பரு மற்றும் தோல் சிவப்பை சுமார் 42 சதவீதம் குறைக்கிறது.
வைட்டமின் ஈ முக்கியமானது
வைட்டமின் ஈ சருமத்திற்கு மிகவும் முக்கியமானது. இது சருமத்தைப் பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றியாகும், இது நீரேற்றமாக வைக்கிறது.. இதற்கு சூரியகாந்தி விதைகள், பாதாம், கீரை போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் ஈ கொண்ட காப்ஸ்யூல் எண்ணெயை முகத்தில் தடவுவது புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. வைட்டமின் ஈ கொண்ட உணவுகளை நீங்கள் சாப்பிடும்போது, அவை சருமத்தை உள்ளிருந்து ஈரப்பதமாக்குகின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
