Latest Updates
-
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
பாகற்காய் சாப்பிடும்போது இந்த பொருட்களை தெரியாமகூட சாப்பிட்ராதீங்க... இல்லனா ரொம்ப ஆபத்தாயிடும்...!
மக்களால் மிகவும் குறைவாக நுகரப்படும் ஆரோக்கியமான காய் என்றால் அது பாகற்காய்தான். பாகற்காய் ஒரு ஆரோக்கியமான காய்கறி என்பதில் துளியும் சந்தேகமில்லை. பாகற்காய் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.
பாகற்காய் கசப்பான சுவை கொண்டதாக இருந்தாலும் அதை உட்கொள்வதால் பல நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும். அதேசமயம், பாகற்காய் சாப்பிடுவது வயிறு தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து உங்களை காப்பாற்றுகிறது.

பாகற்காய் என்னதான் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும்போது அது ஆபத்தான பொருளாக மாறும். பாகற்காயுடன் இந்த பொருட்களை சாப்பிடுவதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பாகற்காயுடன் அல்லது சாப்பிட்ட பிறகு என்னென்ன பொருட்களை சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பால்
பாகற்காய் சாப்பிடும் போது அல்லது சாப்பிட்ட பிறகு, ஒருபோதும் பால் குடிக்கக் கூடாது. இது உங்களுக்கு வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கும். பாகற்காய் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பதால் மலச்சிக்கல், வலி மற்றும் வயிற்றில் எரியும் உணர்வு போன்றவை ஏற்படும். உங்களுக்கு ஏற்கனவே வயிறு தொடர்பான பிரச்சனை இருந்தால், அந்த பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.
முள்ளங்கி
பாகற்காய் சாப்பிடும்போது முள்ளங்கி அல்லது முள்ளங்கியில் செய்யப்பட்ட பொருட்களை உட்கொள்ளக்கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் உடல் தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஏனெனில் முள்ளங்கி மற்றும் பாகற்காயின் தாக்கம் வித்தியாசமானது இருக்கிறது. இதன் காரணமாக உங்கள் தொண்டையில் அமிலத்தன்மை மற்றும் சளி போன்ற பிரச்சினை ஏற்படலாம். எனவே, பாகற்காய் சாப்பிடும்போது முள்ளங்கியைத் தவிர்க்க வேண்டும்.
தயிர்
உணவுடன் தயிர் சேர்த்து சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். ஆனால் பாகற்காய் சேர்க்கப்பட்ட உணவை சாப்பிடும்போது தயிரை உட்கொண்டால், நீங்கள் பல வயிறு உபாதைகளை ஏற்படுத்தும்.
மாம்பழம்
கோடைகாலம் என்றாலே மாம்பழம் சாப்பிட அனைவரும் விரும்புவார்கள, ஆனால் பாகற்காயுடன் மாம்பழத்தை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். இதன் காரணமாக நீங்கள் அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற செரிமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
வெண்டைக்காய்
பாகற்காயைப் போலவே வெண்டைக்காயும் ஆரோக்கியமான காய் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை தனித்தனியாக சாப்பிடும் போது மட்டுமே. இந்த இரண்டு காய்கறிகளையும் ஒன்றாக சாப்பிடுவது பல வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


