Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆண்களே! உங்க விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்கணுமா? அதுக்கு இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த தேவையான சத்துக்கள் மற்றும் அச்சத்துக்கள் உள்ளடங்கிய உணவுகள் எவையென்பதைக் காண்போம்.
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான திருமணமான தம்பதிகள் குழந்தை பெற்றெடுப்பதில் சிரமத்தை சந்திக்கிறார்கள். இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது நவீன உணவுப் பழக்கங்களும், வாழ்க்கை முறையும் தான். எப்படி உடல் மற்றும் உடலுறுப்புக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு சத்துக்கள் இன்றியமையாததோ, அதேப் போல் குழந்தையைப் பெற்றெடுக்க ஆண்களின் விந்தணுக்கள் ஆரோக்கியமாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

பல ஆண்களுக்கு விந்தணுக்கள் போதுமான தரத்துடன் இல்லாததால், தங்களின் துணைக்கு குழந்தையைப் பெற்றெடுக்க உதவ முடிவதில்லை. அதற்காக வருத்தம் கொள்ள வேண்டாம். விந்தணுக்களின் எண்ணிக்கையையும், தரத்தையும், அதன் இயக்கத்தையும் அதிகரிக்க தேவையான சத்துக்கள் உள்ளடங்கிய உணவுகளை உட்கொண்டு வந்தாலே, நாளடைவில் விந்தணுக்கள் ஆரோக்கியமானதாகவும், தரமானதாகவும் மாறும். இப்போது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த தேவையான சத்துக்கள் மற்றும் அச்சத்துக்கள் உள்ளடங்கிய உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

ஃபோலேட்
விந்தணுக்களின் ஆரோக்கியத்துடன் ஃபோலேட் இணைக்கப்பட்டுள்ளது. உடலில் ஃபோலேட் குறைவான அளவில் இருந்தால், அது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைப்பதோடு, அதன் தரத்தையும் குறைக்கும். இந்த ஃபோலேட் நிறைந்த உணவுகள் பின்வருமாறு:
* ஆரஞ்சு பழங்கள்
* லெட்யூஸ், பசலைக்கீரை போன்ற பச்சை இலை காய்கறிகள்
* பட்டாணி, பீன்ஸ் மற்றும் நட்ஸ்
* முழு தானியங்கள்

ஜிங்க்
விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பராமரிக்க ஜிங்க் உதவுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் மலட்டுத்தன்மையை சந்திக்கும் ஆண்களின் உடலில் ஜிங்க் குறைபாடு காணப்படுகிறது. எனவே இதை சரிசெய்ய ஜிங்க் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். அந்த ஜிங்க் சத்து நிறைந்த உணவுகள் பின்வருமாறு:
* மாட்டிறைச்சி மற்றும் சிக்கன்
* கடல் சிப்பி
* நண்டு
* பால் பொருட்கள்
* பீன்ஸ் மற்றும் நட்ஸ்

வைட்டமின் சி
வைட்டமின் சி ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இது ஆண்களின் கருவளத்தை மேம்படுத்த உதவுகிறது. வைட்டமின் சி சத்தானது விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணுக்களின் அமைப்பு மற்றும் இயக்கத்தை மேம்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது. இந்த வைட்டமின் சி நிறைந்த உணவுகள் பின்வருமாறு:
* குடைமிளகாய்
* கிவி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள்
* சிட்ரஸ் பழங்கள்
* ப்ராக்கோலி, தக்காளி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள்

வைட்டமின் பி12
வைட்டமின் பி12 ஒட்டுமொத்த விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாத ஒரு சத்தாக கருதப்படுகிறது. மேலும் இது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை மேம்படுத்த உதவுவதோடு, டிஎன்ஏ சேதத்தைக் குறைக்கிறது. இந்த வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள் பின்வருமாறு:
* ஈரல்
* கடல் உணவு மற்றும் மீன்
* பால் பொருட்கள்
* ஈஸ்ட்டுகள்

வைட்டமின் டி
வைட்டமின் டி சப்ளிமெண்ட்டுகள் விந்தணுக்களின் இயக்கத்தையும், டெஸ்டோஸ்டிரோன் அளவுகளையும் அதிகரிக்க உதவுகிறது. இருப்பினும், இதுக்குறித்த ஆராய்ச்சி இன்னும் தேவைப்டுகிறது. இந்த வைட்டமின் டி நிறைந்த உணவுகள் பின்வருமாறு:
* மாட்டு ஈரல்
* டூனா, சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்கள்
* சீஸ்
* முட்டை மஞ்சள் கரு
* பால் பொருட்கள்
* காளான்

வைட்டமின் ஈ
வைட்டமின் ஈ விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளைக் கொண்டுள்ளது. மேலும் இதன் பண்புகள் விந்தணு சேதமடைவதில் இருந்து பாதுகாக்கிறது. இந்த வைட்டமின் ஈ அதிகம் நிறைந்த உணவுகள் பின்வருமாறு:
* விதைகள் மற்றும் நட்ஸ்
* சூரிய காந்தி எண்ணெய், சோள எண்ணெய், சோயா பீன் எண்ணெய்
* வலுவூட்டப்பட்ட ஜூஸ்கள்
* பசலைக்கீரை மற்றும் ப்ராக்கோலி போன்ற காய்கறிகள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் விந்தணுக்களின் அமைப்பு, இயக்கம் மற்றும் எண்ணிக்கை போன்ற பலவற்றிற்கு நன்மை அளிக்கிறது. இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் பின்வருமாறு:
* கானாங்கெளுத்தி, சூரை, சால்மன் மற்றும் மத்தி போன்ற மீன்கள்
* வால்நட்ஸ், சியா விதைகள, ஆளி விதைகள்
* வலுவூட்டப்பட்ட யோகர்ட், முட்டைகள்
* கனோலா எண்ணெய், ஆளிவிதை எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய்



Click it and Unblock the Notifications