Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த உணவுகளை அதிகம் சாப்பிடாதீங்க... இல்லனா குள்ளமா மாறிடுவீங்க... அப்புறம் உங்க இஷ்டம்...!
நமது உயரம் என்பது பல்வேறு மரபணுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் மட்டுமே பாதிப்படைகிறது என்று நினைத்துக் கொண்டு இருந்தோம். ஆனால் உண்மையில் நாம் உண்ணும் உணவினால் கூட நம் உயரம் பாதிப்படைகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
நம் உயரத்தை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. நாம் உட்கொள்ளும் உணவு பல உடல் அமைப்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. நம்முடைய எடை மற்றும் உயர வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் முக்கியம்.

ஏனெனில் உணவுகள் நம்முடைய தோற்றம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் இரண்டையும் பாதிக்கிறது. நம்முடைய உயரத்தில் மரபணுக்கள் இன்றியமையாததாக இருந்தாலும் உணவுகள் மிகவும் முக்கியமானது.
எனவே நீங்கள் எடுத்துக் கொள்ளும் எந்த மாதிரியான உணவுகள் உங்கள் உயரத்தில் பாதிப்பை உண்டாக்கும் என்பது பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
எந்த மாதிரியான உணவுகள் உங்களை குட்டையாக காட்டும்
சில உணவுகளை உட்கொள்வது ஒரு நபரின் வளர்ச்சியை தடுக்க வாய்ப்பு உள்ளது. ஆராய்ச்சியின் படி, பரம்பரை, ஹார்மோன்கள் மற்றும் பாலினம் ஆகிய முக்கியமான காரணிகள் உயரத்தை பாதிக்கிறது. இருப்பினும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் உங்கள் வளர்ச்சியை பாதிக்க வாய்ப்புள்ளது.
சோயா
குழந்தைகள் பசும்பால் குடிக்காமல் அரிசி, பாதாம் மற்றும் சோயா மில்க் போன்றவற்றை குடித்து வந்தால் உயரம் குறைவாக தெரிவார்கள் என்று ஆய்வு கூறுகிறது. ஏனெனில் சோயா நுகர்வு என்பது கால்சியத்தை செயலாக்குவதில் இருந்து உடலை தடுக்கிறது. இது உங்கள் உயர வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கிறது.
டோஃபு, தயிர் மற்றும் சோயாமில்க் போன்ற சோயா பொருட்களில் காணப்படும் பைடிக் அமிலத்தால் வளர்ச்சி குன்றிய நிலை ஏற்படலாம். எலும்பு உருவாகுவதற்கு அதிகமாக கால்சியம் தேவைப்படுவதால் உடல் வளர்ச்சி பாதிப்படைகிறது.
அரிசி
அரிசி ஒரு பிரதான உணவு என்றால் கூட அரிசியை அதிகமாக எடுப்பது நம்முடைய உயரத்தை பாதிக்கிறது. அதிகப்படியான அரிசி நுகர்வு அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதற்கு வழி வகுக்கும்.
இதனால் புரதம் மற்றும் வைட்டமின்கள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடலாம். எனவே சரிவிகித அளவில் ஊட்டச்சத்துக்களை எடுத்து வருவது உங்கள் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.
ஜங்க் ஃபுட்
ஜங்க் ஃபுட் உணவுகள் நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்குகிறது. இந்த ஜங்க் ஃபுட் உணவுகள் உங்கள் வளர்ச்சியை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற உணவுகள் உங்கள் உயர வளர்ச்சியை பாதிக்கும். பிரஞ்சு ப்ரை போன்ற உணவுகளும் அதிக உடல் எடை மற்றும் குறைந்த உயர வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. குறைவான எலும்பு வளர்ச்சியை பெறுவதால் நீங்கள் குட்டையாக தெரிவீர்கள்.
சோடா
சோடா போன்ற பானங்கள் உங்கள் உயரத்தை அதிகளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் சோடாவில் பாஸ்பரஸ் அதிகளவில் காணப்படுகிறது. ஆய்வின் படி, பாஸ்பரஸ் உருவாக்கம் எலும்பு அடர்த்தியை தடுக்கிறது.
இது உயர வளர்ச்சியை பாதிக்கிறது. சோடாவை அதிகளவில் எடுத்துக் கொள்பவர்கள் அதிகப்படியான கலோரியை எடுத்துக் கொள்கிறார்கள். சோடாவில் ஊட்டச்சத்துக்கள் என்பது மிக மிக குறைவு.
மக்காச்சோளம்
மக்காச்சோளம் அஃப்லாடாக்சின்களை உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. இது இளம் வயதிலேயே உங்கள் வளர்ச்சியை தடுக்க வாய்ப்பு உள்ளது. மக்காச்சோளத்தை பொருத்தமற்ற முறையில் வளர்க்கும் போது அஃப்லாடாக்சின்கள் உருவாகிறது.
வேர்க்கடலை, கோதுமை, மிளகாய் மற்றும் மரக் கொட்டைகளிலும் இந்த அச்சுகள் காணப்படுகின்றன. இதனால் உடல் வளர்ச்சி பாதிப்படைகிறது. எனவே மக்காச்சோளம் போன்றவற்றை பாதுகாப்பான முறையில் எடுத்துக் கொள்வது அவசியம்.
ஐஸ்கிரீம் மற்றும் சர்க்கரை உணவுகள்
நிறைய ஐஸ்கிரீம்கள், பேஸ்ட்ரிகள் போன்ற சர்க்கரை மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. அதிக சர்க்கரை உணவுகளை சாப்பிடும் குழந்தைகள் உயரம் குறைவானவர்களாக தெரிகின்றனர். எனவே அதிகப்படியான இனிப்புகளை எடுத்துக் கொள்வதை தவிருங்கள்.
ஆல்கஹால்
ஆல்கஹால் எடுத்துக் கொள்வது உங்கள் உடல் வளர்ச்சியை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே வளரும் குழந்தைகள் ஆல்கஹாலில் இருந்து விலகி இருப்பது நல்லது. ஆல்கஹால் உட்கொள்வது பெரியவர்களையும் பாதிக்கிறது. ஏனெனில் அது அவர்களின் உடல் வளர்ச்சியை பெரிய அளவில் பாதிக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












